தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்சிகள்
தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்சிகள்
Publish Date: Fri, 19 Aug 2016 (13:00 IST)
Updated Date: Fri, 19 Aug 2016 (13:14 IST)
முதல் படத்தில் விண்ணுக்கு தாவிய பலர் இரண்டாவது படத்திலேயே மண்ணுக்கு கீழிறங்கிய கதை கோடம்பாக்கத்தில் கொட்டிக் கிடக்கிறது. சந்தானம் சொல்வதைப் போன்று ராணுவத்தால் அழிந்தவர்களைவிட இங்கே ஆணவத்தால் அழிந்தவர்களே அதிகம்.
முன்னணி நடிகர்கள் உடன்தான் நடிப்பார், கதை பிடித்திருக்கணும், கதாபாத்திரம் பொருந்தியிருக்கணும் என்று ஆயிரெத்து எட்டு கண்டிஷன்களுடன் காலடி எடுத்து வைத்தார் அம்மன் கோவில் கிழக்காலே நடிகையின் மகள்.
எதிர்பார்த்தது போல் முதல் படம் ஹிட். ஆனால், ஆத்தாவின் அதிகபடி அலட்டலால் மகளுக்கு படம் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு படமும் பல வருடங்களாக வெளியே வராமல் இழுத்துக் கொண்டிருக்கிறது.
வெறுமனே சும்மா இருந்தால் சரியாகுமா என்று லண்டனில் ஏதோ படிக்கவும் செய்தார். அதற்குள் திரையுலகம் பதமாகும் என்று கணக்கு. ம்ஹும் எதுவும் நடக்கவில்லை. இப்போது இந்தி சீரியலில் நடிக்கலாமா என்று மகள் யோசித்து கொண்டிருக்கிறார்.
இதுதான் விதிங்கிறது.
இவரது கதை இப்படியென்றால், கடவுள் நடிகரின் கதை வேறு மாதிரி. கிசுகிசு எழுத்தாளர்கள் பிக்கப் ட்ராப் நடிகர் என்றுதான் இவரை எழுதுகிறார்கள். அந்தளவுக்கு இவர் பெண்கள் விஷயத்தில் பேமஸ். வேறொன்றுமில்லை, நட்பு வளர்ப்பதில் கெட்டிக்காரர்.
இதுவரை எந்த பாலுக்கும் அவுட்டாகாமல் இருந்த இவர் தனது தம்பியுடன் நடித்த மலையாள நடிகையிடம் வீழ்ந்துவிட்டதாக கேள்வி. பார்க்க மியாவ் போன்று சாதுவாக இருக்கும் நடிகையிடம் நடிகர் எப்படி வீழ்ந்தார் என்று தெரியவில்லை.
இதுதான் நடிகரின் கடைசி பிக்கப் என்கிறார்கள். அது உண்மையென்றால் நல்லது... நடிகைகளுக்கு.
இளைய சேனாதிபதியையே கோபம் கொள்ள வைத்த இந்த சம்பவத்தைதான் கோடம்பாக்கத்தில் கூடி கூடி பேசி வருகிறார்கள். அப்படி என்ன விவகாரம்?
சிங்கத்தை மூன்றாவது முறையாக கர்ஜிக்க வைத்திருக்கும் இயக்குனருக்கு சேனாதிபதியை இயக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், நடிகர் பிற இயக்குனர்களைப் போல் இவரையும் காக்க வைக்க, ஒருகட்டத்தில் உங்க கால்ஷீட்டே வேண்டாம் என்று எகிறினார் இயக்குனர். காலமும் சில தோல்விகளும் இயக்குனருக்கு நிதானத்தை தந்திருக்கிறது. சேனாதிபதியும் இயக்குனருக்கு கால்ஷீட் தரும் மூடுக்கு வந்திருக்கிறார்.
இந்நிலையில், பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் என்னுடைய அடுத்தப் படத்தில் போலீசில்ல பொறுக்கிதான் நடிப்பார் என்று அறிவித்தார். நாம வெயிட்டிங்கில் இருக்கையில் இவர்பாட்டுக்கு வேறொருவரை அறிவித்திருக்கிறாரே என்று சேனாதிபதிக்கு கடும் எரிச்சல். இனிமே அந்தாளுக்கு எக்காலத்திலும் கால்ஷீட் இல்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம்.
இயக்குனர் இதற்கெல்லாம் கவலைப்படுகிற ரகமில்லை என்பதுதான் விஷயமே.