Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிராட்மேனுக்குப் பிறகு சிறந்த பேட்ஸ்மென் யார்? அலசுகிறார் மார்டின் குரோவ்!

பிராட்மேனுக்குப் பிறகு சிறந்த பேட்ஸ்மென் யார்? அலசுகிறார் மார்டின் குரோவ்!
, செவ்வாய், 26 மார்ச் 2013 (18:16 IST)
FILE
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பேட்ஸ்மென் டான் பிராட்மேன் என்பதை 100 சதங்கள் அடித்து சச்சின் கடந்து வந்தாலும் இன்னும் இந்த விவாதம் நடந்தவண்ணமே உள்ளது. நியூசீலாந்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மென் மார்டின் குரோவ் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் யார் என்பதை அலசியுள்ளார்.

பிரபல தனியா கிரிக்கெட் இணையதளத்தில் அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:

பல்வேறு காலக்கட்டங்களிலிருந்து நாம் 4 மிகச்சிறந்த பேட்ஸ்மென்களை எடுத்துக் கொள்வோம்.

வாலி ஹாமண்ட் என்று யாரும் நினைக்கவேண்டாம். "கறுப்பு பிராட்மேன்" என்று அழைக்கப்படும் மேற்கிந்திய பேட்ஸ்மென் ஜார்ஜ் ஹெட்லிதான் டான் பிராட்மேனுக்கு அடுத்த படியாக 2வது தலை சிறந்த பேட்ஸ்மென்.

webdunia
FILE
ஏன் ஜார்ஜ் ஹெட்லி எனில் ஒவ்வொரு 4 இன்னிங்ஸ்களிலும் அவர் சதம் எடுத்துள்ளார். ஆனால் ஹேமண்ட் ஒவ்வொரு 7 இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்துள்ளார். எனவே டான் பிராட்மேனுக்கு நெருக்கமாக உள்ளவர் மேற்கிந்திய அணியின் ஜார்ஜ் ஹெட்லிதான்.

இவருக்கும் டான் பிராட்மேன் போன்ற அதே மனோநிலைதான். போட்டிக்கு முதல் நாள் தூங்க மாட்டார். மைதானத்தில் நிற்பதுதான் அவருக்கு ரிலாக்சான டைம்.

இதனால் ஜார்ஜ் ஹெட்லிதான் சிறந்த பேட்ஸ்மென் அதாவது நம்பர் 2.

webdunia
FILE
சரியாக 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு அபார பேட்ஸ்மென் மேற்கிந்திய தீவுகளிலிருந்து வருகிறார் அவர் கேரி சோபர்ஸ். பிராட்மேன் போலவே இவரும் அவரது தினத்தில் கடுமையான அதிரடி மன்னன். அனைத்து சூழல்களிலும் பிட்ச்களிலும் பந்து வீச்சுகளிலும் இவரை கட்டுப்படுத்துவோர் இல்லை என்றே அப்போதைய பார்வை. வேகமாக சதம் எடுப்பார், சீரான முறையில் சதம் எடுப்பார். ஆல்ரவுண்டராக, கேப்டனாக இருந்தும் ஒவ்வொரு 6வது இன்னிங்ஸிலும் சீராக சதம் கண்டுள்ளார்.

எனவே சோபர்ஸ் ஜார்ஜ் ஹெட்லிக்கு அடுத்த இடத்தில் இருகிறார்.

webdunia
FILE
இவருக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகளின் ஆட்களை அடித்து வீழ்த்தும் படு பயங்கர பந்து வீச்சிற்கு எதிராக கொடி நாட்டிய பேட்ஸ்மென் சுனில் கவாஸ்கர் என்றால் மிகையாகாது. முதலில் நிற்கவேண்டும், பிறகு தாக்கவேண்டும், பிறகு ஆட்கொள்ளவேண்டும். மேற்கிந்திய பந்து வீச்சாளர்கள் விட்டு விடுவார்களா என்ன? ராபர்ட்ஸ், கார்னர், ஹோல்டிங், மார்ஷல், கிராஃப்ட் ஆகியோரை எதிர்கொண்டு இவர்களுக்கு எதிராகவே 7 சதங்களை எடுத்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் பந்து வீச்சு உச்சத்தில் இருந்தபோதே அவர்களுக்கு எதிராக 7 சதங்கள் கவாஸ்கரின் சாதனையாகும். இவரது காலக் கட்டத்தில் அதிரடி வீரர்களான விவ் ரிச்சர்ட்ஸ், கிரெக் சாப்பல் இருந்தும் இவர்களை விட ஆதிக்கம் செலுத்திய ஒரு உயரம் குறைந்த வீரர் என்றால் அது சுனில் கவாஸ்கர்தான். விவ் ரிச்சர்ட்ஸ் மேற்கிந்திய தீவுகளின் பயங்கர பந்து வீச்சை சந்திக்கவேண்டிய நிர்பந்தம் இல்லை. இந்த விஷயத்தில் கிரெக் சாப்பலையும் கடந்து நிற்பவர் சுனில் கவாஸ்கர்.

webdunia
FILE
கடைசியாக டான் பிராட்மேனே தன்னைப் போல் விளையாடுவதாக அரிய பாராட்டைப் பெற்ற சச்சின் டெண்டுல்கர். தொடர்ந்து அவரது கூற்றை நிரூபித்து வருகிறார் சச்சின். இவர் இந்தக் காலத்தின் டான் பிராட்மேன். அவ்வளவு ரன்களை எடுத்துள்ளார் சச்சின்.

ஆகவே ஹெட்லி, சோபர்ஸ், சுனில் கவாஸ்கர் அல்லது சச்சின் டெண்டுல்கர்? இவர்களில் எங்கிருந்து துவங்குவது என்பதை தீர்மானிப்பது கடினமே.

இதனால் டான் பிராட்மேனுடன் களமிறக்கினால் யாரை களமிறக்கலாம் என்று யோசித்து பார்ப்போம்.

என்னைப் பொறுத்தவரை டான் பிராட்மேனுடன் களமிறங்க மிகப்பொருத்தமானவர் கேரி சோப்ர்ஸ்தான்.

இவ்வாறு கூறியுள்ளார் மார்டின் குரோவ்.

webdunia
FILE
ஆனால் மேலும் ஸ்ட்ராங்கான பேட்ஸ்மென்களை விட்டு விட்டார் மார்டின் குரோவ். குறிப்பாக 503 ரன்கள் 375 ரன்கள் இங்கிலாந்துக்கு எதிராக 400 என்று வெளுத்து வாங்கிய மேற்கிந்திய தீவுகளின் மற்றுமொரு கேரி சோபர்ஸ் என்று வர்ணிக்கப்பட்ட பிரையன் லாராவை ஏன் மார்டின் குரோவ் விட்டுவிட்டார் என்பது புரியவில்லை.

ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக தனி மனிதனாக 153 நாட் அவுட் என்று வெற்றித் தேடித் தந்த இன்னிங்ஸை கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியுமா? சச்சின் டெண்டுல்கரின் இன்னிங்ஸில் எதையாவது அந்த தரத்திற்கு கூற முடியுமா என்பது விவாதத்திற்குரியதே!

Share this Story:

Follow Webdunia tamil