Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கெவின் பீட்டர்சன் டெஸ்ட் வாழ்க்கையும் முடிவுக்கு வருகிறது? சக வீரர்களுடன் கருத்து வேறுபாடு!

Advertiesment
கிரிக்கெட்
, புதன், 8 ஆகஸ்ட் 2012 (12:38 IST)
FILE
இங்கிலாந்துக்காக தனது சொந்த நாடான தென் ஆப்பிரிக்காவுக்கு விளையாடுவதையே தியாகம் செய்துவிட்டு வந்தக் கெவின் பீட்டர்சனுக்கும் இங்கிலாந்து வீரர்களுக்கும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே 'தீர்க்க'முடியாத பிளவு ஏற்பட்டுள்ளதாக கெவின் பீட்டர்சனே குறிப்பிட்டுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட், டி.20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறச் செய்யப்பட்ட பீட்டர்சன் அதன் பிறகு உடன்பாட்டிற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினார் ஆனால் அது பீட்டர்சனின் கோபத்தை கிளறுஅமாறு மீடியவுக்கு கசிய விடப்பட்டது.

"அடுத்த டெஸ்ட் (லார்ட்ஸ் டெஸ்ட்) எனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்காது என்று நான் உத்திரவாதமாகக் கூறிவிடமுடியாது" என்று கூறியுள்ளார் பீட்டர்சன், அதாவது அடுத்த டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதான முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார் பீட்டர்சன்.

நான் இங்கிலாந்துக்கு விளையாடுவதி பெருமை அடைகிறேன், ரசிகர்கள் எனது ஆட்டத்தி ரசிக்கின்றனர். என்று கூறியுள்ளார் பீட்டர்சன்.

ஆனாலும் ஓய்வறையில் ஒன்றிரண்டு விஷயங்களை முதலில் சரி செய்யவேண்டும், அதேபோல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடமும் ஓரிரு விஷயங்களை தெளிவுபடுத்தவேண்டும் என்று கூறியுள்ளார் பீட்டர்சன், அது என்ன விஷயம் என்று கூறாமலேயே.

ஆனால் தன்னுடைய பிரச்சனை பணம் அல்ல 100% அது பணம் பற்றிய பிரச்சனையே அல்ல என்கிறார் பீட்டர்சன். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடர் முழுதும் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார் பீட்டர்சன், மேலும் தனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாமல் கவுண்டி கிரிக்கெட், பயிற்சி ஆட்டங்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தன்னை வேலை வாங்குவதாகவும் பீட்டர்சன் உணர்கிறார்.

"நான் செய்தித் தாள் தலைப்புச் செய்தியாக மாறி வருகிறேன் என்று என்மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் நான் மீடியாவிடம் ஏதாவது கசிய விட்டேனா? நான் எந்த நிருபரிடமும் பேசவில்லை. எனக்கும் இங்கிலாந்து வாரியத்திற்கும் நான் மூடிய கதவிற்குப் பின்னால் நடந்து கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த பேச்சுவார்த்தை விவரங்கள் எப்படி உங்களுக்கு தெரிகிறது? ஆனால் நீங்கள் எனக்காக கற்பனை செய்து எனது கிரிக்கெட் வாழ்வையே தீர்மானிப்பவர்களாக இருக்கிறீர்கள். என்னைப் பற்றி மோசமான பொது பிம்பத்தை கட்டமைக்க முயற்சி செய்கிறீர்கள்." என்று ஊடகவியலாளர்களுக்கும் ஒரு போடு போட்டார் கெவின் பீட்டர்சன்.

நியூசீலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனக்கு விலக்கு அளிக்க கோரியுள்ளார் பீட்டர்சன், காரணம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முழு நேரம் விளையாட அவர் நினைக்கிறார்.

இங்கிலாந்திற்காக அனைத்து வகை கிரிக்கெட்டிலும் பங்கேற்க தனக்கு விருப்பம் உள்ளது என்றாலும் எந்தத் தொடரில் விளையாடுவது எதனை விடுவது என்ற முடிவை பீட்டர்சன் எடுப்பது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு பிடிக்கவில்லை.

'நான் நானாக இருந்து கொண்டு இங்கிலாந்துக்காக ஆடுவது எனக்கு பெரிய கடினமாக உள்ளது' இதுதான் கெவின் பீட்டர்சனின் பிரச்சனை.

சுருக்கமாக கூறவேண்டுமென்றால். இந்திய கிரிக்கெட் வாரியம் சச்சின் டெண்டுல்கருக்கு எம்மாத்ரியான சிறப்புரிமைகளை வழங்குகிறதோ அதனை இங்கிலாந்திடம் எதிர்பார்க்கிறார் கெவின் பீட்டர்சன்.

சச்சின் நினைத்தால் களமிறங்கலாம், அவர் ஓபனிங் என்றால் ஒபனிங், அவர் இந்தத் தொடர் அல்ல 2 ஆண்டுகள் கழித்து ஒரு தொடரில் விளையாடுகிறேன் என்றால் உடனே ஓ.கே. தனக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அதனை அவரே தீர்மானிப்பார், உடல் நிலை சரியாக்விட்டது என்றாலும் அவரே அதனை தீர்மானிப்பார்.

இது போன்ற ஒரு அந்தஸ்தை பீட்டர்சன் இங்கிலாந்திடம் எதிர்பார்க்கிறார்.

எல்லாரும் சச்சின் அளவுக்கு அதிர்ஷ்டம் வாய்த்தவர்களா என்ன? அல்லது ஈ.சி.பி. என்ன பி.சி.சி.ஐ.-யா?

Share this Story:

Follow Webdunia tamil