தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்சிகள்
தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்சிகள்
Publish Date: Tue, 20 Sep 2016 (10:59 IST)
Updated Date: Tue, 20 Sep 2016 (11:08 IST)
பஞ்சத்துக்கு ஓடியதற்காக சம்பளத்தை உயர்த்திய நடிகரைக் குறித்துதான் பரபரப்பாக பேசுகிறது கோடம்பாக்கம். தனது சமீபத்திய படம் ஓடியதால் புதிய படத்துக்கு 12 கோடிகள் சம்பளம் கேட்கிறார் நடிகர்.
நடிகரின் லேட்டஸ்ட் படமான டூ ஃபேஸை பார்த்தவர்கள் கழுவி ஊற்றுகின்றனர். போட்டிக்கு வேறு படங்கள் இல்லாததால் படம் நல்லாவே கல்லா கட்டியது. உடல் ஊனமுற்றவராக சிறப்பாக நடிக்கும் நடிகரால் சாதாரண கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவரத் தெரியவில்லை என்பதை இந்தப் படம் அப்பட்டமாக நிரூபித்துள்ளது. இதேபோல் இன்னொரு படம் வந்தால் நடிகரின் சாயம் வெளுத்துப் போகும்.
யதார்த்தம் இப்படியிருக்க, படம் ஓடியதை காரணம் காட்டி சம்பளத்தை 12 கோடிகளாக உயர்த்திருக்கிறார். அவரது சம்பளத்தை கேட்கும் போதே கோடம்பாக்கம் டெரராகிறது.
சம்பளத்தை உயர்த்தியதால் இவரைப் பற்றி பேசுகிறார்கள். உச்ச நடிகர் சும்மா இருந்தாலும் அவரைச் சுற்றி கும்மியடிக்க தயாராக இருக்கிறது மீடியா.
உச்சத்தின் மூத்த மகளுக்கு இப்போதுதான் ஒரு கௌரவப் பதவி கிடைத்தது. சில தினங்கள் முன்பு உச்சத்தின் இரண்டாவது மகளையும் கௌரவப் பதவியொன்று தேடி வந்தது. எல்லாம் மத்தியில் இருப்பவரின் ஆசிர்வாதம். விரைவில் உச்சத்தையும் ஏதாவது மாநிலத்துக்கு கவர்னர் ஆக்குவார் மத்தியில் அதிகாரம் செலுத்துகிறவர் என்று ஏற்றிவிட்டிருக்கிறார்கள் சில மீடியாக்காரர்கள்.
சங்கு சும்மா இருந்தாலும் எடுத்து ஊதாம விடமாட்டாங்க போலிருக்கு.
மியூசிக் போட்டுக் கொண்டிருந்தவரை மியாவ் மாதிரி சாதுவாகத்தான் இருந்தார் அந்த இசையமைப்பாளர். நடிகரான பிறகு புலிப்பாய்ச்சல் பாய்கிறார். படத்தில் என்றால் பரவாயில்லை, இந்தப் பாய்ச்சல் அவரது நடத்தையில்.
இரண்டு படத்தில் சேர்ந்து நடித்த நடிகையுடன் ரொம்பவும் ஆனந்தமாக இருக்கிறாராம் இசையமைப்பாளர் கம் நடிகர். சமீபத்தில் பாடல் காட்சிக்காக வெளிநாட்டில் போன போதும் இவர்களின் நட்பு தொடர்ந்ததாம். நடிகையால் இசையின் வீட்டில் அபஸ்வரம் கேட்பதாக சொல்கிறார்கள் அக்கம் பக்கத்தினர்.
ஜே.பி.ஆர்.
Publish Date: Tue, 20 Sep 2016 (10:59 IST)
Updated Date: Tue, 20 Sep 2016 (11:08 IST)