Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”பவுலிங் பிட்சுகள் வேண்டும்” : கூறுவது மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (18:26 IST)
பிட்சுகள் மாற வேண்டும். பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆட்டக்களங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து கூறியுள்ள சச்சின் டெண்டுல்கர், ”வீரர்களுக்கு போட்டியை விட்டுக் கொடுக்காத மனோநிலை வேண்டும். கடினமான தருணங்களில் நாம் நம் சொந்தக் காலில் நிற்பது குறித்த விஷயமாகும் இது. இதைத்தான் அனில் கும்ப்ளே அணியினருக்கு கற்றுக் கொடுப்பார் என்று நான் கருதுகிறேன்.
 
ஒவ்வொரு போட்டியிலும் மீள முடியா கடினமான தருணங்கள் ஏற் படும். அந்தத் தருணங்களை அணுகுவது எப்படி என்பது முக்கியமானதாகும். ஒவ்வொரு தருணத்தையும் வெல்வதற்கு தற்போது அனில் கும்ப்ளே இருக்கிறார்.
 
அனில் கும்ப்ளேயுடனான எனது அனுபவம் அபாரமானது. அவர் போட்டிகளை வெல்லக்கூடிய திறமை கொண்டவர், அவரிடமிருந்து வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அவரும் தான் கற்றுக் கொண்ட அனைத்தையும் பகிர்ந்து கொள்ள விருப்பமானவரே. 20 ஆண்டுகள் ஆடியுள்ளார், எனவே பகிர நிறைய விஷயங்கள் அவரிடம் உள்ளன.
 
பவுலிங் ஆதரவு பிட்சுகள்:
 
பிட்சுகள் மாற வேண்டும். பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆட்டக்களங்கள் அமைக்கப்பட வேண்டும். டி20-யில் மிகச்சிறந்த பவுலர்களையெல்லாம் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடிவிடுகின்றனர். ஒருநாள் போட்டிகளில் 300 ரன்கள் என்பது வெற்றி பெற போதுமானதாக இல்லை.
 
எனவே ஒரு வடிவத்திலாவது பவுலர்கள் கை ஓங்கியிருக்க வேண்டும். பார்வையாளர்களுக்கு அப்போதுதான் ஆட்டத்தின் மீது ஈர்ப்பு ஏற்படும். 5 நாட்கள் உட்கார்ந்து பார்க்க வேண்டுமே.
 
எனவே பிட்சுகளில் மாற்றங்கள் தேவை. ரன் குவிப்பு மட்டையின் அளவு குறித்ததல்ல. ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் முடிவெடுப்பார்கள். இதைத்தான் டேவிட் வார்னரும் கூறியுள்ளார் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments