Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000 பேர் போட்டி !

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (16:22 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இதுவரை 2000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தது. அதேசமயம் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர்களின் பதவிக்காலமும் முடிவடைவதாக செய்திகள் வெளியானதை அடுத்து, இந்தியாவின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.
 
மேலும் இந்திய அணியின்  தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு பயிற்சியாளர் என அனைத்து பதிவிகளுக்கும் விருப்பம் உள்ளவர்களி விண்ணப்பம், வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
 
இந்நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் பதிவிக்கு இதுவரையில் 2 000 பேர் பிசிசிஐயிடம் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இப்பதவிக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் டாம் மூடி, மற்றும் மைக்கெல் ஹெசன் ஆகியோர் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படியிருக்க, தற்போது பயிற்சியாளர் குழுவில் இருப்போரும் விண்ணப்பித்துள்ள நிலையில் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே மீண்டும் பயிற்சியாளாக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி: பும்ரா பந்தை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள்

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments