கிரிக்கெட் ஆட்டக்களமும் அறிவுரைகளும்
முன்பை விட தற்போது, கிரிக்கெட்டில் ஆட்டகளம் பற்றிய பிரச்சனைகள் அதிகம் அலசப்படுகின்றன. தெ.ஆ. துவக்க ஆட்டக்காரரும், தற்போதைய வர்ணனையாளருமான பேரி ரிச்சர்ட்ஸ், இந்தியாவின் நாயகனான சச்சின் டெண்டுல்கரை, துணைக் கண்ட செத்தகள ஆட்டக்காரர் என வர்ணித்தது நினைவிருக்கலாம்.
ஆனால் டெண்டுல்கர் அடித்த சதங்களில் சரிபாதி சதங்கள் அவர் வர்ணிக்கும் மேலெழும்பும் ஆட்டக்களத்தில் அடித்ததே என்பது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எப்பொழுதும் இல்லாமல் இந்த செத்தகளம், நல்லகளம் என்ற பேச்சும், அறிவுரைகளும் அதிகமாக இப்பொழுது வழங்கப்படுகிறது. ஏன்?
1960-களில் இங்கிலாந்தில் உள்ள ஆட்டகளம் எல்லாமே மிக மோசமான மண் கலவையால் மிருதுவாகவும், பந்துகள் மிகத்தாழ்ந்தும்தான் சென்று கொண்டிருந்தன என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
அதன்பிறகும் கூட பல கோடி ரூபாய் செலவு செய்து புதிதாக மிக வேக ஆட்டக்களங்களை உருவாக்கியது மெர்ல்போன் கிரிக்கெட் கிளப். ஆனால் அப்போதும், ஆஸி. மற்றும் மே.இ. தீவுகளின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோற்றுப்போய்க் கொண்டுதான் இருந்தது இங்கிலாந்து அணி.
70 களின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகத்தான் கவாஸ்கர் தனது 34 சதங்களையும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 15 சதங்கள் இந்தியாவிற்கு வெளியே அடித்தார் என்பது, ஆட்டகளம் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல என்பதை உணர்த்துகிறது.
இந்தியாவில் 70-களிலும், அதற்கு முன்னரும் கூட ஆட்டகளம் முதல் இரண்டு நாள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், கடைசி 2 நாட்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாகவே உருவாக்கப்பட்டு வந்தன.
74-75 களில் கிளைவ் லாய்ட் தலைமையில் வந்த மே.இ. தீவு அணி இங்கு வந்து 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 77-ல் இங்கிலாந்து 5 டெஸ்ட் போட்டித் தொடரில் 4 -1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதற்கு முன்பே 3-1 என்ற வெற்றிக் கணக்கில் ஆஸி. அணியும், இங்கு தொடரை கைப்பற்றி சென்றிருக்கிறது.
அப்போதைக்கெல்லாம் ஆட்டகளம் பற்றிய விமர்சனங்கள் இப்பொழுது பேசப்படும் அளவிற்கு பேசப்பட்டதில்லை.
1979-ல் கபில்தேவ் போன்ற ஆட்டக்காரர்கள் வந்தபிறகு இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது என்பது கிட்டத்தட்ட இயலாத காரியமான போதுதான், "துணைக்கண்டம்" என்றும், "செத்த ஆட்டகளம்" என்றும் இந்திய ஆட்டக்களங்கள் மேற்கத்திய ஊடகங்களாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலம் நிலைக்காத முன்னாள் கிரிக்கெட் வீரர்களாலும், மோசமான ஆட்டகளம் என வர்ணிக்கத் தலைப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
வேகமான, உயரமாக மேலெழும்பும் ஆட்டக்களம் என்பது வேறு "உண்மையான ஆட்டகளம்" (ழுநரேiநே றுiஉமநவள) என்பது வேறு.
