Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிரிக்கெட் வீரர்கள் மேல் இறுகும் கண்காணிப்பு முறைகள்!

Advertiesment
கிரிக்கெட் வீரர்கள் கண்காணிப்பு முறைகள்

Webdunia

, செவ்வாய், 11 செப்டம்பர் 2007 (13:43 IST)
பொழுதுபோக்கிற்காக துவங்கிய கிரிக்கெட் ஆட்டம் பிறகு அந்தந்த நாடுகளின் கெளரவத்தைக் காப்பாற்றும் தேச அடையாளமாக மாறி தற்போது உலகப் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தொழிலாக அசுர "வளர்ச்சி" அடைந்துள்ளது.

webdunia photoFILE
ஏற்கனவே வீரர்களின் ஆட்டத்தை தொலைக்காட்சி மூலம் காணும் ரசிகர்கள் நேரடியாகவே அவர்களின் அணுகுமுறையை கணித்து தங்களது எதிர்ப்பை அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். இது தவிர, மைதானத்தில் வீரர்களின் நடத்தையை கண்காணித்து தண்டனை அளிக்க ஐசிசி விதிகள், ஒருவர் பந்து வீசுகிறாரா அல்லது எறிகிறாரா என்பதை அறிய பயோ மெகானிக்கல் தொழில் நுட்பம், இதற்கு பெர்த் நகரில் சிறப்பு மருத்துவக் குழு + பயிற்சி வேறு.

இவை போதாதென்று வீரர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும்போது என்ன செய்கிறார்கள், வெளியில் ஷாப்பிங் செல்லும்போது என்ன பொருட்களை வாங்குகிறார்கள், மது வகையறாக்களை ருசிக்கின்றனரா என்பது போன்ற "சொந்த" "ஒழுக்க" விவகாரங்களை கண்காணிக்க பரபரப்பு விரும்பி பத்திரிக்கைகள்.

சமீபத்திய ஃபேஷன் அணிக்கு ஒரு அயல் நாட்டு பயிற்சியாளர் இருந்தேயாகவேண்டும் என்ற "கட்டாயம்". இந்த பயிற்சியாளர் பயிற்சியளிக்கிறாரோ இல்லையோ ஒரு குறிப்பிட்ட வீரர் எப்படி நடந்து கொள்கிறார், அவர் கிரிக்கெட் ஆட்டத்திற்கு 100 சதவீதம் தன்னை அர்ப்பணிக்கிறாரா என்பதை இவர் கையைக் கட்டிக்கொண்டு பார்த்தே கூறிவிடும் அதிசயமும் ஒரு நவீன "வளர்ச்சியாம்".

ஆனால் இந்த அயல் நாட்டு ஹைடெக் பயிற்சியாளர்கள் "நல்ல" ஊதியம் பெற்றுக் கொண்டு, ஊதியம் அளிக்கும் குறிப்பிட்ட நாட்டு கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுக்கு மிகவும் உண்மையாக இருப்பது போல் காண்பித்துக் கொள்கின்றனர். எவ்வாறு? வந்தவுடனேயே இந்த வீரர் அணுகுமுறை சரியில்லை... இன்னொரு வீரர் நன்றாக வருவார்... மற்றொரு வீரர் பயிற்சியின் போது அதிகம் சிரிக்கிறார்... என்று தனது "கிரிக்கெட் கோட்பாட்டை" வாரியத்திற்கு தெரியப்படுத்துவார். இதனால் பயிற்சியாளர் என்பவரும் கிரிக்கெட் வீரர்கள் மீதான கண்காணிப்பு எந்திரத்தின் ஒரு நவீன கருவியே என்பதில் ஐயமில்லை.

இவற்றிற்கெல்லாம் மேலாக தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கும் ஒரு விஷயம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அதாவது பயிற்சியில் அல்லது சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தில் 100 சதவீதம் திறமையை வெளிபடுத்தாத வீரர்களை அடையாளம் காட்டும் அதி தொழில் நுட்ப சாதனம் ஒன்றை ஆஸ்ட்ரேலியாவிலிருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாம் பாகிஸ்தான் வாரியம்.

ஜி.பி.எஸ். என்று அழைக்கப்படும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் என்ற தொழில் நுட்பம் இந்த புனிதமான காரியத்தை செய்யவல்லதாம். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை இயக்க அதிகாரி ஷஃப்டாக் நாக்மி இது பற்றி பூரிப்புடன் கூறுகையில் " ஒரு வீரர் 100 சதவீதம் பங்களிப்பு செய்கிறாரா என்பதை இந்த சாதனம் காட்டிவிடும். இது தவிர வீரர்களின் ஆட்ட உத்தியில் செய்யும் தவறுகளையும் இது புட்டுப் புட்டு வைத்து விடுமாம்.

வாரியம் உருவாக்கவுள்ளதாம். இந்த வார இறுதியில் அதிசய சாதனம் என்ன செய்யும் என்பதை அவர் விளக்கியுள்ளார்.

எங்கு போய்க் கொண்டிருக்கிறது கிரிக்கெட்? இன்னொரு புறம் பலமான மனோ நிலையில் உள்ள வீரர்களை உருவாக்குகிறோம் என்ற பெயரில் ராணுவத்தை விட மோசமான பயிற்சியில் ஈடுபடுத்துவதும் நடந்து வருகிறது. சமீபத்தில் வங்கதேச அணிக்கு தேர்வு செய்யப்பட்ட இளம் வீரர் நஸிமுத்தீன் 2004ஆம் ஆண்டு அன்டர்- 19 பயிற்சி முகாமில் கடும் குளிர் காலத்தில் காலை 7 மணிக்கு பனிக்கட்டிக் குளியல் செய்யவைக்கப்பட்டார் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இவர் தன் தாயாரிடம் வெறுத்துப்போய் கூறுகையில், உனக்கு உன் மகன் உயிருடன் வேண்டுமா... அல்லது கிரிக்கெட் வீரனாக வேண்டுமா? என்று கூறியதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதேபோன்று பனிக்கட்டி குளியல் முறையை தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் ஒருவர் மகாயா நிடினிக்கு செய்ததையும் நாம் அறிவோம்.

ஏன் இப்படியெல்லாம்? ஒவ்வொரு நாடும் கிரிக்கெட்டை வைத்து என்ன சாதிக்க விரும்புகிறது? ஒவ்வொருவரும் சிறு வயதில் மட்டையைப் பிடித்துக்கொண்டு மைதானத்தில் கிரிக்கெட் ஆட்டத்தின் மீதான தனிப்பட்ட ஆர்வத்தினால் ஆடி வருபவர்களே. அதன் பிறகு இதில் வெளிப்படும் சில அசாதாரண திறமைகள் பின்னொரு காலக்கட்டத்தில் யாராவது ஒரு மூத்த வீரரால் அடையாளம் காணப்பட்டு அவரது திறமையை செழுமைபடுத்த சில நியாயமான பயிற்சி முறைகளில் அவரை ஈடுபடுத்தி ஒரு சிறந்த வீரராக அவர் உருவாக்கப்படுகிறார்.

இந்த நடைமுறையில் எங்கிருந்து வருகிறது இத்தனை கண்காணிப்பு முறைகள். சாதரணமாக கிரிக்கெட் ஆடும் எவருக்கும் தெரியும், சாதாரண டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் கூட எந்த வீரரும் 100 சதவீதம் கொடுக்க முடியவில்லை என்றாலும் தன்னளவில் உணமையாகவே தங்கள் திறமையை காண்பிக்காமல் சும்மா இருக்க முடியாது. இப்படி இருக்கையில், பல கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு, நன்றாக ஆடினால் கிடைக்கும் பாராட்டு, புகழ், பணம் ஆகிய இத்தனை தூண்டுகோல்கள் இருக்கும்போது ஒரு வீரரை கண்காணிக்க எந்திரம் ஒன்று வருகிறது என்றால் அது இந்த உலகமயமாதல் காலக் கட்டம் சகல துறைகளிலும் ஏற்படுத்தும் நெருக்கடியும், விளையாட்டு தொழில்மயமாகி வருவது மட்டுமின்றி, அதனை வளர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் அமைப்புகள் விளையாட்டின் மீது ரசிகர்களுக்கு உள்ள அதீத ஆர்வத்தை காசாக்க வீரர்களை தங்கள் விருப்பம் போல் வளைக்கவே இப்படிப்பட்ட நவீனத்துவங்களை பயன்படுத்தி நம் கண்ணைக்கட்டி ஏமாற்றுகின்றன. இதற்கு கிரிக்கெட், கால்பந்து போன்ற மக்கள் விரும்பும் ஆட்டமும் இலக்காவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாய் உள்ளது.

ஏற்கனவே தொழில்நுட்ப பயங்கரவாதம் நம்மை உலுக்கிவரும் இந்தச் சூழலில் மனித வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் கண்காணிப்பு முறை நம்மை சூழ்வது ஆளுமைச் சிதைவு என்ற மன நோயையே ஏற்படுத்தும் என்பது உளவியல் நிபுணர்களின் கவலையாகும்.

Share this Story:

Follow Webdunia tamil