'வை ராஜா வை' - சூடு பிடிக்கும் ஐ.பி.எல். சூதாட்டம்!
, திங்கள், 15 ஏப்ரல் 2013 (14:39 IST)
'
வை ராஜா வை அஞ்சு குடுத்தா பத்து, பத்து குடுத்தா 20' ரக சாலையோர கோலிக்குண்டு, கேரம்போர்டு ரக பெட்டிங்குகளை நம்மில் பலர் பார்த்திருப்போம் ஆனால் தற்போது அதெல்லாம் போய் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் பெட்டிங் பணம் புரள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.விளம்பரம் பெரிய அளவில் வருவாயைக் கொட்டிகொடுக்கிறது என்றால் பெட்டிங்கும் அதற்கு ஈடு இணையாக இருப்பதாகவே செய்திகள் உலா வருகின்றனசாலையோர கோலிகுண்டு, கேரம், செஸ் போன்ற ஆட்டங்களில் நடத்தப்படுவதுபோல் 'டேய் இவன் ஜெயிப்பான் இந்தா ஆயிரம் ஜெயிச்சா இரண்டாயிரம் என்று பணம் மதிப்பில்லாமல் புழங்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.6-
வது ஐ.பி.எல். போட்டியில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு பெட்டிங் நடை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் நடந்த பெட்டிங்கை விட தற்போது 25 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. குஜராத் தேர்தலில் 5 ஆயிரம் கோடிக்கு பெட்டிங் நடத்தப்படுகிறது. அதைவிட 8 மடங்கு அதிகமாக இந்த ஐ.பி.எல். போட்டியில் பெட்டிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒயிட் காலர்கள் அதிக அளவில் இதில் நுழைந்துள்ளதால் பெட்டிங் அதிகரித்து உள்ளது. குறைந்த பட்ச தொகையாக ரூ.1000 கட்டினால் ரூ.2 ஆயிரம் கிடைக்கும். முதலாவது ஐ.பி.எல். போட்டியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடத்தப்பட்டது. சூதாட்டதரகர்களின் தலைமையிடமாக ஐதராபாத் இருப்பதாக கூறப்படுகிறது. அனைத்து மெட்ரே நகரங்கள் மற்றும் குஜராத், ராஜஸ்தானில் மிகப்பெரிய அளவில் ஐ.பி.எல். பெட்டிங் நடக்கிறது.இன்னும் சிறிது காலத்தில் இந்த 'வை ராஜா வை' வருமானம் அதிகரித்தால் வீரர்களும் இதில் இறங்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.