முதல் இரண்டு நாட்கள் வேகமாகவும், பந்துகள் அதிக உயரம் எழும்புவனவாகவும், பிறகு மேல்பரப்பு புற்கள் குறையக்குறைய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமாக இருப்பதுதான் "உண்மையான ஆட்டக்களம்" ஆகும். அதுபோன்ற ஆட்டகளங்களுக்கு உதாரணமாக, உலகிலேயே ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பர்ன் மைதானங்களையும், இந்தியாவின் கல்கத்தா, சென்னை, மும்பை மைதானங்களையும் மட்டுமே குறிப்பிடமுடியும்.
இங்கிலாந்தில் உள்ள ஆட்ட களங்கள் முதல் இரண்டு மணி நேரம் குளிர்ந்த காற்றினால் "ஸ்விங்" செய்யும் பவுலர்களுக்கு உதவிகரமாக இருக்கும். அவ்வளவே, அதன்பிறகு மீதி ஐந்து நாட்களும், ஆட்டக்களம் அவர்கள் குறிப்பிடும். "செத்தகளம்" தான்.
ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த், மே.இ. தீவுகளில் உள்ள ஜமய்கா, தெ.ஆ. வில் உள்ள ஜோகன்னஸ்பர்க் இவைகளே 5 நாட்களும் வேகமாக ஆடும் ஆட்டக்களமாகும். ஆனால் இங்குமே ஒரு பேட்ஸ்மென் நன்றாக ஆடத்துவங்கிவிட்டால், இஷ்டம் போல் ஆடலாம். மேலெழும்பும் ஆட்டக்களம் எப்போதுமே நல்ல பேட்ஸ்மென்களுக்கு சுலபமான விஷயமாகும்.
இந்திய அணி வெளிநாடுகளில் சரியாக ஆடாததற்கு காரணம், வேகமாக, உயரெழும்பும் ஆட்டக்களங்கள் என ஊடகங்கள் பயமுறுத்துகின்றன. தற்போது இருக்கும் ஆட்டக்காரர்களுக்கு இயல்பான, லாவகமான ஆட்டம் ஆடுவதற்கான வாய்ப்புகள் நெட் பயிற்சியில் கொடுக்கப்படுவதில்லை என்பதே உண்மை.
புதிய ஆட்டக்காரர்களுக்கு "கோச்சிங் மேனுவல்" படி ஆடும் உத்திகள் மட்டுமே சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பேட் தொடக்கூடிய எல்லைக்குள் பந்து இருந்தால் "டிரைவ்" ஆடு என்பது போல் பதிய வைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் சற்று வேகமாக பந்து வரும்போது இந்த யுக்தி மட்டையின் விளிம்பில் படுவதில் கேட்ச்சாய் முடிகிறது.
அங்கு ஆடும்போது பந்து வந்த பிறகு பின்னங்காலை நகர்த்தி ஆடும்முறையே சிறந்தது. ஆனால் கோச்சிங் மேனுவலில் குறிப்பிட்டுள்ளது போல், இங்கு பின்னங்கால் நகர்த்தி ஆடும் ஆட்டம், அளவு சற்று குறைவாக விழும் பந்துகளுக்கு மட்டுமே. அதுவும் ரொம்ப உயரமாக எழும்பும் பந்துகளை லாவகமாக விக்கெட் - கீப்பருக்கு விட்டு விடுவது எப்படி என்பதுதான் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஹுக், புல் ஷாட் போன்றவைகளை பயிற்சி ஆட்டங்களிலோ, நெட்ஸிலோ உபயோகித்தால், பயிற்சியாளர் அந்த ஆட்டக்காரரை கேவலமாக பார்க்கும் போக்கினால் விளைவதே இந்திய அணி பேட்ஸ்மேன்கள் வெளிநாடுகளில் மோசமாக ஆடுவதற்கு காரணம்.
"ஆட்டக்களம்" பற்றிய பிம்பங்கள் ஒரு செய்தி ஊடக பொய். "அணுகுமுறை" எப்படி என்பது குறித்த தெளிவான திட்டங்கள்தான் முக்கியமே தவிர, செத்தகளம், நல்ல களம் அல்ல பிரச்சனை.
ஸ்டீவ் வாஹ் இங்கு ஆஸி. அணிக்கு தலைமை தாங்கி வரும்போது கூட இதைத்தான் குறிப்பிட்டார் : "நாங்கள் ஆட்டக்களங்கள் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை" என்றுதான் கூறினார்.
