Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய ஸ்பின்னர்கள் செய்த தவறென்ன? ஏன் 'டர்ன்' ஆகவில்லை?

Advertiesment
தோனி
, திங்கள், 26 நவம்பர் 2012 (15:03 IST)
சாதாரணமா போடுங்கப்பா!
அஷ்வினின் பிரச்சனை அவரது வெரைட்டி. அவர் கேரம் பால், சுண்டு விரலில் போடுவது ஆள்காட்டி விரலில் போடுவது, பாம்பு விரலில் போடுவது என்று பேன்சி பந்து வீச்சில் தோல்வி கண்டார். ஒழுங்காக ஸ்வான் போல் மரபான ஆஃப் ஸ்பின் போதும் இங்கிலாந்து மடிந்திருக்கும்.
webdunia
இங்கிலாந்து கடைசியாக தனது ஃபைனல் ஃபிரான்டியரில் வெற்றியை பெற்றது. இது குக் போன்ற கேப்டனின் நேர்மையான அணுகுமுறையும், கிரிக்கெட்டின் சென்சிற்கும் கிடைத்த பரிசு. முதல் பந்திலிருந்தே திரும்பவேண்டும் என்ற தோனியின் நியாயமற்ற கோரிக்கைக்குக் கிடத்த தண்டனைதான் இந்த தோல்வி.

முதல்நாளே ஸ்பின் நன்றாக எடுத்தது. இந்திய வீரர்கள் திணறினார்கள் காரணம் ஸ்வானும், பனேசரும் குறிப்பாக பனேசர் சற்றே வேகம் கூடுதலாக வீச பந்துகள் வேகமாக திரும்பின.

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகம் வெரைட்டிகளை முயற்சி செய்து லெந்தை கோட்டை விட்டனர். ஹர்பஜன் சிங் பந்துகள் நன்றாகத் திரும்பும் ஆட்டக்களத்தில் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தீய அனுபவத்தை வைத்துக் கொண்டு முதல் மைடன் ஓவரை 20 ஓவர்கள் கழித்து வீசுகிறார் என்றால், பிட்சை புரிந்து கொண்ட லட்சணம் என்ன? பயிற்சியாளர் டன்கன் பிளெட்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்.

இந்த பிட்சில் பேட்ஸ்மென்களின் அணுகுமுறை எப்படியிருக்கவேண்டும், பந்து வீச்சு அணுகுமுறை எப்படியிருக்கவேண்டும் என்பதை பயிற்சியாளர் சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் அவருக்கு இவ்வளவு பெரிய தொகை ஊதியமாக கொடுக்கப்படுகிறது. பிட்சை புரிந்து கொண்ட சீனியர் வீரர்களும் பந்து வீச்சாளர்களின் பிரசனை என்னவென்பதை அறிவுத்தினார்களா என்று தெரியவில்லை.

இவ்வளவு ஸ்பின் ஆகும் ஆட்டக்களத்தில் டர்ன் ஆகவில்லை என்றால் பந்துகளை வேகமாக வீசவேண்டும் என்று கூடவா ஒரு பயிற்சியாளருக்குத் தெரியாமல் இருக்கும்?

மீண்டும் தோனியின் களவியூகமும், எதிரணியினர் பார்ட்னர்ஷிப் பில்ட் செய்யும்போது அவர் ஒன்றுமே செய்யாமல் ஆட்டத்தை அதன் போக்கில் விடும் உத்தியும் மிகப்பெரிய அபத்தமாகக் காட்சியளித்தது.

3ஆம் நாள் ஆட்டத்தில் குக்கும், பீட்டர்சனும் சுலபமாக ரன்களை எடுக்கும் அளவுக்கு பிட்ச் ஒன்றுமேயில்லாமல் இல்லை என்பது மீண்டும் மாலை இந்தியா பேட் செய்தபோது தெரிந்தது. பீட்டர்சனுக்கு தூரத்தே பீல்டர்களை நிறுத்தி அவருக்கு பல சிங்கிள்களை சுலப ரன்களாக விட்டுக் கொடுத்தார் தோனியும் மோசமான பந்து வீச்சாளர்களும். நெருக்கடி கொடுக்கவில்லை தோனி. ஆனால் அவர் என்ன செய்வார் மோசமான பந்து வீச்சை கண்டிக்கவேண்டிய அவர் மோசமான பந்து வீச்சிற்கு ஃபீல்ட் செட் அப் செய்கிறார்! இவரை டெஸ்ட் கேப்டனாக வைத்து கொண்டு என்ன செய்ய முடியும்?

உடனே போன டெஸ்டில் வென்றாரே என்று சப்பை கட்டு கட்ட முடியாது! போன டெஸ்ட் போட்டியில் டர்ன் ஆகாத பிட்சை ஏதோ பூதம் இருப்பது போல் இங்கிலாந்து நினைத்து முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி முதல் இன்னிங்ஸிலேயே தோல்வி தழுவியது இங்கிலாந்து.

