Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2012ஆம் ஆண்டின் அபார ஒருநாள் இன்னிங்ஸ்கள்!

Advertiesment
2012 கிரிக்கெட்
, புதன், 19 டிசம்பர் 2012 (13:31 IST)
FILE
வீரத் கோலி 133 நாட் அவுட்!

ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிராக ஹோபார்ட் நகரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியாவின் வீரத் கோலி 86 பந்துகளில் 133 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். இதனால் 320 ரன்கள் இலக்கு 37 ஓவர்களில் இந்திய வெற்றியாக முடிந்தது.

வீரத் கோலி 183 ரன்கள்!

டாக்காவில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் நிர்ணயித்த 330 ரன்கள் இலக்கை ஒன்றுமில்லாமல் செய்தார் கோலி. 148 பந்துகளில் 183 ரன்களை விளாசினார் அவர். இந்தியா ஒருநாள் போட்டிகளில் வெற்றிகரமாகத் துரத்திய அதிகபட்ச இலக்காகும் இது.

வங்கதேச வீரர் அனாமுல் ஹக் 120 ரன்கள்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக குன்லாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் வங்கதேச வீரர் அனாமுல் ஹக் 120 ரன்களை விளாசினார். வங்கதேசம் 292 ரன்கள் எடுக்க மேற்கிந்திய தீவுகள் 132 ரன்களுக்கு மடிய வங்கதேசத்திற்கு அபார வெற்றி!

webdunia
FILE
கெவின் பீட்டர்சன் 130

துபாயில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 3- 0 என்று தொடரைக் கைப்பற்றிய போட்டியாகும் இது. இதற்கு முதல் போட்டியிலும் சதம் அடித்த பீட்டர்சன் இந்தப் போட்டியில் 130 ரன்களை 153 பந்துகளில் எடுத்து வெற்றி பெறச்செய்தார்.

திலகரத்னே தில்ஷான் 160 நாட் அவுட்!

ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் மிக முக்கியமான போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தில்ஷான் 160 ரன்களை விளாசினார். நம் கோலி 133 ரன்களை விளாசி 13 ஓவர்கள் மீதம் வைத்து வெற்றி பெற்றாரே அதே போட்டிதான் இதுவும்! ஆனால் தில்ஷான் புரட்டி எடுத்த மிகச்சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் ஆகும் இது.

webdunia
FILE
கிறிஸ் கெய்ல் அதிரடி 125

கிங்ஸ்டன் ஓவலில் நடைபெற்ற நியூசீலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 9 மிகப்பெரிய சிக்சர்களையும் 8 காட்டு பவுண்டரிகளையும் அடித்து 107 பந்துகளில் 125 ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் 315 ரன்கள் குவித்து 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முஷ்பிகுர் ரஹிம் 46 நாட் அவுட்!

46 நாட் அவுட்டெல்லாம் ஒரு இன்னிங்சா? என்று கேள்வி எழும். ஆனால் இந்தப் போட்டியில்தான் சச்சின் தன் 100வது சதத்தை எடுத்தார். இந்தியா 300 ரன்களுக்கும் மேல் செல்லாமல் கட்டுப்படுத்தப்பட, ஆசிய கோப்பை போட்டியான இதில் கடைசியில் களமிறங்கி வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 6ஆம் நிலையில் களமிறங்கி 25 பந்துகளில் 46 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார். இந்தியா இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

webdunia
FILE
கெய்ரன் போலார்டின் அரக்க அடி- 102

ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஐ.பி.எல். கிங், மேற்கிந்திய அதிரடிப்புலி கெய்ரன் போலார்ட் 70 பந்துகளில் 102 ரன்களை விளாசி எங்கேயோ இருந்த மேற்கிந்திய அணியின் ஸ்கோரை 292 ரன்களாக உயர்த்தினார். பிறகு மேற்கிந்திய அணி ஆஸ்ட்ரேலியாவை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இலங்கை வீரர் திரிமன்ன 69!

ஜோஹன்னஸ்பர்கில் மிகவும் கடினமான சூழலில் களமிறங்கிய திரிமன்ன, 313 ரன்கள் என்ற மலையான இலக்கையும் தென் ஆப்ப்ரிக்காவின் அதிரடி பந்து வீச்சையும் எதிர்கொண்டு 4 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தபோதும் நிதானமாக ஆடி 63 பந்துகளில் 69 ரன்களை எடுத்து 313 ரன்களை எட்டி இலங்கைக்கு மறக்கமுடியாத வெற்றியைத் தேடித் தந்தார்.

ஏ.பி. டிவிலியர்ஸ் 106 நாட் அவுட்

நியூசீலாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் ஏ.பி. டிவிலியர்ஸ், 254 ரன்கள் இலக்கைக் கொண்டு 3 விரைவு விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தென் ஆப்பிரிக்கா தடுமாறிய வேளையில் களமிறங்கி அதிரடி இன்னிங்ஸை மிகத்திறமையான முறையில் ஆடி தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி தேடி தந்த இன்னிங்ஸாகும் இது!

கவுதம் கம்பீர் 92 ரன்கள்!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்டில் அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் கவுதம் கம்பீர் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 111 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தது இந்திய வெற்றிக்கு காரணமாயிற்று, இது 2012ஆம் ஆண்டின் மிகச்சிறந்த ஒருநாள் இன்னிங்ஸாகும். இந்தியா ஆஸ்ட்ரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டேவிட் வார்னரின் அதிரடி 163

2012ஆம் ஆண்டு சிபி தொடர் முதல் இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக ஆஸ்ட்ரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னர் தனி நபராக நின்று இலங்கை பந்து வீச்சை டார்டாராக கிழித்தார். ஆஸ்ட்ரேலியா 322 ரன்களை விளாச இலங்கையும் சும்மா விடவில்லை 15 ரன்கள் இடைவெளி வரை நெருக்கமாக வந்தே தோற்றது.

webdunia
FILE
ரெய்னாவின் மிக முக்கியமான 65 நாட் அவுட்!

கொழும்புவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்தியா இலங்கையின் இலக்கை துரத்தி வருகிறது. தோனி, ரோகித் ஷர்மா அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆக வெற்றி பெற இன்னும் 100 ரன்கள் தேவை என்ற நிலையில் இர்பான் பத்தானும் சுரேஷ் ரெய்னாவும் இணைந்து 92 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்து இந்தியாவுக்கு நினைத்துப் பார்க்கமுடியாத வெற்றியைத் தேடித் தந்த ரெய்னாவின் இந்த 65 ரன்களை மறக்க முடியுமா?

Share this Story:

Follow Webdunia tamil