Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெரிய தலைகள் ரஞ்சியில் ஆட கேப்டன் தோனி எஸ்கேப்!

Advertiesment
சேவாக்
, வியாழன், 1 நவம்பர் 2012 (16:25 IST)
FILE
சேவாக், சச்சின் டெண்டுல்கர், கம்பீர், கோலி போன்ற வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சியில் விளையாடவிருக்கின்றனர். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கில் தத்தளித்து வரும் தோனி மட்டும் ஜார்கண்ட் ரஞ்சி போட்டிகளில் விளையாடாமல் எஸ்கேப் ஆவதோடு விளம்பரங்களில் மிகவும் சீரியசாக நடித்து வருகிறார்.

இது பற்றி ஜார்கண்ட் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் கூறுவதோ இன்னும் வேடிக்கை. தோனியை தொடர்பு கொள்ள முடியவில்லையாம், எப்போதும் அவர் ஃபோன் 'தொடர்பு எல்லைக்கு வெளியே' இருக்கிறதாம்!

விளம்பரதாரர்களுக்கும், தனது தனியார் அணியான ஸ்ரீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸிற்கும் தொலைபேசி எண்ணெய் விற்று விட்ட தோனி சீரியஸ் கிரிக்கெட் விளையாடுவதற்கு சோம்பேறித்தனம் காட்டி வருகிறார்.

சேவாக், கம்பீர், சச்சின், கோலி, இஷாந்த், ஓஜா, ஹர்பஜன், அஷ்வின், ஜாகீர் கான், ரோஹித் ஷர்மா, யுவ்ராஜ் சிங், ரெய்னா என்று அனைத்து தலைகளும் உள்நாட்டு கிரிக்கெட்டை பெரிதாக மதிக்க நமது பில்லியன் டாலர் இந்திய கேப்டனுக்கோ உள்ளூர் போட்டிகள் நெட்டிக்காயாக கசக்கிறது.

ஜார்கண்ட் அணி ஜம்முவை எதிர்த்து வெள்ளியன்று ரஞ்சி போட்டியில் விளையாடுகிறது. ஆனால் நம் பில்லியன் டாலர் கேப்டனுக்கோ வேறு முக்கிய வேலைகள் இருக்கின்றன போலும்.

2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு வந்தது முதல் ஒரேயொரு ரஞ்சி போட்டியில் மட்டும் விளையாடிய பில்லியன் டாலர் இந்திய கேப்டனாக தோனி மட்டுமே இருப்பார் என்பது அவரது பெருமைகளில் இன்னொரு மகுடம்!!

ஐ.பி.எல்., சாம்பியன்ஸ் லீக், இந்தியாவுக்கு விளையாடவேண்டிய போட்டிகள் அவர் அதிக போட்டிகளில் விளையாடுகிறார் ஆனால் அது டெஸ்ட் போட்டிகளில் அவரது விளையாட்டில் வெளிப்பாடு அடையவில்லையே?

தோனி ஒரு கார்ப்பரேட் கேப்டன் மற்றும் வீரர், அவருக்கு கிரிக்கெட் மீது பெரிய ஆர்வம் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil