Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

24வது முறையாக சச்சின்...!

Advertiesment
சச்சின்
, வெள்ளி, 23 நவம்பர் 2012 (18:33 IST)
FILE
தொடர்ந்து பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்து வரும் சச்சின் டெண்டுல்கர் இன்று மும்பையில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் ஏமாற்றம் அளித்தார்.

8 ரன்களில் அவர் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மான்ட்டி பனேசர் பந்தில் பவுல்டு ஆனார்.

இது போன்று இடது கை சுழற்பந்து வீச்சாளரிடம் அவர் ஆட்டமிழப்பது 24ஆம் முறை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

192வது டெஸ்டில் விளையாடும் சச்சின் டெண்டுல்கர் 24வது முறையாக இடது கை சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழப்பது ஒரு புறம் இருந்தாலும் தொடர்ச்சியாக பவுல்டு ஆவதில் அடுத்த சாதனை படைப்பார் என்று தெரிகிறது.

முதல் டெஸ்டில் ஆக்ரோஷமாக ஆட முயன்று ஆமதாபாதில் கிரேம் ஸ்வானிடம் ஆட்டமிழந்தார். அதிக ரன்கள் எடுக்கவில்லை.

ஒரு காலத்தில் உலகின் அச்சம்தரும் ஸ்பின்னர்களான முரளிதரன், ஷேன் வார்ன் ஆகியோரை புரட்டி எடுத்த கைகள் இன்று தொடர்ந்து சோர்ந்து போய் ஆட்டமிழப்பது சச்சினின் ஆதர்ச ரசிகர்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும்.

எங்கு போயிற்று ஆக்ரோஷம்? மன ரீதியாக நான் கிரிக்கெட் ஆட்டத்திற்கு தயாராக இருக்கிறேன், இன்னும் பேட்டிங்கை நான் மகிழ்ச்சியுடனேயே விளையாடுகிறேன் என்று கூறிவருகிறார் சச்சின் டெண்டுல்கர்.

அவரிடம் ஒரே கேள்வியை கேட்கவேண்டும்: முரளி, ஷேன் வார்ன், கிளென் மெக்ரா, கார்ட்னி வால்ஷ், கர்ட்லி ஆம்புரோஸ், இயன் பிஷப், ஆலன் டோனல்ட், டேல் ஸ்டெய்ன், மோர்கெல், ஷான் போலாக், ஃபானி டிவிலியர்ஸ், ஷோயப் அக்தர், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சக்லைன் முஷ்டாக் என்று பட்டியல் இன்னும் நீளும்... இவர்களையெல்லாம் சிறப்பாக ஆடிய அதே மகிழ்வுடன் இன்று சொத்த வீச்சாளரான மாண்ட்டி பனேசரிடம் அவுட் ஆகும் போதும் அதே மகிழ்ச்சியுடன் ஆடுகிறேன் என்று சச்சினால் உறுதியாக கூற முடியுமா?

சச்சின் உண்மையான, நேர்மையான பதிலைக் கூறுவாரா?

Share this Story:

Follow Webdunia tamil