Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிளீன் ஆக இருக்குமா ஐபிஎல்? - கேள்விக்கு அசட்டு ஜோக் அடித்த தோனி!

கிளீன் ஆக இருக்குமா ஐபிஎல்? - கேள்விக்கு அசட்டு ஜோக் அடித்த தோனி!
, வியாழன், 17 ஏப்ரல் 2014 (15:25 IST)
இந்த ஆண்டு ஐபிஎல். சூதாட்டமில்லாமல், ஊழலில்லாமல் சுத்தமாக இருக்குமா என்று கேப்டன் தோனியிடம் கேட்டதற்கு அசட்டு ஜோக்கை பதிலாக அளித்து தனது 'பொறுப்புணர்ச்சியை' காட்டியுள்ளார்.
"நாம் லாண்டரி ஏதாவது முயற்சி செய்துபார்க்கலாம், அதுதான் எங்களை சுத்தமாக வைத்திருக்கும்"- இதுதான் தோனியின் பதில். இந்த முத்தை அவர் நேற்றைக்கு முதல்நாள் உதிர்த்துள்ளார்.
 
சரளமாக பேசும் திறமை உடையவர் தோனி, ஆனால் அதில் உண்மையும், ஈடுபாடும் கடப்பாடும் இருக்காது என்பதை அவரது அசட்டு ஜோக் உறுதி செய்துள்ளது.
 
எவ்வளவு கைதுகள், வழக்குகள், விசாரணைகள், உச்சநீதிமன்றத்தின் 'குமட்டுகிறது' போன்ற கருத்துகள், சுனில் கவாஸ்கரை நியமித்தது என்றெல்லாம் எதார்த்தமும் நடப்பும் மிகவும் சீரியசாக ஒரு விஷயத்தை அணுகிக் கொண்டு வர அதைப்பற்றியெல்லாம் ஒன்று பேசாமல் வழக்கம் போல் இருக்கலாம் அல்லது உருப்படியாக பொறுப்பாக ஏதாவது கூறலாம், லாண்டரிதான் நன்றாக எங்களை சுத்தம் செய்யும் என்றால் அதில் நகைச்சுவையும் இல்லை என்றே நமக்கு தெரிகிறது.

தற்போது அரபு நாட்டில் நடைபெற்று வருகிறது ஐபிஎல். ஷார்ஜாவின் கடந்த கால வரலாறு அதனை ஊழலிலிருந்து விடுவிக்காது. துபாய் சூதாட்டக் காரர்களின் புகலிடம், அங்குதான் இந்த ஐபிஎல். நடைபெறுகிறது. ஒருவேளை அங்கு லாண்டரியும் நிறைய இருக்கும்போலிருக்கிறது. ஒரு வேளை தோனி அதைப்பார்த்து விட்டு கூட இப்படி ஒரு அசட்டு ஜோக்கை அடித்திருக்கலாம்.
webdunia
அங்கு பணம் அதிகம் மேலும் ஊழல், சூதாட்டம் பற்றியெல்லாம் கவலைப்படாத மக்கள், ரசிகர்கள் அங்கு இருக்கின்றனர். டிக்கெட் விலை இந்தியாவை விட பல மடங்கு அதிகம் நிர்ணயிக்கலாம், இன்னும் சொல்லப்போனால் ஐபிஎல். கிரிக்கெட் இனி துபாய், ஷார்ஜாவில் நடந்தேயாகவேண்டும் என்ற நிர்பந்தமும் கூட ஏற்படலாம். ஏனெனில் அங்கிருந்து வரும் வருமானம் கொஞ்ச நஞ்சமாக இருக்காது!

ஐபிஎல். கிரிக்கெட்டை எதிர்த்து எழும்பிய குரல்கள் துபாயின் வண்ணமய தொடக்க 'விருந்து' நிகழ்ச்சிகளில் அடங்கிப் போயிருக்கும்.
webdunia
ஆனால் ஐபிஎல். கிரிக்கெட்டின் உள்ளே இருப்பவர்களோ, உச்சநீதிமன்ற தலையீடு, சூதாட்ட விசாரணை  ஐபிஎல். பங்குதாரர்களை பெரிதும் அச்சப்படுத்தியுள்ளதாகவே  செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இந்தச் சூழலில் தோனி அடித்த ஜோக், ஊழலும், அராஜகமும் மலிந்து வரும் இந்தியாவில், செல்வந்தர்களுக்கும் பரம் ஏழைகளுக்குமான பொருளாதார இடைவெளி,  பயங்கரமாக அதல பாதாள இடைவெளியாக,  இருக்கும் இந்த வேளையில், தேர்தல் கள கோணங்கிப் பேச்சுக்களையும், அறிவிப்புகளையும் ஜாலியாக படித்து மகிழும் மன நிலையை ஒத்திருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil