Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2023 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (08:00 IST)
2023 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்
2023 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் நடைபெறவுள்ளது என்பதும், இதற்கான தகுதி சுற்று போட்டிகள்  இந்தாண்டு செப்டம்பர் மாதம் நமீபியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே. ஆனால் கொரோனா பரவலின் காரணமாக தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அணிகள் போட்டியில் நேரடியாக பங்கேற்கும். ஆனால் வளர்ந்து வரும் அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடி தகு பெற வேண்டும்
 
இந்த தகுதி சுற்று போட்டிகள் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நமீபியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில், அமெரிக்கா, நமீபியா, பப்பூவா நியூகினியா, உள்ளிட்ட நாடுகள் பங்கேற்க இருந்தது
 
இந்த நிலையில் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி தற்போது தெரிவித்துள்ளது. அதேபோல், இளையோருக்கான உலக கோப்பை தகுதி சுற்றுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
ஒத்தி வைக்கப்பட்ட உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டிகள் மற்றும் இளையோருக்கான உலக கோப்பை தகுதி சுற்றுப் போட்டிகள் வரும் டிசம்பரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments