Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடினமான எழுச்சியை எதிர்நோக்கி இந்திய அணி

Advertiesment
கிரிக்கெட்
, செவ்வாய், 9 ஆகஸ்ட் 2011 (16:26 IST)
FILE
இரண்டு படுதோல்விகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டின் கௌரவத்தைக் காப்பற்றும் நோக்கத்துடன் நாளை எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணி பலமான இங்கிலாந்து அணியை 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் எதிர்கொள்கிறது.

லண்டனில் ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக இங்கிலாந்து வீரர்களின் மனோநிலையில் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டிருக்காது என்று நம்புவோமாக. அப்படி அவர்கள் கவனம் சிதறியிருந்தால் அதனி இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள நிச்சயம் முயற்சி செய்யும்.

இங்கிலாந்துடன் இந்த இரண்டு டெஸ்ட் போட்டியும் டிரா ஆனால் இங்கிலாந்து முதலிடம் செல்லும், இந்தியா இரண்டு போட்டிகளில் ஒன்றை வென்று ஒன்றை டிரா செய்தால் இங்கிலாந்து முதலிடம் செல்ல வாய்ப்பில்லை. பயிற்சி ஆட்டத்தில் கூட இந்திய அணியின் பந்து வீச்சும் பேட்டிங்கும் பெரிய அளவுக்கு திருப்தியளிக்காத நிலையில் இந்திய எழுச்சி மிக மிகக் கடினமே.

இஷாந்த், பிரவீண் குமார், ஸ்ரீசாந்த், முனாஃப் படேல் அணிச்சேர்க்கையா அல்லது முனாஃப் படேலுக்கு பதிலாக அமித் மிஷ்ரா வாய்ப்பளிக்கப்படுவாரா என்று தெரியவில்லை.

இங்கிலாந்து மண்ணில் கடந்த 2 ஆண்டுகளாக பலமான இங்கிலாந்து அணியின் பந்து வீச்சிற்கு எதிராக துவக்க வீரர்கள் அஸ்திவாரம் இருந்தால் மட்டுமே எதிரணியினர் இன்னிங்ஸ் ஒன்றில் 400 ரன்களை எட்டியுள்ளனர்.

2007ஆம் ஆண்டு இந்தியா அங்கு சென்றிருந்தபோது வாசிம் ஜாஃபர், தினேஷ் கார்த்திக் துவக்க ஜோடி 322 ரன்களை 53.67 என்ற சராசரியில் பெற்றிருந்தது. ஆனால் இம்முறை இருவருமே இல்லை யாரைக் கேட்பது, ஸ்ரீகாந்தைத்தான் கேட்கவேண்டும்.

சேவாகும், கம்பீரும் இதுவரை இணைந்து 59.18 என்ற சராசரியில் 3,551 ரன்களை எடுத்துள்ளனர்.

இங்கிலாந்து கடைசியாக உள்நாட்டு டெஸ்ட் தொடரை 2008 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இழந்தது அப்போதும் துவக்க வீரர்களான கிரேம் ஸ்மித், நீல் மெக்கன்சியின் அற்புதத் துவக்கமே வெற்றியைத் தீர்மானித்தது.

இந்த ஆண்டு இந்தியா 6 டெஸ்ட் போட்டிகளை வெளிநாட்டு மண்ணில் விளையாடியுள்ளது, இதில் ஒரேயொரு போட்டியில் மட்டும்தான் சேவாக், கம்பீர் துவக்கம் நமக்குக் கிடைத்தது.

கடந்த 16 டெஸ்ட் போட்டிகளில் அதாவது 32 இன்னிங்ஸ்களில் 3 முறைதான் இங்கிலாந்து பந்து வீசாளர்கள் எதிரணியினரை ஒரு இன்னிங்ஸில் 400 ரன்களை அடிக்க விட்டுள்ளனர்.

webdunia
FILE
இந்த 16 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து 11 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது.

எனவே இங்கிலாந்து பந்து வீச்சு பயங்கரமாகச் செயல்பட்டு வருகிறது என்பதில் ஐயமில்லை. இருப்பினும் ராகுல் திராவிட் ஒரு தனித்த சாதனைக்குரிய வீரராவதற்கு வாய்ப்பு உள்ளது.

எட்ஜ்பாஸ்டனிலும் திராவிட் சதம் எடுத்தால், இங்கிலாந்தில் இரண்டு டெஸ்ட் தொடர்களில் 3 சதங்களை எடுத்தவர் என்ற சாதனையை டான் பிராட்மேனுக்குப் பிறகு நிகழுத்துபவர் ஆவார்.

சச்சினின் 100-வது சதத்தைப் பற்றி பேசிப்பேசி அலுத்துவிட்டது. இருப்பினும் கம்பீர், சேவாக் துவக்கக் கூட்டணி வெற்றியடைந்து விட்டால் இந்த இரண்டு விஷயங்களும் நடக்கும் பட்சத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கும்.

ஆனாலும் இங்கிலாந்து பேட்டிங்கும் படு பலம் வாய்ந்ததாக உள்ளது. கடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் 90 ரன்கள் சராசரி வைத்திருக்கும் அலிஸ்டைர் குக் இன்னும் இந்தத் தொடரில் தன் முத்திரையைப் பதிக்கவில்லை. ஸ்ட்ராஸ் கூட பெரிய ஸ்கோரை எட்டிவிடவில்லை.

இங்கிலாந்தில் தொடர்ந்து பீட்டர்சன், பெல் அதிகபட்சமாக ரன்கள் எடுத்து வருகின்றனர். டிராட் காயத்தினால் விளையாடமாட்டார். ஆனால் கடைசி 5 வீரர்கள் ரன் எண்ணிக்கை விகிதம் இந்தியாவுக்கு பெரும் தலைவலிதான். பிராட், பிரெஸ்னன், மேட் பிரையர், ஸ்வான் ஆகியோர் அபாரமாகவே விளையாடி வருகின்றனர்.

தோனி படுமோசமாக விளையாடி வருகிறார் கடைசி 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் தோனி 146 ரன்களையே எடுத்து வருவது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பயிற்சியாளர் ஆன்டி பிளவர் காலத்தில் 29 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து 18-இல் வென்று 4ஐ மட்டுமே தோற்றுள்ளது. டன்கன் பிளெட்சர் வந்திறங்கி இந்தியா 300 ரன்களை கடப்பதற்கே கடும் சிரமத்திற்குள்ளாகி வருகிறது.

ஏகப்பட்ட சிக்கல்களுடன் தோனி நாளை களமிறங்குகிறார். சேவாக், கம்பீர் கையில் உள்ளது என்று அனைவரும் கூறுவது ஏறக்குறைய உண்மைதான்.

Share this Story:

Follow Webdunia tamil