தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்ஸி

செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (11:57 IST)
இளைய சேனாதிபதியின் புதிய படம் பிப்ரவரியில் தொடங்கியது. சென்னை புறநகரில் தொடங்கப்பட்ட இந்தப் படம் குறித்து,  படக்குழுவே ஆச்சரியம் கலந்த அச்சத்துடன் பேசி வருகிறது.


 
 
முதல் படத்திலேயே கமர்ஷியல் ராஜாவான அந்த இயக்குனர் இரண்டாவது படத்தை தெறிக்கவிட்டதால் மூன்றாவது படமான இதில் அவருக்கு லம்பாக ஒரு சம்பளம் பேசப்பட்டது. என்ன ஒரு அஞ்சு கோடி இருக்குமா என்று அசால்டாக கேட்டுவந்த கோடம்பாக்கத்துக்கு இதயத்தில் இடி இறக்கியது அவரது உண்மைச் சம்பளம். ஒன்றல்ல இரண்டல்ல... பத்து கோடிகள். இப்படியொரு அசுர சம்பள உயர்வை இந்திய சினிமா சமீபத்தில் கண்டதில்லை.
 
இயக்குனருக்கு பத்து, நடிகருக்கு இருபத்தைந்து, மூன்று நாயகிகளுக்கு சேர்த்து மூன்று கோடி என்று இதுவே கிட்டத்தட்ட 38 கோடிகள் வருகிறது. டெக்னிஷியன்கள் சம்பளம், படப்பிடிப்பு செலவு எல்லாம் சேர்த்தால்...?
 
இந்த கேள்விக்கே முழி பிதுங்குகிறது இல்லையா. படப்பிடிப்பு செலவை கேட்டால் மயக்கம் வந்தாலும் வரும்.
 
முதல் ஷெட்யூல்டில் சேனாதிபதியின் எண்பதுகளிலான காட்சியை எடுத்தனர். கிராமத்துப் பின்னணி. நாயகனின் பண்ணைக்காக 250 மாடுகள் தேவைப்பட்டிருக்கிறது. வாடகைக்கு எடுத்தால் வசதியாக இருக்காது என்று மொத்தமாக 250 மாடுகளையும் விலைக்கே வாங்கியிருக்கிறார்கள். இதனை பராமரிக்க 40 ஆள்கள். இவர்களுக்கு சம்பளம் பேட்டா, சாப்பாடு... மாடுகளுக்கு  தீனி...
 
முதல் ஷெட்யூல்டில் இந்த மாடு மேய்ப்பவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்குமான சாப்பாடும் சம்பளமும் மட்டுமே தினம் பல லட்சங்களை முழுங்கியிருக்கிறது. இது எல்லாம் படப்பிடிப்புக்கு சம்பந்தமில்லாத செலவுகள்.
 
முதல் ஷெட்யூல்டில் கூட்டிக்கழித்தால் ஏழரை கோடி செலவாகியிருக்கிறது. 20 நாளில் இந்தச் செலவு. இன்னும் எத்தனையோ  தினங்கள் படம் எடுக்க வேண்டியிருக்கிறது.
 
இயக்குனர் முந்தையப் படத்தை தெறிக்கவிட்டாலும், அவர் இழுத்துவிட்ட செலவுகளுக்காக இயக்குனரை தெறிக்கவிட நினைத்திருக்கிறார் தயாரிப்பாளர். அவரை வைத்து படம் பண்ணுகிறார்கள் என்றதும் புதிய தயாரிப்பாளருக்கு போனை போட்டு, தம்பியை அப்பப் தட்டி வைக்கலைன்னா பட்ஜெட் எகிறி பணம் பாதாளத்துக்கு போகும் என்றிருக்கிறார். இப்போது அதுதான்  நடந்து கொண்டிருக்கிறது.
 
இந்த லட்சணத்தில் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த லொகேஷன் பார்க்க இயக்குனர் தம்பி கிளம்புகிறாராம்.
 
அசத்துங்க தம்பி அசத்துங்க...

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சினிமாவில் அதை அனுஷ்கா தான் கற்றுத் தந்தார் - தமன்னா பேட்டி