Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுல்தானை தூக்கியடித்த தங்கல் - முழு விவரம்

Advertiesment
சுல்தானை தூக்கியடித்த தங்கல் - முழு விவரம்
, புதன், 4 ஜனவரி 2017 (10:49 IST)
அமீர் கானின் தங்கல் திரைப்படம் இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத வசூல் சாதனைகளை நிகழ்த்திக்  கொண்டிருக்கிறது. இதுவரை இந்திய சினிமா நிகழ்ச்சிக் காட்டிய சாதனைகள் அனைத்தையும் முறியடித்துவிட்டுத்தான்  தங்கலின் ஆட்டம் ஓயப்போகிறது.

 
டிசம்பர் 23 வெளியான இந்தத் திரைப்படம் முதல் நாளில் குறைவாகவே வசூலித்தது (29.78 கோடிகள்). இரண்டாவது நாளில்  வசூல் கிட்டத்தட்ட 35 கோடிகள். மூன்றாவது நாள் ஞாயிற்றுக்கிழமை வசூல் 42.41 கோடிகளாக உயர்ந்து, முதல் 3  தினங்களிலேயே 100 கோடியை இந்தியாவில் கடந்தது.
 
வார நாள்களிலும் தங்கலின் வசூல் ஸ்டெடியாகவே இருந்தது.
 
Day 4 (Mon) – 25.69 Cr
 
Day 5 (Tue) – 23.09 Cr
 
Day 6 (Wed) – 21.46 Cr
 
Day 7 (Thu) – 20.29 Cr
 
முதல் 7 நாள்கள் தினமும் 20 கோடிகளுக்கு மேல் இதுவரை எந்தத் திரைப்படமும் இந்தியாவில் வசூலித்ததில்லை. தங்கல்  அதனை சாதித்தது.
 
கடந்த ஞாயிறுவரை தங்கல் இந்தியாவில் மட்டும் 284.69 கோடிகளை வசூல் செய்துள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில்  இவ்வளவு அதிகம் வசூலித்த இந்தியத் திரைப்படமும் தங்கல்தான். முக்கியமான விஷயம், இந்நேரம் தங்கல் சுல்தானின்  வசூலை (301.5 கோடிகள்) முறியடித்து முன்னேறியிருக்கும்.
 
இந்தி சினிமாவில் 3 படங்கள் இதுவரை 300 கோடிகளுக்கு மேல் இந்தியாவில் வசூலித்துள்ளன.
 
சல்மான் கானின் சுல்தான் - 301.5 கோடிகள்
 
சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் - 320.34 கோடிகள்
 
அமீர் கானின் பிகே - 340.8 கோடிகள்.
 
இதில் சுல்தானின் வசூலை தூக்கி அடித்திருக்கிறது தங்கல். பஜ்ரங்கி பைஜானின் வசூலும் தங்கலின் வேகத்துக்கு முன்னால்  ஈடுகொடுக்க முடியாது. பிகே படத்தின் வசூலையும் தங்கல் எளிதாக முறியடித்துவிடும்.
 
இந்திய சினிமாவில் முதல்முதலில் 100 கோடிகளை தொட்டது அமீர் கானின் கஜினி. 200 கோடிகளை தொட்டது அமீர் கானின் 3  இடியட்ஸ். 300 கோடிகளை தொட்டது அவரது பிகே. தங்கலின் மூலம் 400 கோடிகளை தொட்ட முதல் நடிகர் என்ற  பெருமையும் அமீர் கானுக்கு கிடைக்கும் என்பது நிபுணர்களின் கணிப்பு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் உடம்பு கட்டுக்கோப்பாக இருக்க காரணம்... - நடிகை ராகுல் ப்ரீத் சிங் பேட்டி