கிரிக்கெட் கட்டுரை: தோனியின் பணிச்சுமையைக் குறைக்குமா பி.சி.சி.ஐ.?
, வியாழன், 15 செப்டம்பர் 2011 (13:54 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தன்னால் முடிந்த அளவை விடவும் அதிக அளவில் கிரிக்கெட் ஆட்டத்தில் ஈடுபடுகிறார் அவரது பணிச்சுமை குறைக்கப்படவேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இதனால் சாம்பியன்ஸ் லீக் T20 கிரிக்கெட்டில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸிற்கு விளையாட கட்டாயப்படுத்தக்கூடாது என்ற குரல்களும் கேட்கத் தொடங்கியுள்ளன.தோனியின் பணிச்சுமை வருமாறு:உலகக் கோப்பை கிரிக்கெட்ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 16 போட்டிகளில் விளையாடியதுமேற்கிந்திய தீவுகளில் 3 டெஸ்ட் போட்டிகள்இங்கிலாந்தில் 4 டெஸ்ட் போட்டிகள் பிறகு 5 ஒருநாள் போட்டிகள்இங்கிலாந்தில் இரண்டு முதல் தர பயிற்சி ஆட்டங்கள், ஒருநாள் போட்டிகள்T20 கிரிக்கெட் இங்கிலாந்துக்கு எதிராக.இங்கிலாந்து தொடர் முடிந்தவுடன் வரும் கிரிக்கெட் தொடர்கள்:சாம்பியன்ஸ் லீக் T20 கிரிக்கெட் (குறைந்தது 4 போட்டிகள் அல்லது 6 போட்டிகள்)இந்தியாவுக்கு இங்கிலாந்து அணி பயணம் (5 ஒருநாள் போட்டிகள் ஒரு T20)மேற்கிந்திய அணி இந்தியாவில் பயணம் (3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள்)ஆஸ்ட்ரேலியா பயணம் ( 4 டெஸ்ட் போட்டிகள், இரண்டு T20, 8 ஒருநாள் போட்டிகள்)இந்தியா/பாகிஸ்தான் தொடர் (3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு T20)2012
ஆம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்.இவ்வகையான போட்டி அட்டவணை ஒருவர் என்னதான் மன/உடல் ரீதியான பலம் பெற்றிருந்தாலும் சோர்வு ஏற்படுத்தச் செய்வதே.ஏற்கனவே தோனியின் பேட்டிங், விக்கெட் கீப்பிங் ஆகியவை பின்னடைவு கண்டுள்ளன. இதற்கு பதில் சாம்பியன் லீக் கிரிக்கெட் அல்ல மாறாக அவருக்குத் தேவை ஓய்வு மற்றும் தனிப்பட்ட விக்கெட் கீப்பிங் பயிற்சி.
குறைந்தது இரண்டுவாரங்களுக்காவது அவர் கிரிக்கெட்டின் பார்வையில் இல்லாமல் இருந்தால் மீண்டும் அவர் சிறப்பாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.தோனியின் பணிச்சுமை குறித்து கிரான் மோர் தெரிவிக்கையில், "தோனியின் பணிச்சுமை குறித்து ஷஷான்க் மனோகர் அல்லது ஸ்ரீகாந்த் என்று யாராவது சிந்திக்கவேண்டும். ஆஸ்ட்ரேலியாவில் நடைபெறும் ஐ.பி.எல். பாணி பிக் பாஷ் கிரிக்கெட்டில் அனைத்து ஆஸ்ட்ரேலிய வீரர்களும் விளையாடுவதில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மைய ஒப்பந்தம் வைத்துள்ளது இதனால் எந்த ஒரு வீரரும் அதிகப்படியான கிரிக்கெட் ஆட்டம் ஆடி சோர்வடையாமல் பார்த்துக் கொள்கிறது" என்றார்.முன்னாள் விக்கெட் கீப்பர் பரூக் இஞ்ஜினியர் கூறுகையில், "ஓய்வு எடுக்கும் விருப்பம் தோனியிடமிருந்து வரவேண்டும், அவர் உண்மையில் சோர்வாக இருந்தால் வாரியத்திடம் அவர் ஓய்வு கேட்கலாம். இருப்பினும் ஒரு சிறிய இடைவெளி அவரது கிரிக்கெட்டிற்கு நல்லது. என்றார்.மற்றொஉ முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம் மிகவும் தெளிவாக நிலைமைகளை விவரிக்கிறார்:ஐ.பி.எல். அணி உர்மியாளர்கள் தோனி போன்ற ஒரு வீரர் மீது ஏகப்பட்ட தொகையை முதலீடு செய்யும்போது அவர்கள் தோனி விளையாடுவதைத்தான் விரும்புவார்கள். இதில் தேர்வுக் குழுத் தலைவரோ, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமோ ஒருமனதாக முடிவு எடுக்க முடியாது. ஏற்கனவே சேவாக் இல்லை, சச்சின் விளையாடுவதும் சந்தேகமாக இருக்கும்போது தோனிக்கு ஓய்வளிக்க அவர்கள் எவ்வாறு முடிவெடுக்க முடியும்? இருப்பினும் தோனி இந்தியாவின் இருபது ஓவர் கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து விலகலாம்" என்றார் சபா கரீம்.எது எப்படியிருந்தாலும் பணமா, கிரிக்கெட்டா, உடல்/மனோ ஆரோக்கியமா என்பதை தோனிதான் முடிவு செய்யவேண்டும். தோனி மட்டுமல்ல இன்று பணத்திற்காக ஐ.பி.எல். கிரிக்கெட்டைத் தேர்வு செய்பவர்கள் இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நீண்ட நாட்களுக்கு விளையாட முடியுமா என்பதையும் சிந்திக்கவேண்டும்.சிந்திக்குமா இளம் தலைமுறை?