Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிராவிட் இடத்தை நிரப்பப்போவது யார்?

Advertiesment
விளையாட்டுச் செய்திகள்
, சனி, 10 மார்ச் 2012 (15:13 IST)
FILE
இந்தியாவின் சுவர் என்று அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட் 16 ஆண்டுகால அயராத கிரிக்கெட்டிற்குப் பிறகு நேற்று ஓய்வு அளித்துள்ள வேளையில் அவரது 3ஆம் இடத்தில் களமிறங்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்போதைக்குக் கைவசம் 4 பேட்ஸ்மென்கள் உள்ளனர். அவர்கள், கோலி, ரோஹித் ஷர்மா, செடேஷ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே ஆகியோராவர்.

இப்போதைக்கு டெஸ்ட் மட்டத்தில் வீரத் கோலி தனது திறமையை ஆஸ்ட்ரேலியாவில் நிரூபித்தார். அதுவும் பெர்த் மைதாந்தில் சதம் கண்டது அவரது புகழை பண்டிதர்கள் மத்தியில் உயர்த்தியுள்ளது.

இது வரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கோலி 491 ரன்களை எடுத்துள்ளார்.

ரோஹித் ஷர்மாவிடம் திறமையும், உத்தியும் உள்ளது. ஆனால் அவரிடம் உடல்தகுதியும் பொறிமையும் தேவைப்படுகிறது. ரஞ்சி கிரிக்கெட்டில் இன்னும் அவர் நீண்ட இன்னிங்ஸ் ஒன்றை விளையாடியதில்லை. ஆனால் சீரான முறையில் ரன்களை அவர் பெற்று வருகிறார்.

அஜின்கியா ரஹானே தன்னிடம் பொறுமை உள்ளது என்பதை மும்பை அணிக்காக அதே 3ஆம் நிலையில் களமிறங்கி நீண்டநேர இன்னிங்ஸை ஆடுவதன் மூலம் நிரூபித்துள்ளார்.

ரஞ்சி கிரிக்கெட்டில் அவர் 3 சதங்களை எடுத்துள்ளார். ஆஸ்ட்ரேலியாவில் நடைபெறும் வளரும் வீரர்கள் கிரிக்கெட் போட்டித் தொடரில் அவர் 2 சதங்களை எடுத்த பிறகே இங்கிலாந்தில் அவர் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக துவக்கம் தந்தார்.

இவர்களையெல்லாம் விட செடேஷ்வர் புஜாரா பொறுமையும், உத்தியும் டெஸ்ட் போட்டிகளுக்குத் தேவையான அனைத்து தகுதிகளும் உடையவராகக் காணப்படுகிறார்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் இவரது சராசரி 53 ரன்கள் மேலும் நிறைய ரன் குவித்துள்ளார். முச்சதம் என்பது சாதாரணம் அல்ல, ஆனால் புஜாரா 3 முறை முச்சதம் கண்டுள்ளார்.

2010ஆம் ஆண்டு பெங்களூர் பிட்சில் கடைசி நாளன்று சற்றே சந்தேகமான பிட்சில் திராவிடிற்குப் பதிலாக 3ஆம் நிலையில் களமிறங்கி வெற்றி 72 ரன்களைக் குவித்தபோது ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் பண்டிதர் இயன் சாப்பல் கூட புஜாராவுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கவேண்டும் என்றார்.

எனவே லஷ்மண் இடத்திற்கு கோலியும், திராவிட் இடத்தில் புஜாராவும் எதிர்கால இந்திய அணியை வழி நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனால் சேவாகை துவக்கத்திலிருந்து தூக்கி விட்டு லஷ்மண் இடத்தில் களமிறங்கச் செய்தால், துவக்கத்தில் ரஹானேயை உருவாக்கலாம். சேவாகின் டெஸ்ட் விளையாடும் காலமும் இதன் மூலம் அதிகமாகலாம் இது இந்தியாவுக்கு நல்லது. மேலும் அந்த டவுனில் அவர் இறங்கி பின் கள வீரர்களையும் தோனியுடனும் சேர்ந்து எதிரணியினருக்கு டெஸ்ட் போட்டிகளில் சிம்ம சொப்பனமாகத் திகழ முடியும் என்று தெரிகிறது.

இந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்த திராவிடிற்கு இந்திய அணி எப்போத்ம் நன்றிக் கடன் பட்டுள்ளது.

English Summary: After the retirement of Rahul Dravid, a big vaccuam was created in the no.3 Slot, presently there are 4 youngsters are there: Virat Kohli, Rohit Sharma, Pujaraa, Rahane! Of these four who is going to fill the boots of Dravid

Share this Story:

Follow Webdunia tamil