Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் 18 ஆண்டுகள் காத்திருந்தேன்… அனுஷ்கா சர்மா 11 ஆண்டுகள் காத்திருந்தார் –கோலி உருக்கம்!

Webdunia
புதன், 4 ஜூன் 2025 (10:04 IST)
கடைசியில் அது நிகழ்ந்தே விட்டது. 18 ஆண்டுகளாக கோப்பையை எப்போது ஆர் சி பி அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு, அதன் ரசிகர்களுக்கு இருந்து வந்தது போலவே, 17 ஆண்டுகளாகக் கோப்பையே வெல்லாத அணி என்ற கேலிகளும் அந்த அணி மேல் எழுந்தன. இரண்டுக்குமான பதிலாக நேற்று ஐபிஎல் கோப்பையை ஆர் சி பி அணி கையில் ஏந்திவிட்டது. அதே போல அந்த அணிக்காக தொடர்ந்து 17 ஆண்டுகளாக ஆடிவந்த கோலி மீதும் கிண்டலும் விமர்சனங்களும் எழுந்தன.

கோப்பையை வென்ற பின்னர் பேசிய கோலி “இந்த வெற்றி அணிக்கும், அதன் ரசிகர்களுக்குமானது. நான் இந்த அணிக்காக என்னுடைய இளமை, உற்சாகம் மற்றும் அனுபவம் என அனைத்தையும் கொடுத்துள்ளேன். ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்ல முயற்சித்துள்ளேன்.  இறுதியாக அதைப் பெறுவது நம்பமுடியாததாக உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸின் கடைசி பந்து வீசப்பட்ட பிறகு நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்” எனக் கூறியுள்ளார்.

அதே போல தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மாவின் ஆதரவு குறித்து பேசும்போது “எனக்காக அவர் 2014 ஆம் ஆண்டு முதல் ஆர் சி பி போட்டி நடக்கும் மைதானங்களுக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்தக் கோப்பைக்காக அவர் 11 ஆண்டுகள் காத்திருந்தார். அவர் எனக்காக செய்யும் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் உலகமே அவங்கதான்… எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

அடுத்த கட்டுரையில்