கவலப்படாம ஆடு மாமா… விஹாரியிடம் தமிழில் பேசிய அஸ்வின்!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (16:40 IST)
இன்றைய போட்டியில் வெற்றிக்குக் காரணமான அஸ்வின் விஹாரி ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் போட்டியை டிரா செய்தது.

சிட்னியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 403 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி வருகிறது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்களை இழந்து 98 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஐந்தாவது நாளில் இந்திய அணி 200 ரன்களைக் கூட சேர்க்காமல் ஆல் அவுட் ஆகிவிடும் எனக் கூறியிருந்தார். இது இந்திய ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. 

ஆனால் இந்திய அணி சிறப்பாக விளையாடி 300 ரன்களுக்கு மேல் சேர்த்து போட்டியை டிரா செய்தது. இந்த டிராவுக்கு முக்கியக் காரணம் அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய இருவரின் நிதானமான ஆட்டம்தான். இவர்கள் இருவரும் சேர்ந்து 250 பந்துகளுக்கு மேல் சந்தித்து விக்கெட்களை பறிகொடுக்காமல் விளையாடி போட்டியை டிரா செய்தனர்.
இந்நிலையில் இவர்களின் பார்ட்னர்ஷிப்பின் போது அஸ்வின் விஹாரியிடம் ‘கவலப்படாத மாமா… எல்லா பந்தும் வெளியதான் வருது… பத்து பத்து பந்தா ஓட்டுவோம். இன்னும் 40 பந்துதான் இருக்கு.’ எனத் தமிழில் பேசியது ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments