Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 10 January 2025
webdunia

கிறிஸ் வோக்ஸ் சதத்தால் அசைக்க முடியாத நிலையில் இங்கிலாந்து

Advertiesment
கிறிஸ் வோக்ஸ் சதத்தால் அசைக்க முடியாத நிலையில் இங்கிலாந்து
, ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (15:12 IST)
ஜானி பேர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இங்கிலாந்து அணி அசைக்க முடிக்காத நிலைக்கு கொண்டு சென்றனர்.


இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது நாள் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து அணி. முகமது ஷமி மூன்று விக்கெட்டுகள் கைப்பற்ற இங்கிலாந்து அணி கட்டுக்குள் வந்தது. ஆனால் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் இருவரும் இணைந்து இந்திய அணி பந்துவீச்சாளர்களை திணறவிட்டனர்.
 
ஜானி பேர்ஸ்டோவ் 93 ரன்கள் குவித்து வெளியேறினார். கிறிஸ் வோக்ஸ் சதம் விளாசி அசத்தினார். தற்போது கிறிஸ் வோக்ஸ் 131 ரன்களுடன் களத்தில் உள்ளார். 
 
இவர்கள் இருவரும் சேர்ந்து இங்கிலாந்து அணியை அசைக்க முடியாத நிலையில் கொண்டு சென்றுள்ளனர். இதனால் இங்கிலாந்து அணி 287 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
 
இந்த போட்டி டிரா ஆகும் அல்லது இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயதானதை மறந்துவிட்டேன்: இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன்!