ஒலிம்பிக் போட்டித் தொடரை ஒருங்கிணைக்க தங்களை இணைத்துக்கொண்ட 10000 தன்னார்வலர்கள் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. ஜப்பானில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் போட்டிகளைப் பார்ப்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் தொடரை ரத்து செய்யவேண்டும் என எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. இதற்கான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒலிம்பிக் போட்டியை கடுமையான கட்டுப்பாடுகளுடன் மிகவும் பாதுகாப்பாக நடத்த ஒலிம்பிக் கமிட்டி முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டித் தொடர்களை ஒருங்கிணைக்க தங்களை தன்னார்வலராக இணைத்துக்கொண்ட 10000 பேர் இப்போது அதிலிருந்து விலகியுள்ளனர். இதனால் ஒலிம்பிக் தொடர் நடத்துவதில் மேலும் சிக்கல் எழுந்துள்ளது.