Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷேர்ன் வார்ன் பந்து வீச்சை சச்சின் புரட்டிய 'பிட்ச்' ரகசியம்! (வீடியோ)

ஷேர்ன் வார்ன் பந்து வீச்சை சச்சின் புரட்டிய 'பிட்ச்' ரகசியம்! (வீடியோ)
, வெள்ளி, 1 மார்ச் 2013 (17:41 IST)
1998ஆம் ஆண்டு சென்னையில் அஜாருதீன் தலைமையில் இந்தியா ஆடியபோது அப்போது உலக பேட்ஸ்மென்களை அச்சுறுத்தி வந்த ஷேன் வார்னை சச்சின் டெண்டுல்கர் புரட்டி எடுத்தார்.

அந்தத் தொடர் மட்டுமல்ல அதன் பிறகும் தொடர்ச்சியாக ஷேன் வார்ன் புரட்டி எடுத்தார் சச்சின் டெண்டுல்கர். ஷேன் வார்ன் கூட சச்சின் தன்னை அடித்ததனை நினைக்கும்போது பயங்கரமாக இருக்கிறது என்றெல்லாம் கூறினார்.

4 மணிநேரத்தில் இரண்டாவது இனிங்ஸில் சென்னை சேப்பாக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் 155 ரன்களை விளாசினார். இந்தியா அந்த டெஸ்ட் போட்டியில் 179 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


சச்சின் அப்போது அடித்ததன் காரணம் என்ன என்பது இப்போது சென்னை பிட்ச் தயாரிப்பாளர் பார்த்தசாரதி கூறியுள்ள தகவல்களின் அடிப்படையில் வைத்து புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

நடப்புத் தொடரில் சென்னையில் ஆஸ்ட்ரேலியா தோல்வி தழுவியது. அப்போது பிட்சை நன்றாக ஊன்றி கவனித்திருந்தால் ஒன்று புரிந்திருக்கும். பிட்சின் நடுப்பகுதி உடையாமல் பந்துகள் சாதாரணமாக வருமாறு இருந்தது. பிட்சின் வலது இடது புறங்கள் இருபக்கமும் உடைந்து பந்துகள் அபாயகரமாக திரும்பி எழும்பியது.

இதற்குக் காரணம் பிட்சை முதலில் தயாரிக்கும்போது ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கு தினமும் தண்ணீர் விட்டு ரோல் போடும்போது நடுப்பகுதியை மட்டும் ஈரப்படுத்தி பராமாரித்து வந்துள்ளனர். ஓரப்பகுதிகளை தண்ணி காட்டாமல் அப்படியே விட்டுவிட்டார் பார்த்தசாரதி. இதனால் என்னவாயிற்று பந்துகள் அங்கு பட்டபோது கடுமையாக எழும்பி திரும்பியது. இந்தியாவின் அஷ்வின் ஆஸ்ட்ரேலியாவுக்கு தண்ணி காட்டாத பிட்சில் தண்ணி காட்டினார்.

ஆனால் 1998ஆம் ஆண்டு சென்னையில் கதை வேறு. ஷேன் வார்ன் அப்போதுதான் லெக் ஸ்டம்பிற்கு மிக வெளியே பிட்ச் செய்து எவ்வளவு பெரிய பேட்ஸ்மெனாக இருந்தாலும் ஆஃப் ஸ்டம்பை பெயர்க்கும் பயங்கர லெக்ஸ்பின்னர்களை வீசி வந்தார்.

சச்சின் டெண்டுல்கர் அந்தத் தொடருக்கு முன் சிவராம கிருஷ்ணன், இடது கை சுழல் வீசும் ரவிசாஸ்திரி ஆகியோரை ஷேன் வார்ன் வீசும் ரஃப் பேட்சில் வீசச் செய்து கடும் பயிற்சி மேற்கொண்டார். அவரது பயிற்சியில் எந்த அப்பழுக்குத் தன்மையும் இல்லை.கடுமையான பயிற்சி அது. அதுபோன்று உலகில் ஒரு சில வீரர்களே பயிற்சி எடுத்துக் கொள்வார்கள் அதில் சச்சினும் ஒருவர். இதுதான் அவரது வெற்றிக்குக் காரணம்!

