Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மற்ற T20 கிரிக்கெட் லீகில் விளையாட அனுமதி மறுக்கும் பி.சி.சி.ஐ.-யின் அராஜகம்!

Advertiesment
ஐபிஎல் கிரிக்கெட்
, புதன், 4 ஜூலை 2012 (18:44 IST)
பிசிசிஐ-யின் அதிகாரப் போக்குகள்!
கிரிக்கெட்டையும் இந்திய வீரர்களையும் ஏதோ மார்க்கெட்டைக் கலக்கும் சர்ஃப், ரெக்சோனா, ஹமாம், பெப்சி, கோககோலா போன்று வைத்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
webdunia
இந்தியன் பிரிமியர் லீக் தவிர பங்களாதேஷ், தற்போது இலங்க்கை, ஏற்கனவே ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஐ.பி.எல். போலவே இருபது ஓவர் கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுகின்றன. இதில் விளையாட எந்த ஒரு இந்திய வீரருக்கும் அனுமதி வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து வருகிறது.

மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்கு அனுப்ப பல்வேறு விதமான நெருக்கடிகளைக் கொடுக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இருபது ஓவர் லீகுகளில் முதன்மை இந்திய வீரர்களை அழைத்தும் அவர்களை விளையாட அனுமதி மறுத்து அராஜகப் போக்கை வெளிப்படுத்தி வருகிறது பி.சி.சி.ஐ.

தற்போது ஹர்பஜன் சிங் இங்கிலாந்து கவுண்டி அணியான எஸ்ஸெக்ஸ் அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் பிரெண்ட்ஸ் லைஃப் T20 லீகில் விளையாட ஒப்பந்தம் செய்யப்படவில்லை. காரணம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அராஜகப் போக்கு!

கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் மற்ற நாட்டு T20 தொடர்களில் இந்தியாவின் முதன்மை 7 வீரர்களுக்கு அழைப்பு விடுக்கபபட்டும் வாரியம் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சச்சின், சேவாக் உள்ளிட்ட பெரிய வீரர்கள் மட்டுமல்ல மணீஷ் பாண்டே, உள்ளிட்ட விளிம்பு நிலையில் உள்ள வீரர்களும் அயல்நாட்டில் நடைபெறும் பிற T20 கிரிக்கெட்டில் கலந்து கொள்ளக்கூடாது! இதுதான் பி.சி.சி.ஐ-யின் அடிமை சாசன ஒப்பந்தம்.

இலங்ககிரிக்கெடவாரியமநடத்தவிருந்பிரீமியரலீகபோட்டிகளஇந்ஆண்டுக்கஒத்தி வைக்கப்பட்டது. காரணமஇந்திகிரிக்கெடகட்டுப்பாட்டவாரியத்தினமறைமுஅடக்குமுறையே!

ஆஸ்ட்ரேலியாவிலநடந்பிக்பாஷ், தெனஆப்பிரிக்காவினஇருபதஓவரதொடரபோன்தொடர்களுக்கஇந்திவீரர்களுக்கஅழைப்பஇருந்தது. ஆனாலஒருவருமவிளையாஅனுமதி வழங்கப்படவில்லை.

ஏனஇந்பாரபட்சம்? அடுத்நாட்டவீரர்கள் ஐ.ி.எல்.-இலஆடும்போதஏனஇந்திவீரர்களஅயல்நாட்டதொடர்களிலவிளையாஏனஅனுமதியில்லை?

அதாவதபிறநாட்டலீககிரிக்கெட்களஇந்திவீரர்களுக்கஅதிகப்படியாபணமகொடுத்துவிடக்கூடாதஎன்அச்சத்தினால், இதனாலதன்னுடைசொத்துகளுக்கபங்கமஏற்பட்டவிடுமஎன்அதிகாரமசார்ந்பயம்!

மேலும் ஐ.ி.எலகிரிக்கெட்டிற்கஒப்பந்தமசெய்யப்பட்அயல்நாட்டவீரர்களினஒப்பந்தததொகைகளில் 10% அந்தந்நாட்டவாரியங்களுக்குசசெல்கிறது. இதனாலமற்வாரியங்களகேள்வி கேட்பதில்லை. தானசுயநலமாஇருப்பதோடமற்றவர்களையுமசுயநலமிகளாமாற்றி வைத்திருக்கிறதஇந்திகிரிக்கெடகட்டுப்பாட்டவாரியம்.

இந்திய வீரர்களின் அயல்நாட்டு வாய்ப்புகளை தனது சாமர்த்தியமான ஐ.பி.எல். ஒப்பந்த விதிமுறைகளின் மூலம் தடுத்து வருகிறது பி.சி.சி.ஐ.

கிரிக்கெட்டையும் இந்திய வீரர்களையும் ஏதோ மார்க்கெட்டைக் கலக்கும் சர்ஃப், ரெக்சோனா, ஹமாம், பெப்சி, கோககோலா போன்று வைத்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அயல்நாட்டு வீரர்கள் இங்கு வந்து விளையாடலாம் ஆனால் இந்திய வீரர்கள் செல்லக்கூடாது இது என்ன நியாயம்? ஐ.சி.சி. உறுப்பு நாடுகளில் ஒருவர் கூட இந்தக் கேள்வியை எழுப்புவதில்லை.

வெறுமனே இந்திய வீரர்களின் சம்பாத்தியத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல இது, மாறாக பல்வேறு நாடுகளில், பல்வேறு கிரிக்கெட் சூழல்களில் பல்வேறு வீரர்களுடன் ஒரு இளம் இந்திய வீரர் விளையாடி பெறும் அனுபவத்தைத் தடுக்கிறது பிசிசிஐ. அனுபவத்தைத் தடுக்க இதற்கு என்ன உரிமை இருக்கிறது?

இதையும் மீறி அயல்நாடுகளில், குறிப்பாக இங்கிலாந்து கிரிக்கெட் கவுண்டியில் விளையாட ஆட்சேபணை இல்லை சான்றிதழ் வழங்கினாலும் அங்கு இருபது ஓவர் கிரிக்கெட் விளையாட அனுமதி கிடையாது!

மற்ற நாடுகளின் இருபது ஓவர் கிரிக்கெட் கிளப் மட்டத்தில் ஆட அனுமதி கேட்ட 7 வீரர்களில் ஒருவர் இந்திய வீரர்கள் சங்கத்தை அமைக்க திட்டமிட்டதாக செய்திகள் வெளியாகி அதனை மிகவும் உரத்த குரலில் மறுத்து, பிறகு அந்த வீரரின் வாய்ப்புகளை பிசிசிஐ. தடுத்து வருவதாகவும் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவருக்கு நியாயமான சம்பளம் கூட கிடைக்காமல் செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது.

பி.சி.சி.ஐ-யை எதிர்த்துக் கொண்டால் இதுதான் நடக்கும்!

இப்படி ஒரு அமைப்பு கிரிக்கெட்டை நடத்த அனுமதிக்கலாமா? உடனடியாக மத்திய அரசின் விளையாட்டுத் துறை கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ள முன்வரவேண்டும்.

ஐ.சி.சி. மட்டத்தில் எல்லா நாடுகளும் பிசிசிஐ-யின் பண, அதிகாரபலத்தைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்துக் குரல் கொடுக்கவேண்டும்.

மிக முக்கியமாக இந்திய வீரர்கள் சங்கம் அமைக்கப்படவேண்டும், அதில் பி.சி.சி.ஐ-யின் வீர்ர்கள் ஒப்பந்தத் தகிடுதத்தங்களை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தவேண்டும்!

Share this Story:

Follow Webdunia tamil