Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவை மோசமாக சித்தரித்த கேரி கர்ஸ்டன் பயிற்சியாளரா?

Advertiesment
இந்தியா தென் ஆப்பிரிக்கா கேரி கர்ஸ்டன் கிரேக் சாப்பல்

Webdunia

, வியாழன், 29 நவம்பர் 2007 (17:32 IST)
பயிற்சியாளர் இல்லாமல் ஒரு அணி இன்றைய கிரிக்கெட் உலகில் இருப்பது, ஏதோ மின்சார வசதி இல்லாத ஒரு கிராமத்திற்கு சமம் என்பது போல் ஆகிவிட்டது.

கிரேக் சாப்பலின் மோசமான பயிற்சி காலம் முடிவடைந்து அடுத்ததாக இந்திய பயிற்சியாளர் யார் என்ற தேர்வு முயற்சியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட சில நடவடிக்கைகள், அணுகிய முன்னாள் வீரர்கள் அனைத்தும் கோமாளித்தனமாக நடந்து முடிந்தன.

webdunia photoFILE
தற்போது யாரும் சற்றும் எதிர்பாராதவிதமாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கர்ஸ்டனுடன் ஏறக்குறைய அனைத்துப் பேச்சு வார்த்தைகளும் முடிந்துள்ள நிலையில் அவர் இந்திய பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளார்.

1996ம் ஆண்டு இந்தியாவில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அணியில் இருந்த கேரி கர்ஸ்டன், இந்தியா பற்றி மிக மோசமாக தனது நாட்குறிப்பில் எழுதியிருந்தார் என்பதும், இந்த நாட்குறிப்பின் சில அம்சங்கள் தென் ஆப்பிரிக்காவில் பொது மக்கள் வாசிப்பிற்கு வெளியிடப்பட்டது என்பதும், பின்னர் இதனை டெலிகிராப் பத்திரிக்கை மறு பிரசுரம் செய்தது என்பதும் நம் கவனக்தை ஈர்ப்பவை.

அதாவது இனிமேல் இந்தியா வருவெதென்றால் ஒரு தடவைக்கு 2 தடவை யோசிப்பேன் என்று கூறியுள்ள அவர், குடிசைகளும், மோசமான தரத்தில் உள்ள இறைச்சியும், எப்போதும் பிரச்சனையாகும் நேரடி விமானங்களும் என்று தனக்கு தெரிந்த இந்தியாவை கற்பனைத் திறனுடன் அவிழ்த்து விட்டுள்ளார்.

ஷேன் வார்ன் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம், ஷேன் வார்னை விட அவர் கையில் கொண்டு வரும் பீன்ஸ் டப்பாக்களுக்கே ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்ததையும் நாம் அறிவோம். அதாவது, எப்போதோ சமைத்து தகரடப்பாவில் அடைத்து வைக்கப்பட்ட பீன்ஸ் உடலுக்கு ரொம்ப ஆரோக்கியமானது, இங்கு 5 நட்சத்திர விடுதிகளில், நாட்டின் பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்களை விட அதிக தரத்தில் வழங்க்ப்படும் உணவுகள் மிக மோசம், இதுதான் மேற்கத்திய சப்பைக்கட்டுக்கு சிறந்த உதாரணம்.

சரி! கர்ஸ்டனின் இந்தியா குறித்த "சிந்தனைகளை" தொடர்ந்து பார்ப்போம்: “மேற்கத்திய வாழ்க்கை முறைகளை ஒரு ஆடம்பரமாக பார்க்கும் ஒரு இடத்தில் 62 நாட்கள் இருக்கவேண்டுமென்றால், பலவீனமான இதயம் கொண்டவர்களுக்கு அது ஒரு பெரிய இலக்காகவே இருக்கும்... இந்தியாவில் வெளியே செல்வதற்கு நிஜமான இடங்கள் எதுவும் இல்லை, திரும்பத் திரும்ப ஹோட்டல்களுக்குத்தான் செல்ல வேண்டும், இது நம்மை பெரும் சோர்வில் ஆழ்த்தக் கூடியது"

"இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கிரிக்கெட்டை பரப்புவதற்காக, நாங்கள் குதிரை வண்டிகள் மட்டுமே உள்ள இடங்களில் ஆடவைக்கப்பட்டோம், கார்கள் இல்லாது தெருக்களில் வெறும் மாடுகள் மட்டுமே சுற்றித் திரியும் ஊர்களில் நாங்கள் விளையாடினோம், இந்த நிலையில் கிரிக்கெட்டை பரப்புவதற்கு ஒருவருக்கு நிறைய நகைச்சுவை உணர்ச்சி வேண்டும்"

"இது போன்ற மோசமான சூழ்நிலைகளில் ஒரு அணியிடம் உயர்மட்டத் திறமையை வெளிப்படுத்துமாறு எதிர்பார்ப்பது அபத்தமானதோடு, நியாயமும் அல்ல"

10 ஆண்டுகளுக்கு முன் கேரி கர்ஸ்டன் கூறியவை இவை.

இன்று அவர் அப்படியே மாற்றி, இந்த பண்பாட்டை அனுபவிக்கவேண்டும், எனக்கு இந்தியா எப்போதுமே ஒரு சுவாரஸ்யமான நாடாக இருந்திருக்கிறது என்றெல்லாம் புருடா விடத்தான் போகிறார். நம் இந்திய கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஊடகங்கள் வேடிக்கைப்பார்த்துக் கொண்டு, அவர் கூறுவதை கேள்வியின்றி அப்படியே பிரசுரிக்கத்தான் போகிறது.

கர்ஸ்டன் இப்போது தனது கருத்தை உண்மையிலேயே மாற்றிக் கொண்டிருந்தாலும், அது இந்திய பயிற்சியாளர் பொறுப்பினால் கிடைக்கும் ஊதியத்தினாலேயன்றி வேறு அல்ல. இது போன்று இந்திய பண்பாடு, இந்திய பழக்க வழக்கங்கள், இந்திய உணவு இவற்றை பற்றி எதிர்மறையான, மோசமான எண்ணங்களை வைத்திருப்பவர், நமது அணியில் உள்ள பல்வேறு குண நலன்கள் நிறைந்த வீரர்களுடன் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவார்? இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளதா?

சரி ஒரு பயிற்சியாளராக அவரது அனுபவங்கள் என்ன என்பதை பார்ப்போம்: 2004ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக நேர்காணலுக்கு சென்றபோது இவர் நிராகரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

சாதாரண தெற்கு ஆஸ்ட்ரேலிய அணியையே தனது பயிற்சியால் முன்னுக்கு கொண்டுவர முடியாத கிரேக் சாப்பலை நியமித்து சூடுபட்ட பிறகும், சாப்பல் அளவுக்கு கூட பயிற்சியில் அனுபவமில்லாத கேரி கர்ஸ்டனை நியமித்து பட்ட இடத்திலேயே மீண்டும் காயப்படுத்திக் கொள்ள இந்திய வாரியம் தயாராகிவிட்டது என்றுதான் கூறத் தோன்றுகிறது.

2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளிலும், அதற்குப் பிறகும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமித்தது கிரிக்கெட் வாரியம். அடுத்த உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது.

நன்றாக விளையாடிக் கொண்டிருந்த சேவாக், சிறந்த கேப்டனாகத் திகழ்ந்த கங்கூலி, கய்ஃப், சுரேஷ் ரெய்னா, இர்ஃபான் பத்தான் ஆகியோரை காலி செ‌ய்து, இந்திய அணியையே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டுச் சென்றார் கிரேக் சாப்பல்.

இப்பொழுதும் இந்திய அணி நன்றாகத்தான் ஆடிக்கொண்டிருக்கிறது. கர்ஸ்டனை நியமிக்க முயற்சிக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நோக்கம்தான் என்ன? ஒன்றும் புரியவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil