Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விளம்பரக் காட்சி எந்திரமாகும் ஐ.பி.எல்.!

Advertiesment
ஐபிஎல் கிரிக்கெட்
, செவ்வாய், 30 மார்ச் 2010 (17:39 IST)
FILE
ஐ.ி.எல். தொடர் கிரிக்கெட் திறனை வெளிப்படுத்தக் கூடிய மற்றுமொரு வித்தியாசமான போட்டி முறை என்பதைவிட, இன்றைய தாராளமயவாத, உலகமயமாதல் பொருளாதாரத்தின் ஒரு காட்சி ஊடகமாகவும், வணிகமய ஊடகமாகவும் செயல்படுகிறது. இதில் கிரிக்கெட் என்பது வெறும் வார்த்தையாக மட்டுமே இருந்து வருகிறது.

பார்வையாளர்களுக்கும், மைதானத்தின் விளம்பர வாசகங்கள், நடன அழகிகள், நடிகை, நடிகர்கள், ஆட்டம்-பாட்டம் கொண்டாட்டம் ஆகியவற்றிற்குமான உறவு முழுதும் பாலியல்மயமாக்க உருவாக்கங்களையும், நுகர்வோரிய நலன்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் விளையாட்டுணர்வு சற்றும் மேலோங்கவில்லை என்பதை கிரிக்கெட் ஆட்டத்தை நன்கு அறிந்தவர்கள் நிச்சயம் உணர்வார்கள்.

ஓவர் முடிந்து விளம்பரம் வருவதற்குப் பதிலாக பந்துகளுக்கு இடையேயும் விளம்பரங்கள் காண்பிக்கப்படுகிறது. ஐ.ி.எல். கிரிக்கெட்டே முழுதும் விளம்பரங்களும், 10 விநாடி நேர்காணல்களுமாக சென்று‌க் கொண்டிருக்கிறது.

வீரர்கள் உடைகளை கவனித்துப் பார்த்தால் அருவருக்கத்தக்க விளம்பர பட்டயங்கள் அதிக அளவில் மினுமினுக்கின்றன. சட்டையின் முன் புறம் பெரிதாக ஒரு ஹீரோ ஹோண்டா வாசகம், அது தவிர, பேனாசோனிக் அல்லது வேறு ஏதாவது பொருள் அல்லது நிறுவனத்தின் பெயர்கள் கொண்ட லோகோக்கள் காணப்படுகின்றன.

சட்டைக் கைகளில் இரு புறமும் விளம்பரங்கள். முதுகில் மிகப்பெரிய விளம்பரம். பேன்ட்களில் இரு புறமும் - தொடைப்பகுதிகளில் விளம்பர வாசகங்கள் அல்லது நிறுவன அடையாளச் சின்னங்கள்.

வீரர்கள் அணியும் ஹெல்மெட்கள், தொப்பிகளில் முன்புறமும் பக்கவாட்டிலும், பின் புறமும் விளம்பரங்கள். நடுவர்களும் முழுதும் விளம்பரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வீரர்களுக்கு உள்ள அதிர்ஷ்டம் இவர்களுக்கு இல்லை.

நல்ல வேளையாக வீரர்களின் உள்ளூடுப்புகள் வரை விளம்பரங்கள் பாயவில்லை. ஆனால் இதுவும் அடுத்த ஐ.ி.எல். போட்டிகளில் அந்த நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

அழகான மைதானங்களில் எல்லைக்கோட்டருகே இரு புறமும் மிகப்பெரிய விளம்பரச் சின்னங்கள். எல்லை கோட்டருகே உள்ள எண்ணற்ற விளம்பர பேனர் குப்பைக் குவியல்களுக்கு முன்பும் மைதானத்தில் மிகப்பெரிய எழுத்துக்களில் ஏதாவது ஒரு நிறுவன விளம்பரம்..

வீரர்கள் பந்துகளைத் துல்லியமாகக் காண உதவும் சைட் ஸ்க்ரீனிலும் தொடர் விளம்பரங்கள். ஸ்டம்ப்களில், மட்டைகளில் என்று அனைத்தும் விளம்பரமயம், நல்ல வேளை பந்துகளில் விளம்பர வாசகங்களோ, சின்னங்களோ இல்லை. இந்தப் பகுதி இன்னும் லலித் மோடியின் பார்வையில் படவில்லை என்றே தோன்றுகிறது. அதனால் அடுத்த ஐ.ி.எல். கிரிக்கெட்டில் பந்துகள் கூட பெப்சி பந்து, கோலா பந்து, சஹாரா பந்து, கிங் ஃபிஷர் பந்து என்றெல்லாம் நாம் பார்க்கப் பழகிக் கொள்ளவேண்டும்.

வீரர்கள் அமரும் "டக் அவுட்" பகுதியில் மேற்புறம் வளைந்து காணப்படும் ஃபைபர் கிளாஸ்களில் கசமுசவென விளம்பர லேபிள்கள். வானில் ராட்சத எம்.ஆர்.எஃப். பலூன் விளம்பரம்.

3-வது நடுவர் தீர்ப்பை மக்களுக்குக் காண்பிக்கும் திரையில் "ஃபிளை கிங் பிஷர்" விளம்பரம். இதற்காகவே அரை கிரவுண்டில் ரன் அவுட் ஆகும் அவுட்டிற்குக் கூட 3-வது நடுவரை கள நடுவர்கள் அழைக்கும் தமாஷ்கள்! இவை யாவற்றையும் ஐ.ி.எல். கிரிக்கெட் தொடரில் நாம் பார்த்து வருகிறோம்.

மைதானத்தில் உள்ள ராட்சதத் திரையில் தேவையில்லாதக் குப்பைப் பொருட்களுக்கான விளம்பரங்கள் காண்பிக்கப்படுகின்றன. பார்வையாளர்கள் காண்பிக்கும் பேனர்கள் கூட விளம்பர வாசகங்களாக மாறியுள்ள ஒரு அவலத்தை இன்று நாம் காண்கிறோம்.

தொலைக்காட்சியில் போட்டியை பார்ப்பவர்களுக்கு ஆட்டத்தின் நடுவே போட்டித் திரை குறுக்கப்பட்டு பக்கவாட்டில், கீழே, மேலே என்று பயனற்ற பொருட்களின் விளம்பரங்கள் நம்மை தாக்கி வருகின்றன. இது தவிர தொலைக்காட்சித் திரையின் கீழே வாசகங்கள் அடங்கிய விளம்பரங்களும் நம் பார்வைக்குக் கூடுதல் பிரசாதமாகக் கிடைத்து வருகிறது (!)

இந்த விளம்பரத் தாக்குதல்கள் போதாது என்று இரண்டு உத்தி வகுப்பு இடைவேளை (Strategic Time-out) வருகிறது. இது ஒரு 10 நிமிட நேர விளம்பர இடைவேளையாகும். இந்த விளம்பர இடைவேளைகள் மாக்ஸ் மொபைல் நிறுவனத்திற்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது.

அதாவது கிரிக்கெட் ஆட்டத்தின் குளிர் பான இடைவேளையும் ஒரு ஸ்பான்சர் செய்யப்பட்ட இடைவேளையாக மாறியுள்ளது. அதாவது விளம்பரங்களை, கிரிக்கெட்டின் இடையூறு இன்றி காண்பிக்க லலித் மோடி ஏற்படுத்திக் கொடுத்த அற்புதத் (?) திட்டம் இது!

கிரிக்கெட் ஆட்டத்தை வர்ணிக்கும் வர்ணனையாளர்களும் இந்த நுகர்வோரியத்தின், விளம்பரக் கச்சடாக்களின் ஊதுகுழலாக மாறிவிட்டனர். சிக்சர் அடித்தால் அது உடனே "ி.எல்.எஃப். மேக்சிமம்" என்றோ "சிட்டி மொமண்ட் ஆஃப் சக்சஸ்" என்றோ வர்ணனையாளர்களால் வர்ணிக்கப்படுகிறது.

கேட்ச் பிடிக்கப்பட்டால் அது "கிரேட் கேட்ச்" அல்லது குட் கேட்ச் அல்ல மாறாக அது "கார்பன் கமால் கேட்ச்"!

அடுத்த ஐ.ி.எல். கிரிக்கெட்டில் சிக்சர் என்பது கூட விளம்பரதாரர்களுக்கு தீனி போடாது. ஒரு ஷாட்டிற்கு 8 ரன்கள் அல்லது 10 ரன்கள் என்று கொடுத்தால்தான் அதன் வணிக மதிப்பு எகிறும். இதனையும் லலித் மோடி செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

ஒரு பந்து வீச்சாளர் ஒரு ஓவரில் 3 சிக்சர்கள் கொடுத்தால் அவருக்கு கூடுதல் பந்துகளை அந்த ஓவரில் அளிக்கும் புதிய (மலின) திட்டங்களையும் நாம் விரைவில் எதிர்பார்க்கலாம்!

மைதானத்திற்கு வந்து போட்டியைப் பார்க்கும் முக்கியப் பிரமுகர்களுக்கும் விளம்பர உடைகள் அளிக்கப்படுகிறது. அவர் ஏதாவது ஒரு கொடியை அசைப்பதும் விளம்பரங்களுக்காக அடிக்கடி காட்டப்படுகிறது.

இந்த முக்கியப் பிரமுகர்கள் ஐ.ி.எல். போட்டி முடிந்த பிறகான விருந்தில் பங்கேற்கின்றனர். இந்த விருந்துகளில் பங்கேற்க, அதாவது முக்கியப் பிரமுகர்களின் முகதரிசனத்தைக் காண, விருந்திற்கான டிக்கெட்டுகள் அளிக்கப்படுகிறது. இது ஐ.ி.எல். கிரிக்கெட் டிக்கெட்டுகளின் விலையைக் காட்டிலும் அதிகம்.

webdunia
FILE
மேலும் நம்மை ஆச்சரியத்திலும், அருவருப்பிலும் திளைக்கச் செய்வது என்னவெனில் மைதானத்திரையில் "நடன அழகியைச் சந்திக்க" என்ற எஸ்.எம்.எஸ். போட்டி. இந்த எஸ்.எம்.எஸ். கட்டனம் ரூ.3. அல்லது உங்களுக்கு பிடித்த நடன அழகியைச் சந்தித்து அளவளாவ "சாட் லைன்", அதாவது அழைப்பு ஒன்றுக்கு ரூ.10 என்ற அறிவிப்புகளும் வருகிறது. ஐ.ி.எல். அணி உரிமையாளர்களும் நிர்வாகிகளும் இந்த நடன அழகிகளைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இதில் வெளிப்படை!

"சியர் லீடர்கள்" பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளைத் தோல் அழகிகளே!

ு.இ,எஃப்.ஏ. சாம்பியன் லீக் கால்பந்து போட்டிகளும் உலக அளவில் மிகப்பெரிய பண முதலைகளும் முன்னணி நிறுவனங்களும் எடுத்து நடத்தும் ஒரு கால்பந்து தொடர்தான் ஆனால் இதில் மைதானம் மைதானமாக இருக்கிறது. கோல் போஸ்ட்களில் விளம்பரங்கள் இல்லை. வீரர்களின் கை, கால்கள் வாசகங்கள் எதுவும் இல்லாமல்தான் இருக்கிறது.

வர்ணனையாளர்கள் கால்பந்தாட்டத்தை அதன் நுணுக்கங்களுடன் விவரிக்கின்றனர். அவர்கள் நோக்கியா அல்லது வோடஃபோன் கோல் என்றெல்லாம் கூறுவதில்லை. ஐ.ி.எல். கிரிக்கெட்டைக் காட்டிலும் பெருமளவு பணம் புழக்கம் உள்ள இந்த கால்பந்து போட்டிகளிலஅல்லது ஏ.ி.ி. டென்னிஸ் தொடர்களிலவிளம்பரதாரர்களுக்கென்று பிரத்யேகமாக விளம்பர நேரங்கள் ஒதுக்கப்படுவதில்லை. அதற்காக ஆட்டத்தில் பிரேக் எதுவும் கொடுக்கப்படுவதில்லை.

ஆனால் இங்கு அனைத்தும் விளம்பரம், அனைத்தும் பணம்! இதில் போய் நாம் கிரிக்கெட்டைத் தேடினால் நாம்தான் முட்டாள்கள்.

இதில் பார்வையாளனின் பங்கேற்பு இல்லை மாறாக நுகர்வோராக பார்வையாளனாக மாற்றப்படுகிறான். ஏனெனில் கிரிக்கெட் இருந்தால்தான் பங்கேற்பு இருக்கும், இங்கு இருப்பது கிரிக்கெட் அல்ல, நுகர்வோரியத்தின் அட்டகாசங்கள், அட்டூழியங்கள்.

மற்ற விளையாட்டுகளுடன் ஐ.ி.எல். போட்டிபோடவில்லை, மாறாக பொழுதுபோக்குத் துறையின் அனைத்துத் துறைகளுடன் ஐ.ி.எல். போட்டியில் இறங்கியுள்ளது.

வீரர்கள், பார்வையாளர்கள், வர்ணனையாளர்கள், நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், சிக்சர்கள், பவுண்டரிகள், சதங்கள், அரை சதங்கள், பௌல்டுகள், கேட்ச்கள் அனைத்தும் மிகப்பெரிய வணிக, நுகர்வோரிய எந்திரத்தின் உருவாக்க உதிரிபாகங்கள் அவ்வளவே.

எனவேதான் மற்றவர்கள் அரை சதம் எடுப்பதைவிட சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம் பெரிது படுத்தப்படுகிறது. அவர் சிறந்த வீரரா இல்லையா என்பதெல்லாம் இப்போது கேள்விக்கு அப்பாற்பட்ட விஷயமாகி விட்டது. அவர் வணிக ரீதியாக பயனுள்ளவரா அல்லது இல்லையா என்பதுதான் இப்போது விஷயம்.

ஐ.ி.எல் என்பது இரண்டு மாதம் நடைபெறும் ஒரு மிகப்பெரிய கண்காட்சி, பொருட்கள் விற்பனைக் கண்காட்சி. ஆடம்பரப் பொருட்களின் கண்காட்சி. இதில் பார்வையாளர்கள் வெறும் ஷாப்பிங் செய்பவர்கள் மட்டுமே. வீரர்கள் விற்பனையாளர்கள்.

இந்த ஷாப்பிங் மால் அடுத்த ஆண்டு மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படும், ஏனெனில் சஹாரா 1,700 கோடிக்கு புனே அணியை வாங்கியுள்ளது. இப்போது இந்த ஐ.ி.எல் வணிக எந்திரம் சகாராவின் லாபத்தைக் குவிக்க கிரிக்கெட் ஆட்டத்தில் சில அதிரடி மாற்றங்களைச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உதாரணமாக நாம் தெரு கிரிக்கெட்டில் விளையாடும் போது கிராண்டட் ஷாட் வைத்துக் கொள்வோமே அது போல் 30 யார்டு வட்டத்திற்கு வெளியே பந்து சென்றால் 2 ரன்கள் கிராண்டட் என்று கூட ஒரு தமாஷ் மாற்றத்தை ஐ.ி.எல். கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சச்சின் போன்ற வீரர்களை 3 முறை வீழ்த்தினால்தான் அவர் அவுட். இல்லையெனில் அவர் ஆடிக் கொண்டேயிருக்கலாம். இதெல்லாம் வெறும் கற்பனை என்ற அளவில் நினைக்கும் போதே அருவருப்பாக உள்ளது. ஆனால் இதனை விடவும் மோசமான, கிரிக்கெட் ஆட்டத்தை அழிக்கும் மாற்றங்களை ஐ.ி.எல். கொண்டு வந்தாலும் வரும்!

கிரிக்கெட்டை வணிகமயமாக்குவதின் உச்சகட்டம் இதுவென்று நினைக்கவேண்டாம். மாறாக இவையெல்லாம் வெறும் துவக்கம் மட்டுமே என்று யோசித்தால் இதன் பயங்கரம் புரியவரும்.

காலனியாதிக்கத்தின் உச்சத்தில் பிரிட்டன் இருந்தபோது, அப்போது உருவான இங்கிலாந்தின் மத்தியதர வர்க்கத்தினரிடத்திலும் பிரிட்டன் உயர்குடிக்களிடையேயும் இருந்த டாம்பீகமும், ஆடம்பரமும், பணத்திமிரும், போலிப்பகட்டுத் தனம் ஆகியவற்றின் குறியீடாக இருந்த கிரிக்கெட் அதன் பிறகு இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்து மீண்டு வந்து இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்திய தீவுகள், தற்போது வங்கதேசம் என்று பெரிய பணபலம் இல்லாதவர்கள் கூட, விளையாடும் ஒரு ஆட்டமாக மாறிவந்தது.

வெள்ளை ஆதிக்கத்திலிருந்து மீண்டு கிரிக்கெட் நீண்ட தூரம் இன்று வந்துள்ளது. அப்படி வந்துள்ள கிரிக்கெட்டை மீண்டும் அதே 18ஆம் நூற்றாண்டு வெள்ளை ஆதிக்கப் போலி, பகட்டு, டாம்பீக, ஆடம்பரத்தனத்திற்கு கொண்டு வந்துள்ளார் லலித் மோடி.

இது வெறும் கிரிக்கெட், வணிகம் தொடர்பானது மட்டுமல்லாமல், பண்பாட்டை சீரழிக்கும் ஒரு போக்காகவும் மாறி வருகிறது. இந்திய நடுத்தர, உயர்குடிப் பிரிவினரைடையே முளைத்துள்ள புதிய பண வளத்தின் பகட்டுவாதக் குறியீடுதான் இன்றைய ஐ.பி.எல்.

சச்சின் டெண்டுல்கர் சிக்சர் அடிப்பதற்கு முன்பு பலர் சிக்சர் அடித்துள்ளனர். சலீம் துரானி போன்றவர்கள் கூட டெரிக் அண்டர்வுட் பந்துகளை தொடர்ச்சியாக சிக்சர்கள் அடித்துள்ளார். அப்போதெல்லாம் மைதானங்களில் எந்த சியர் லீடர்களும் தொடையையும் இடுப்பையும் காட்டிக் கொண்டு நடனமாடவில்லை.

webdunia
FILE
இது பார்வையாளர்களை கிரிக்கெட்டிலிருந்து அன்னியப்படுத்தி பொருட்கள், விளம்பரங்கள், வண்ணமய சியர் லீடர்களின் வெள்ளைத் தொடைகள் இடுப்புகள் என்று அனைத்தும் ஒரு பாலியல் மயமாக்க கற்பனையில் ரசிகர்களை திளைக்க வைத்து வருகிறது.

வணிக மயப்படுத்துவதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லைகளை இப்போது யாரும் பேசக்கூடச் செய்வதில்லை. இதெல்லாம் ஏதோ 'பொருளாதார முன்னேற்றம்" என்று நம் காதில் பூச்சுற்றும் முயற்சிகள்தான் நடைபெறுகிறது.

நாளை இந்த ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள் பங்குச் சந்தைகளில் கூட தங்கள் அணிகளை பட்டியலாக்கலாம். ஐ.பி.ஓ. என்று அழைக்கப்படும் பங்குவெளியீடுகள் கூட இந்த அணி உரிமையாளர்களுக்கு வழங்கப்படலாம்.

இது இன்னும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது. மேலும் மற்ற விளையாட்டுகள் பக்கம் ரசிகர்கள் தலை வைத்துக் கூட படுக்கக்கூடாது என்ற நிலையில் அனைத்தும் நடைபெற்று வருகிறது.

இது ஏதோ கிரிக்கெட்டில் மட்டும் நடைபெறுகிறது என்று நினைக்கவேண்டாம். நாட்டின் ஆதார சுருதியான வேளாண்மை, கல்வி, சுகாதாரம், மருத்துவம், உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் வணிகமயமாதலின் பயங்கரம் தன் கோர முகத்தைப் பல்வேறு வடிவங்களில் காட்டிவருகிறது.

இந்தியா ஒளிர்கிறது! ஆம்! பல குடும்பங்களின் வெளிச்சங்களை அழித்து இந்திய ஒளிர்கிறது!

Share this Story:

Follow Webdunia tamil