தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்ஸி
தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்ஸி
Publish Date: Thu, 28 Jul 2016 (12:01 IST)
Updated Date: Thu, 28 Jul 2016 (12:10 IST)
மில்க் நடிகையும், வெற்றி இயக்குனரும் திருமணமான இரண்டே வருடங்களில் பரஸ்பரம் பிரிவது என முடிவெடுத்திருப்பது இன்று தமிழகத்தின் ஹாட் டாபிக். இந்த செய்தி உண்மையா வதந்தியா என்ற தடுமாற்றம் இரு தினங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது.
அப்பா, அம்மா எடுக்கிற முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று இயக்குனர் பெட்டிப் பாம்பாக கூறிய போதே, பிரிவு உறுதியானது. இயக்குனரின் தந்தையும் இப்போது பிரிவை உறுதி செய்துள்ளார்.
பிரிவு உறுதி என்றானபின் அடுத்த கேள்வி, பிரிவுக்கான காரணம் என்ன என்பதுதானே? அடுத்தவர்களின் அந்தரங்கத்தை ஆராய்வது நாகரிகமில்லை என்றாலும் இணையத்தில் உலவும் காரண காரியங்களை சொல்லாமல் இருப்பதும் நாகரிகமன்று.
திருமணத்துக்குப் பின் நடிக்க வேண்டாம் என்பதே மில்க் நடிகைக்கு கணவர் தரப்பினர் விதித்த ஒரே நிபந்தனை. முக்கியமாக தமிழ்ப் படங்களில். அதை மீறி ஒல்லி நடிகரின் வேலை இல்லாதவன் படத்தில் மில்க் நடித்தார். அதுவும் நெருக்கமாக. இது கணவருக்கும், அவரது வீட்டாருக்கும் பிடிக்கவில்லை.
இரண்டு வருட திருமண வாழ்க்கையில் அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்திருக்கிறது. அதனை காரணமாக வைத்து மீண்டும் முழுவேகத்தில் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகை. குறிப்பாக ஒல்லி நடிகர் தயாரித்த படத்துக்கு கால்ஷீட் தந்தார். அது எரிகிற கொள்ளியில் எண்ணைக் கிணறை திறந்துவிட்டது போல் ஆயிற்று.
வேலை இல்லாதவன் படத்தின் போது, படப்பிடிப்பு முடிந்ததும் ஒல்லி நடிகரும், நடிகையும் நேராக ஹோட்டலுக்கு சென்று சிற்றுண்டி அருந்திய பிறகே வீடு திரும்புவர் என்கிறார், அப்படத்தில் வேலை பார்த்த ஒருவர். சிலவேளைகளில் சிற்றுண்டியும், சிறு போதையுமாக திரும்புகிற நாள்களும் உண்டாம்.
இந்த நெருக்கமான நட்பு இப்போதும் தொடர்வதாக சொல்கிறார்கள். அத்துடன், மீண்டும் ஒல்லி நடிகருடன் நார்த் மெட்ராஸில் வலம்வர தயாராகிவிட்டார் நடிகை. இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலையில்தான் வெற்றி இயக்குனர் பிரிவது என்று முடிவெடுத்ததாக கூறுகிறார்கள். அதற்கு முன்பே நடிகை அந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இணையத்தில் இப்போது உலவும் வதந்திகள் முழுக்க நடிகையை குற்றப்படுத்துபவை. இயக்குனரின் பக்கம் என்ன தவறு என்று இதுவரை யாரும் வெளிப்படுத்த முன்வரவில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன் இவர்களின் திருமணம் நடந்த போது, அட்டகாசமான ஜோடி, அருமையான பொருத்தம் என்று பூரித்தவர்கள் இன்று அதே வாயால், அதான் அப்பவே சொன்னோமே என்று நெட்டி முறிப்பது காலக்கொடுமை.
நட்சத்திரங்கள் ஒரு அடி உயர்ந்தால் ஓராயிரம் அடி தூக்கி வைத்து பேசும் சமூகம், ஒரு அங்குலம் இறங்கினால் ஒரேயடியாக பாதாளத்துக்கு அமுக்கும். மில்க் நடிகையின் விஷயத்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
பேசப்படுகிற அத்தனை கான்ட்ரவர்சிகளையும் தாண்டி, ஒரு இல்லறம் இல்லாமல் போவது எப்போதுமே வருத்தத்துக்குரியது.
ஜே.பி.ஆர்.
Publish Date: Thu, 28 Jul 2016 (12:01 IST)
Updated Date: Thu, 28 Jul 2016 (12:10 IST)