Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 18 April 2025
webdunia

300க்கும் மேல் ரன்களை குவித்த இந்தியா: பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து?

Advertiesment
இங்கிலாது
, செவ்வாய், 23 மார்ச் 2021 (17:44 IST)
300க்கும் மேல் ரன்களை குவித்த இந்தியா:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது புனேவில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ரன்களை குவித்து அசத்தியுள்ளது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து இந்திய அணி களத்தில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான தவான் 98 ரன்கள் அடித்து 2 ரன்களில் சதத்தை மிஸ் செய்தார். அதன் பின்னர் கேப்டன் விராத் கோலி 56 ரன்கள் அடித்தார்.
 
அதன் பின்னர் களத்தில் இறங்கிய கேஎல் ராகுல் மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினார். இதனையடுத்து இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பென் ஸ்டோக்ஸ் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளையும் மார்க்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் 
 
318 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது. இந்த இமாலய இலக்கை அந்த அணி எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 ரன்னில் சதத்தை மிஸ் செய்த தவான்!