அவ்வளவுதானா ஹர்பஜன்? 100வது டெஸ்ட் பெருமையுடன் டாடா?
, சனி, 23 பிப்ரவரி 2013 (16:39 IST)
ஹர்பஜன் சிங்கை மீண்டும் இந்திய அணியில் சேர்த்திருப்பது குறித்து பெரிய கேள்விகள் வலம் வரத் தொடங்கியுள்ளன. அதுவும் இடது கை சுழற்பந்து வீச்சாளர்களை தடவும் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக ஓஜாவை உட்காரவைத்து விட்டு ஹர்பஜனை எடுத்தது ஏன் என்ற கேள்விகள் தற்போது கிளம்பியவண்ணம் உள்ளன.காரணம் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக சென்னை டெஸ்ட் போட்டியில் அவரது பந்து வீச்சு! அவர் தனது பழைய பந்துவீச்சை மறந்துவிட்டார். பந்துகள் திரும்புவேனா என்று அடம்பிடிக்கிறது. தொலைக்காட்சியை நாம் ஓரமாக நின்று பார்த்தால் ஒருவேளை திரும்புவது போல் தோன்றலாம், இதுவும் ஒரு மாயைதான்!100
வது டெஸ்ட் போட்டியை விளையாடிவிட்டுப் போகட்டும் என்று அணியில் தேர்வு செய்ததாக சில தரப்புகள் கூற, ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 16 டெஸ்ட் போட்டிகளில் 90 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் ஹர்பஜன் அதுதான் அவரை மீண்டும் அணியில் சேர்ப்பதற்கு காரணம் என்று வேறு தரப்பினரும் வித்தியாசமான விளக்கங்கள் வருகிறது.ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ஹர்பஜன் சிங் மீதான கிண்டலும் கேலியும் தொடர்கிறது. ஒரு ட்வீட்டில் ஹர்பஜனுக்க்கு 5 விரல்களுடன் கை இருப்பதை ஸ்ரீசாந்திடம் நிரூபித்துவிட்டார் அவ்வளவுதான் என்று சரியாந்ன கிண்டலடித்துள்ளார் ஒருவர்.இன்னொருவர் சேவாக், யுவி, ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் எப்போதும் மாப்பிள்ளை தோழர்களாகவே உள்ளனர் மாப்பிள்ளையாக மாட்டார்கள் போலிருக்கிறது என்று ட்வீட் செய்துள்ளார்.ஹர்பஜன் சிங்கின் இந்த நிலைமைக்குக் காரணம் ஐ.பி.எல். கிரிக்கெட்தான். 2மாதங்களில் ஏகப்பட்ட ஓவர்களை வீசுகிறார் அதிலும் பேட்ஸ்மன்களை கட்டுப்படுத்த அவரது பிளைட், லைன், லென்த் ஆகியவை தியாகம் செய்யப்பட்டுள்ளது. அப்படியும் அங்கும் ஒன்றும் பெரிய பந்து வீச்சை அவர் சாதித்து விடவில்லை.பணத்திற்காக சென்று தனது இன்னும் 4 அல்லது 5 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வை கோட்டைவிட்டார் ஹர்பஜன் சிங்.மற்றொருவர் ட்விட்டரில் கூறியுள்ளதுபோல் அஷ்வின் 10 விக்கெட்டுகளை எடுக்கட்டும் என்று நான் விக்கெட்டுகள் எடுக்காமல் தியாகம் செய்தேன் என்று கூட ஹர்பஜன் கூறிவிடுவாராம்! எப்படியிருக்கிறது கிண்டல்?அவர் முதலில் அவரது பயிற்சியாளரிடம் மீண்டும் சென்று மறுபடியும் அவரது சுழற்பந்து அடிப்படைகளை மீட்டெடுத்து பயிற்சியில் ஈடுபடவேண்டும், உள்நாட்டு ரஞ்சி கோப்பை, துலிப் கோப்பை கிரிக்கெட்டுகளை தவிர்க்காமல் ஆடவேண்டும். முக்கியமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டை விட்டொழிக்கவேண்டும்.ஐ.பி.எல். கிரிக்கெட் ஓய்வு பெற்றவர்களுக்கான கிரிக்கெட் என்று அதனை ஒதுக்கவேண்டும். அல்லது டெஸ்டிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வு பெற்றவர்கள் ஆடும் ஐ.பி.எல். கிரிக்கெட்டை ஹர்பஜன் ஆட வேண்டும்.எதுவும் இல்லாமல் இந்திய அணியில் தற்போது ஆளில்லா இடத்தை பூர்த்தி செய்ய உள்ளே வந்து விட்டு அதனைத் தகக்வைக்க முடியாது.அணித் தேர்வுக்குழுவும் மற்ற ஆஃப் ஸ்பின்னர்களை பரிசீலிக்கவேண்டும். ரஸ்சூலை நிச்சயம் முயற்சிக்கவேண்டும். மீண்டும் மீண்டும் முடிந்து போனவர்களை வைத்துக் கொண்டு வெற்றியை பற்றி யோசிக்கக் கூட முடியாது..