Publish Date: Sat, 07 Nov 2015 (09:57 IST)
Updated Date: Sat, 07 Nov 2015 (10:06 IST)
நவம்பர் 10 வேதாளம் வெளியாகிறது. இதுவரை வெளியான அஜித் படங்களுக்கு இல்லாத எதிர்பார்ப்பு வேதாளம் படத்துக்கு.
லைக், ஹிட்ஸ் ஆகியவற்றில் படத்தின் டீஸர் உலக சாதனை படைத்துள்ளது.
வேதாளம் படத்தை நீங்கள் விரும்புவதற்கான காரணங்களை பார்ப்போம்.
1. முதல் காரணம், இது அஜித் படம். அஜித் தனது தங்கையாக நடித்துள்ள
லட்சுமி மேனனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து, இது அண்ணன் - தங்கை சென்டிமெண்ட் படம் என்றனர்.
அஜித்தின் வேதாளம் கெட்டப்பைப் பார்த்து, இல்லையே இது டான் படம் என்றனர் இந்த இரண்டையும் தாண்டி வேறு ஆச்சரியங்கள் இருக்கும் என்று டீஸர் எண்ண வைத்தது.
படத்தின் இயக்குனர் சிவா, 'லோக்கலாக ஒரு கேரக்டர், துணிச்சலாக ஒரு கேரக்டர், ஆனால், இரண்டு வேடமா என்பது சஸ்பென்ஸ்' என எதிர்ப்பார்ப்பின் அளவை கூட்டியிருக்கிறார். அஜித்தின் தெறிக்கவிடலாமா கேள்வி ரசிகர்களை திரையரங்குக்கு இழுத்துவரும்.
2. அனிருத்தின் பாடல்கள் வேதாளத்தின் முக்கியமான பலம். ஆளுமா டோலுமா, வீர விநாயகா பாடல்கள் ஏற்கனவே ஹிட். அனிருத்தின் பெயர் டைட்டிலில் வந்தால் திரையரங்கில் விசில் பிளக்கிறது. முதல்முறையாக அஜித்துடன் கூட்டணி வைத்திருக்கிறார். இசையே ரசிகர்களை எழுந்து ஆடவைக்கப் போகிறது.
3. வீரம் படத்தில் சிவாவின் அண்ணன் - தம்பிகள் சென்டிமெண்ட் வொர்க் அவுட்டானது. எப்போதுமே
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...
சென்டிமெண்டுடன் வரும் படங்கள்தான் குடும்ப ஆடியன்ஸை கவர்ந்து பத்து நாள்களைத் தாண்டி தாக்குப் பிடிக்கும்.
இதில் அண்ணன் - தங்கை சென்டிமெண்ட். 'படம் பார்த்தவர்கள் உணர்வுபூர்வமாக இருக்கிறது' என்று பாராட்டியதாக சிவா கூறியுள்ளார். ஆக்ஷன் படத்தில் அழுத்தமான சென்டிமெண்ட் இருந்தால் தமிழர்களுக்கு அல்வா மாதிரி.
4. சண்டைக் காட்சிகளை மிகப்பிரமாண்டமாக எடுத்திருக்கிறார்கள். சில்வா சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். இதுவரை எந்தப் படத்துக்கும் இவ்வளவு உழைத்ததில்லை என்று அஜித்தே கூறும் அளவுக்கு அதிபயங்கர சண்டைக் காட்சிகள் படத்தில் உள்ளன. அஜித் ஹார்லி டேவிட்சன் பைக்கில் ரேஸ் விடுவது ரசிகர்களுக்கு கூடுதல் கொண்டாட்டம்.
5. லாஸ்ட் பட் லீஸ்ட். சூரியின் காமெடி. காமெடி இருந்தால் மட்டுமே ரிப்பீட் ஆடியன்ஸை சம்பாதிக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்தவர் சிவா. வீரம் படத்தில் சந்தானம் என்றால் வேதாளத்தில் சூரி. அஜித், சூரி காம்பினேஷன் ரசிகர்களை நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் என்கிறார்கள்.
வேதாளம் வெளியாகிற அன்று, தூங்கா வனமும் வெளிவருகிறது. இதற்கு முன் 3 முறை கமல் - அஜித் படங்கள் மோதியுள்ளன. முதலில் நம்மவர் படத்துடன் பவித்ரா மோதியது.
இரண்டுமே தோல்வி. அடுத்து முகவரியுடன் ஹேராம். முகவரி சுமார், ஹேராம் விமர்சனரீதியாக வெற்றி, கமர்ஷியலாக சுமார். கடைசியாக ரெட் படத்துடன் பம்மல் கே.சம்பந்தம். ரெட் தோல்வியடைய பம்மல் கே.சம்பந்தம் வெற்றி பெற்றது.
இந்த முறையாவது அஜித் படம் வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வம் அஜித் ரசிகர்களிடம் உள்ளது. பார்ப்போம்... ஆசை நிறைவேறுகிறதா என்று.