Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2020: பெங்களூரு அணியின் ஒட்டுமொத்த டீமும் காலி!

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (21:23 IST)
2020ஆம் ஆண்டின் ஐபிஎல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளின் ஏலம் டிசம்பர் 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அடுத்து ஐபிஎல் அணிகள் ஒருசில வீரர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளது
 
சிஎஸ்கே அணி உள்பட அனைத்து அணிகளும் அதிகபட்சமாக ஐந்து வீரர்களை விடுவிக்க முடிவு செய்துள்ள நிலையில் பெங்களூரு அணி மட்டும் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த டீமையும் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
பெங்களூரு அணியில் இருந்து அக்‌ஷய்தீப் நாத், காலின் டி கிராந்தோம், டேல் ஸ்டெயின், க்ளாசன், ஹிம்மத் சிங், குல்வந்த் கேஜ்ரோலியா, ஸ்டோனிஸ், மிலந்த் குமார், நாதன் கெளல்ட்டர் நைல், பிரயாஸ் ரே பார்மன், ஹெட்மயர், டிம் செளதி ஆகிய 11 வீரர்களை அந்த அணி விடுவித்துள்ளது.
 
விராத் கோஹ்லியை அடுத்து வாஷிங்டன் சுந்தர், டிவில்லியர்ஸ், பார்த்திவ் பட்டேல், உமேஷ் யாதவ் போன்ற முன்னணி வீரர்கள் மட்டுமே அந்த அணியில் தப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments