தொடரை வென்றால் முதலிடம் பெற இந்தியாவுக்கு வாய்ப்பு
, புதன், 12 ஜனவரி 2011 (12:33 IST)
டர்பனில் இன்று இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் முதலிடம் செல்ல வாய்ப்பு உள்ளது.
டர்பனில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப்போட்டி மாலை இந்திய நேரம் 6 மணியளவில் தொடங்குகிறது.இது வரை தென் ஆப்பிரிக்க மண்ணில் 20 ஒருநாள் போட்டிகளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடியுள்ள இந்திய அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 16 போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது.இது இந்தியாவின் அயல்நாட்டு மண்ணின் ஒருநாள் சாதனைகளுக்கு இழுக்கு சேர்ப்பதாக உள்ளது.
சச்சின் டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்க மண்ணில் 1422 ரன்களை எடுத்துள்ளார். ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதில் 522 ரன்களை 26.10 என்ற குறைந்த சராசரியில் எடுத்துள்ளார்.