ஆனால் விஷயம் அதுவல்ல 1998ஆம் ஆண்டு சென்னை பிட்ச் ஷேன் வார்னை மனதில் கோண்டு த்யாரிக்கப்பட்டதோடு, சச்சின் டெண்டுல்கர் அவரை விளாசி எடுக்கவும் தோதாக தயாரிக்கபப்ட்டது என்பதே!

பிட்சிற்கு அப்போது தண்ணி காட்டும்போது நடுப்பகுதியை சுத்தமாக வறட்சியாக விட்டு விட்டு, ஓரப்பகுதிகளை இருபுறமும் தண்ணி காட்டி அதனை உறுதிபடச் செய்யப்பட்டது.

இதனால் ஷேன் வார்னின் அப்போதைய அபாய லெக்ஸ்பின் பந்துகள் திரும்ப கஷ்டப்பட்டது. மேலும் திரும்பினாலும் பைட் இல்லாமல் மந்தமாக திரும்பியது.

பந்துகள் திரும்பாது என்பது உறுதியானவுடன் சச்சின் டெண்டுல்கர் ஷேன் வார்னை புரட்டி எடுத்தார். ஆனால் சச்சின் பயிற்சி மேற்கொண்டதை வைத்துப் பார்க்கும் போது ஷேன் பந்துகளைத் திருப்பியிருந்தாலும் ஒருவேளை சச்சினின் ஆட்டத்தில் மாற்றமிருந்திருக்காது. ஆனால் ஷேன் வார்னுக்கு சற்றே அவரை அவுட் செய்யும் வாய்ப்பு அதிகம் இருந்திருக்கும்.

இருபுறமும் பிட்சை தண்ணி காட்டி உறுதியாகச் செய்யப்பட்டதே ஷேன் வார்னின் பந்துகளுக்கு ந்ம்மவர்க்ளஅப்போது பயந்ததை காட்டுகிறது. பிட்ச் மூலம் அவரது பந்து வீச்சை ஒன்றுமில்லாமல் செய்திருக்கிறோம்!

அவர் ஒரு மாதிரியான ரிதம் பவுலர், அவரை துவக்கத்திலேயே அடித்து நொறுக்கினால் தொடர் முழுதும் அதற்கு பிறகு அவரால் எழும்ப முடியாது என்பது திட்டமாக இருக்கலாம்.

ஆனால் இவையெல்லாம் கிரிக்கெட் ஆட்டத்தில் வழக்கமாக கடைபிடிக்கப்படுவதுதான் இதில் ஒன்றும் பிரச்சனையல்ல. ஆனால் ஆடத் தெரியாதவனுக்கு மேடை என்ன செய்யும் என்று ஒரு பழமொழி வைத்திருக்கிறொம் நாம்! ஆனால் அது உண்மையல்ல சுழற்பந்து வீச்சு பிட்சின் உதவி கொண்டுதான் சிறப்புற முடியும். தனி மனித திறன்கள் இருந்தாலும் அதெல்லாம் ஒரு சில டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு கண்டுபிடிக்கபப்ட்டு தீர்த்துக் கட்டப்படும் இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் சவால்.

பிட்ச் பற்றி பார்த்தசாரதியே கூறுவதைக் கேட்போம்: (1998இல்)"நான் பிட்சின் பக்கவாட்டு பகுதிகளை மிகவும் உறுதியாக வைத்து பராமரித்தேன். அங்கு பந்து வீச்சாளர்கள் கால்தடத்தை கொண்டு பந்துகளை திரும்பச்செயும் தடங்கள் ஏற்படுத்த முடியாதவாறு பிட்ச் தயாரித்தேன்.

அந்தப் போட்டி முடிந்த பின் வார்ன் என்னிடம் வந்து கேட்டார், ஏன் அனைவருக்கும் பந்துகள் திரும்பும்போது தனக்கு மட்டும் திரும்பவில்லை என்று. நான் கூறினேன் அவரது தோள்பட்டை பிரச்சனையே காரணம் என்று.

இது எப்படி இருக்கு? ரிஷி மூலம் நதி மூலம் கண்டால் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் இது போன்ற கதைகள் இருக்கத்தான் செய்யும்!

நன்றி: யுடியூப்!

Share this Story:

Follow Webdunia tamil