கால்பந்து, ஹாக்கி போன்ற ஆட்டங்களில்தான் நாம் "ஃபினிஷிங்" என்பதைப் பற்றி பேசிக் கேள்விப்பட்டிருக்கிறோம் கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகள், சமீபகாலங்களில் இருபது ஓவர் போட்டிகளில் ஃபினிஷிங் ஒரு முக்கியமான விஷயமாகி வந்துள்ளது.அங்காங்கே சொற்ப போட்டிகள்தான் மிகவும் விறுவிறுப்பாகச் சென்று கடைசி ஓவர் வரை செல்லும் மற்ற போட்டிகள் பெரும்பாலும் ஒருதலைபட்சமாகச் செல்வதே. ஆனால் சிறந்த அணிகள் விளையாடும்போது பலமான மன நிலை உள்ள வீரர்களைக் கொண்ட அணி 50 ஓவர் வரை இழுத்தடிக்காமல் 48 அல்லது 49வது ஓவரிலேயே இலக்கை எடுத்து முடிக்கும். தோனி முன்னமேயே ஆட்டத்தை முடிக்கும் திறமை உடையவர்தான் என்றாலும் இந்தியா போன்ற அணியில் அவருக்கு துணையாக ஆடும் பின்கள வீரர்கள் பலவீனமாக இருப்பதால் அவர் அந்த ரிஸ்குகளை எடுப்பதில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து பிரஷர் ஆட்டங்களில் இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறார்!புள்ளிவிவரங்கள் எடுத்துரைக்கும் தோனியின் திறமை!200
ஒருநாள் போட்டிகளில் அவர் இதுவரை 50 முறை நாட் அவுட்டாக இருந்துள்ளார், இது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு. 44
அரை சதங்களையும் 7 சதங்களையும் எடுத்துள்ள தோனி சராசரியாகப் பார்த்தால் ஒவ்வொரு 4 போட்டிகளிலும் அரை சதம் எடுத்து விடுகிறார்.இதுவரை 6,632 ரன்கள் எடுத்துள்ள தோனியின் 4,237 ரன்கள் இந்திய வெற்றியில் முடிந்துள்ளது.இலக்கைத் துரத்தும்போது தோனியின் சராசரி 104.89 அனைத்தும் இந்திய வெற்றித் துரத்தல்களே. துரத்தல் வெற்றியில் மட்டும் தோனி இதுவரை சுமார் 2,000 ரன்களைக் குவித்துள்ளார்.49
வெற்றித் துரத்தல்களில் தோனி 30 முறை நாட் அவுட்டாக இருந்துள்ளார். இதுவரை ஆட்டத்தின் சிறந்த 'ஃபினிஷர்" என்று கருதப்பட்டவர் ஆஸ்ட்ரேலியாவின் ஒருநாள் மேதை மைக்கேல் பெவன். அதற்கு அடுத்தபடியாஅக் லான்ஸ் குளூஸ்னர், வேண்டுமானால் ஜாண்ட்டி ரோட்சைச் சேர்த்துக் கொள்ளலாம், நம்பமுடியாத துரத்தல்களைச் செய்து வெற்றி பெறச் செய்வதில் பாகிஸ்தானின் அப்துல் ரசாக். ஆனால் இவர்களி பெவன் தவிர மற்றொரிடம் சீரான தன்மை இருக்காது. தோனியை ஒப்பு நோக்குகையில் மேலே குறிப்பிட்ட எந்த ஒரு வீரரும் அருகில் நிற்க முடியாது.பெவனின் ஸ்ட்ரைக் ரேட் 7 ரன்கள்தான் அவரால் கடைசியில் பவுண்டரிகளையும் சிக்சரையும் அடிக்க முடியாத காரணத்தினால்தான் அவர் அணியில் அதிக காலம் நீடிக்கமுடியவில்லை. தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 88.32!
தோனி பற்றி ஜெயவர்தனே குறிப்பிடுகையில், தோனி போன்ற ஒரு பேட்ஸ்மென் கடைசி வரை நின்றால் எங்களால் வெகுவாக ஒன்றும் செய்து விட முடியாது, அவர் ஒரு கிரேட் பினிஷர், பலமான குணாதசியம் படைத்தவர்" என்றார்.
மைக்கேல் கிளார்க் அன்று 13 ரன்களை தோனி கடைசி ஓவரில் அடித்து வெற்றி பெற்றவுடன் கூறுகையில் "அவர் கிளாஸ் பிளேயர், புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன, அவர் பந்துகளைக் கொல்பவர், மெக்காய் பந்தில் அவர் அடித்த சிகரே இதற்குச் சாட்சியம்" என்றார்.
அடிலெய்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் நேர் திசையில் 112மீ சிக்சரை அடித்ததில்லை.
கேப்டன் பொறுப்பையும் ஏற்று கொண்டு விக்கெட் கீப்பிங் பிரஷருடன், பினிஷிங் நிலையில் நெருக்கடியை வெற்றி கொள்கிறார் என்றால் கபில்தேவுக்குப் பிறகு இவர் ஒரு வலுவான மனோநிலை படைத்த வீரர் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.
தோனி விக்கெட்டை வீழ்த்தும் வரை எதிரணியினருக்கு வெற்றி உத்திரவாதம் இல்லை என்ற நிலையை அவர் ஒருநாள் போட்டிகளில் உருவாக்கியுள்ளார்.
முத்தரப்பு ஒருநாள் தொடரை முதன் முதலாக ஆஸ்ட்ரேலியாவில் வென்றது முதல் உலகக் கோப்பை வெற்றி வரை தோனி இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் ஒரு எளிதில் வீழ்த்த முடியாத அணியாக மாற்றியுள்ளார்.
சமயங்களில் இலக்கைத் துரத்தும்போது மந்தமாக ஆடுவது நமக்கு ஒரு படபடப்பை ஏற்படுத்தினாலும் அவர் ஒரு முறையுடன் ஆடிவருகிறார். இதில்தான் அவர் உண்மையில் "கேப்டன் கூல்"!
டெஸ்ட் போட்டிகளின் தன்மை அவரது இயல்புக்கு ஏற்றதல்ல. அங்கு கேப்டன் கூல் வேலை எடுபடாது அங்கு விஷயங்களை நடக்கச் செய்யவேண்டும். இங்கு பொறுமை காக்கவேண்டும். ஒருநாள் போட்டிகளின் வலுவான மனோநிலைஇயை டெஸ்ட் போட்டிகளின் பக்கமும் தோனி திருப்பினால் 4- 0, போன்ற மொற்றொழிப்புகளை இந்தியா தவிர்த்திருக்கலாம்.