Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரகாஷ்ராஜ் ஏன் இப்படி செய்கிறார்....?

பிரகாஷ்ராஜ் ஏன் இப்படி செய்கிறார்....?

Advertiesment
பிரகாஷ்ராஜ்
பிரகாஷ்ராஜ் தான் இயக்கி நடித்த, உன் சமையல் அறையில் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்.


 


அதில் பிரகாஷ்ராஜ் நடித்த வேடத்தில் நானா படேகரும், சினேகா நடித்த வேடத்தில் ஸ்ரேயாவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல், உன் சமையல் அறையில் படத்தை மீண்டும் ஒருமுறை பிரகாஷ்ராஜ் குதறப் போவதை கட்டியம் கூறுகிறது. மலையாளத்தில் ஆஷிக் அபு இயக்கத்தில் லால், ஸ்வேதா மேனன், ஆசிப் அலி, 
 
மைதிலி நடிப்பில் உருவான படம், சால்ட் அண்ட் பெப்பர். 
 
லாலும், ஸ்வேதா மேனனும் நடுத்தர வயதை கடந்தவர்கள். இருவருக்கும் திருமணமாகவில்லை. ஸ்வேதா மேனனின் தடித்த உருவம் மற்றும் செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் ஆகாமலே உள்ளது. லாலுக்கு திருமணத்தில் நாட்டமில்லை. இவர்கள் இருவரது முக்கியமான ஒற்றுமை, இருவருமே சாப்பாட்டு ப்ரியர்கள். 
 
ஒரு சந்தர்ப்பத்தில் போனில், இவர்கள் இருவரும் நட்பாகிறார்கள். அவர்களின் சாப்பாட்டு ரசனையே அவர்களுக்குள் நட்பை ஏற்படுத்துகிறது. பார்க்காமலே தொடரும் இந்த நட்பு காதலாகிறது. சின்ன குழப்பத்துக்குப் பின் இருவரும் ஒன்று சேர்வது படத்தின் கதை.
 
இதனை உன் சமையல் அறையில் என்ற பெயரில் பிரகாஷ்ராஜ் தயாரித்து, இயக்கி, நடித்தார். கன்னடத்திலும் இதன் ரீமேக் வெளியானது.
 
சால்ட் அண்ட் பெப்பரின் முக்கிய அம்சமே நாயகன், நாயகி இருவரும் நடுத்தர வயதை கடந்தவர்கள். உன் சமையல் அறையில் திருமணமாகாமல் ஏங்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் சினேகா. சினேகாவை திருமணம் செய்ய எந்த ஆணும் முன்வரவில்லை என்பது உன் சமையல் அறையில் படத்தின் பிரதான பின்னடைவாக அமைந்தது. அதேபோல் பல விஷயங்கள்.
 
இந்தியில், லால் நடித்த வேடத்தில் நானா படேகர் சாலப் பொருத்தம். ஆனால், ஸ்வேதா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ரேயா என்பது சால்ட் அண்ட் பெப்பர் படத்தின் ஆன்மாவை சிதைக்கும் முயற்சி. 
 
ஸ்ரேயாவுக்கு படங்கள் இல்லையே தவிர அவர் ஒன்றும் ஸ்வேதா மேனனைப் போல முதிர்கன்னி கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவரல்ல. தமிழில் செய்த அதே தவறை மீண்டும் இந்தியில் திரும்ப செய்யவுள்ளார் பிரகாஷ்ராஜ். 
 
மலையாளத்திலிருந்து தமிழுக்கு அதிக படங்கள் ரீமேக் செய்யப்படுகின்றன. மலையாள சினிமா எதனால் ரசிக்கப்பட்டது என்பதை உணராமலே அதனை தமிழ்ப்படுத்துவதால் தமிழ் ரீமேக்குகள் பார்வையாளர்களின் கவனத்தை பெறாமலே பெட்டிக்குள் அடைக்கலமாகின்றன. தமிழில் ஒருமுறை செய்த தவறை பிரகாஷ்ராஜ் மீண்டும் இந்தியில் செய்யப் போகிறார்.
 
தபு போன்ற முப்பத்தைந்து பிளஸ்ஸில் இருக்கும் நடிகை செய்ய வேண்டிய வேடத்தை ஸ்ரேயா போன்ற இளம் நடிகை செய்தால், சால்ட் அண்ட் பெப்பருக்குப் பதில் இன்னொரு உன் சமையல் அறையில்தான் பரிசாக கிடைக்கும்.


Share this Story:

Follow Webdunia tamil