வெற்றி தோல்விகளை சகஜமாக எடுத்துக் கொள்ள முடியாத தெ.ஆப்ரிக்க, இங்கிலாந்து ஊடகங்களும், முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர்களான முதியோர்கள் கதையடிக்கும் கட்டுக்கதையே இந்த "ஆட்டக்களம்" பற்றிய பேச்சு.
ஏனெனில் இங்கிலாந்து பவுலர்கள் "ஸ்விங்" முறையை பந்து வீச்சில் அதிகம் கையாளுகிறார்கள். துணைக்கண்டங்களின் சீதோஷ்ணநிலை காரணமாக பந்து ஸ்விங் செய்வது அவர்களுக்கு கடினமாகும். தனிப்பட்ட திறமையின்மையை ஆட்டக்களம் மேல் போடுவது என்ன நியாயம்?
கபில்தேவ், இம்ரான்கான், வக்கார் யூனஸ், ஷோயப்அக்தர், இந்தியாவின் ஸ்ரீநாத், முன்பு மனோஜ் பிரபாகர் ஆகியோர் துணைக்கண்டங்களில் "ஸ்விங்" செய்யும் முறையை கற்றுக் கொள்ள வில்லையா?
ஆகவே தனிப்பட்ட திறமையும், உழைப்பும், அதீத கவனமும் இருந்தால்தான் எந்த ஆட்டக்களத்திலுமே நன்றாக ஆடமுடியும். "ஆட்டக்களம்" என்பதெல்லாம் ஒரு சாக்காக வேண்டுமானால் சொல்லலாம். இது கிரிக்கெட்டின் இரு பெரும் பிரிவுகளுக்கும் பொருந்தும் இங்கு வந்து சுழற்பந்தில் கோட்டைவிடும் வெளிநாட்டு அணிகளும், அங்கு சென்று வேகப்பந்தில் கோட்டைவிடும் துணைகண்டம் இரண்டுமே "அணுகு முறை"யில் மாற்றம் செய்யாததினால்தான் தோல்வியைத் தழுவுகின்றன என்பதுதான் யோசிக்க வேண்டிய விஷயம்.
புதிய ஆட்டக்காரர்களுக்கு "கோச்சிங் மேனுவல்" படி ஆடும் உத்திகள் மட்டுமே சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பேட் தொடக்கூடிய எல்லைக்குள் பந்து இருந்தால் "டிரைவ்" ஆடு என்பது போல் பதிய வைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் சற்று வேகமாக பந்து வரும்போது இந்த யுக்தி மட்டையின் விளிம்பில் படுவதில் கேட்ச்சாய் முடிகிறது.
அங்கு ஆடும்போது பந்து வந்த பிறகு பின்னங்காலை நகர்த்தி ஆடும்முறையே சிறந்தது. ஆனால் கோச்சிங் மேனுவலில் குறிப்பிட்டுள்ளது போல், இங்கு பின்னங்கால் நகர்த்தி ஆடும் ஆட்டம், அளவு சற்று குறைவாக விழும் பந்துகளுக்கு மட்டுமே. அதுவும் ரொம்ப உயரமாக எழும்பும் பந்துகளை லாவகமாக விக்கெட் - கீப்பருக்கு விட்டு விடுவது எப்படி என்பதுதான் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஹுக், புல் ஷாட் போன்றவைகளை பயிற்சி ஆட்டங்களிலோ, நெட்ஸிலோ உபயோகித்தால், பயிற்சியாளர் அந்த ஆட்டக்காரரை கேவலமாக பார்க்கும் போக்கினால் விளைவதே இந்திய அணி பேட்ஸ்மேன்கள் வெளிநாடுகளில் மோசமாக ஆடுவதற்கு காரணம்.
"ஆட்டக்களம்" பற்றிய பிம்பங்கள் ஒரு செய்தி ஊடக பொய் "அணுகுமுறை" எப்படி என்பது குறித்த தெளிவான திட்டங்கள்தான் முக்கியமே தவிர, செத்தகளம், நல்ல களம் அல்ல பிரச்சனை.