இந்த முறை உண்மையில் பிட்சி திரும்பும் தன்மை இருந்தது. அபாயகரமான பவுன்ஸ், திருப்பம் இருந்தது. ஆனால் இந்திய வீச்சாளர்கள் தவறான லெந்திலும் வேகம் குறைவாகவும் வீசினர். குறிப்பாக ஹர்பஜன் சற்றும் லாயக்கில்லை என்ற அளவில் வீசினார். ஒரு சீனிய பவுலர் இந்த பிச்டில் பந்தை வேகமாக வீச வேண்டும் என்ற அறிவு கூட இல்லாமல் வீசுவாரா?

அஷ்வினின் பிரச்சனை அவரது வெரைட்டி. அவர் கேரம் பால், சுண்டு விரலில் போடுவது ஆள்காட்டி விரலில் போடுவது, பாம்பு விரலில் போடுவது என்று பேன்சி பந்து வீச்சில் தோல்வி கண்டார். ஒழுங்காக ஸ்வான் போல் மரபான ஆஃப் ஸ்பின் போதும் இங்கிலாந்து மடிந்திருக்கும். ராஜேஷ் சவான், அர்ஷட் அயூப் போன்றவர்கள் இருந்திருந்தால் இங்கிலாந்து பாடு அம்போதான். அயூப் சற்றே வேகமாக ஆஃப் ஸ்பின்னை வீசுபவர். சயீத் அஜ்மலும் சரியான வேகத்தில் வீசக்கூடியவர் இதனால்தான் இங்கிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக திணறியது.

பேட்டிங்கில் ஜாம்பவான்கள் இருந்தும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கடைசியில் பிராக்யன் ஓஜா ஒரு முனையில் இருக்க கம்பீர் முதல் பந்தில் சிங்கிள் எடுத்து அவரை பேட் செய்ய வைத்ததன் மர்மம் என்னவென்று தெரியவில்லை. பிறகு அவரும் ஓவராக கட்டை போட்டது ஏன் என்று புரியவில்லை. ஓஜாவை வைத்துக் கொண்டு கொஞ்சம் ரன்களை ஏற்றியிருந்தால் ஒரு 100 120 ரன்களை வைத்துக் கொண்டு கொஇஞ்சம் இங்கிலாந்துக்கு பாச்சாவாவது காட்டியிருக்கலாம். ஆனால் தான் நாட் அவுட்டாக வர வேண்டும் என்ற எண்ணம் தவிர அவருக்கு வேறு ஒன்றும் மனதில் இருந்ததாக தெரியவில்லை. ஓஜாவை அவர் 5 பந்துகளை ஆட வைத்தத்ற்காகவே அவரை அணியிலிருந்து தூக்கவேண்டும்!

தோனியின் பேட்டிங் பார்க்கவே கண்றாவியாக உள்ளது. விக்கெட் கீப்பிங்கும் தண்டமாகிக் கொண்டிருக்கிறது. 57 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றிதான் அது உறுதிதான் இருந்தாலும் நாம் செய்யவேண்டியதை செய்வதுதான் கிரிக்கெட்டிற்கு அழகு. ஆனால் முதல் பந்தை அஷ்வின் வீச அதை தோனி கோட்டை விட அது 4 ரன்களுக்குச் சென்றது 'பை' 4 ரன்கள் இப்படியா ஒரு இன்ஙின்ஸை துவங்குவது?

சேவாக், கம்பீர், கோலி என்று அனைவருமே ஏதோ ஒரு கம்பர்ட் சோனில் இருந்து கொண்டு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கின்றனர். ஓரிரு போட்டிகள் உட்கார வைத்துப் பார்க்கவேண்டும். சேவாக் ஒரு சதம் எடுத்து விட்டார் அவ்வளவுதான் அவரது கடமை முடிந்தது. சச்சின் இனிமேல் சதம் எடுப்பது என்பது தூரக்கனவுதான்.

ஆனால் தோனி இவ்வாறாக கேப்டன்சி செய்தால் இனி வெற்றி கூட தூரத்துக் கனவாகவே போய் முடியும்.

ஒரு சாதாரண புரிதல், இங்கிலாந்து ஸ்பின்னர்கள் வீசிய வேகம் போல் வீசவேண்டும். அதைக்கூட கற்றுக் கொடுக்காமல், அறிவுறுத்தாமல் ஒரு பயிற்சியாளர் அங்கு உட்கார்ந்திருக்கிறார். வர்ணனையிலும் கூட அனைவரும் இந்தக் கருத்தை கூறினர். ஆனால் எதையும் கேட்க இந்திய வீரர்கள் தயாராக இல்லை.

மீண்டும் இங்கிலாந்தை வெல்வது கடினம்தான்.

Share this Story:

Follow Webdunia tamil