Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய விளையாட்டுப் போட்டி - தங்கம் வென்ற மல்யுத்த வீரருக்கு 3 கோடி பரிசு

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (12:36 IST)
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு ஹரியானா மாநில அரசு 3 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.
18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் செப்டம்பர் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தியா சார்பில் 312 வீரர்களும், 257 வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். 
 
இந்நிலையில் 65 கிலோ எடை பிரிவினருக்கான மல்யுத்த இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஜப்பானைச் சேர்ந்த தைசி டகாடனியை எதிர்கொண்டார். கடுமையாக முயற்சி செய்து பஜ்ரங் ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.  ஆசியக் கோப்பையில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
 
அவரை ஊக்குவிக்க பஜ்ரங் புனியாவுக்கு அரியானா மாநில அரசு 3 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனில் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி… முதல் அரைசதத்தைப் பதிவு செய்த கருண் நாயர்!

ஓவல் டெஸ்ட்: இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்… முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!

ஓவல் டெஸ்ட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் பும்ரா இல்லை..!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments