தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் நண்பர் மரணம்!
, புதன், 17 ஜூலை 2013 (16:58 IST)
தோனியின் பெயர் சொல்லும் ஹெலிகாப்டர் ஷாட்டிற்கு ஆலோசனை அளித்தவரும், தோனியின் நெருங்கிய நண்பருமான சந்தோஷ் லால் கணையம் பாதிக்கப்பட்டு ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தோனியின் நண்பர் சந்தோஷ் லாலுக்கு பெரிய அளவில் தோனி உதவியளித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு ஹெலிகாப்டர் ஷாட்டை கற்றுக் கொடுத்தவரும், ரஞ்சியின் முன்னாள் வீரரும், தோனியின் மிக நெருங்கிய நண்பருமான சந்தோஷ் லால் என்பது குறிப்பிடதக்கது.சந்தோஷ் லால் கணையம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ராஞ்சி மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று காலை உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 32. அவருக்கு மனைவியும் 3 வயது மகளும் இருக்கிறார்கள்.