86 -வது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ட்ரம்புக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல சுவாரஸியங்கள் ஆஸ்கர் விருது விழாவை கலகலப்பூட்டியதை பார்க்க முடிந்தது (டிவியில்தான்).
இந்த வருட ஆஸ்கரில் இரண்டு விஷயங்கள் பெருமிதம் கொள்ளத்தக்கதாய் அமைந்தது. அதற்கு முன் இதுவரை அறிவிக்கப்பட்ட விருதுப் பட்டியலைப் பார்க்கலாம். இதுவரை சிறந்த இயக்குனர் உள்பட 5 விருதுகளுடன் லா லா லேன்ட் முன்னிலையில் உள்ளது.
Casey Affleck, Manchester by the Sea - best actor
Damien Chazelle, La La Land - best director
City of Stars, La La Land - best original song
La La Land - best original score
La La Land - best cinematography
The White Helmets - best documentary short
Sing – best live action short
Hacksaw Ridge - best film editing
The Salesman – best foreign language film
The Jungle Book - best visual effects
La La Land - best production design
Zootopia – best animated feature
Piper – best animated short
Viola Davis, Fences - best supporting actress
Hacksaw Ridge - best sound mixing
Arrival - best sound editing
OJ: Made in America - best documentary feature
Fantastic Beasts and Where to Find Them - best costume design
Suicide Squad - best make-up and hairstyling
Mahershala Ali, Moonlight - best supporting actor
Manchester by the Sea - best original screenplay
சரி, இனி நாம் முதலில் பார்த்த விஷயத்துக்கு வருவோம். இந்த வருட ஆஸ்கரின் முதல் பெரும் சாதனை, மூன்றுக்கும் அதிகமான (நான்கு பேர்) கறுப்பினத்தவர் ஆஸ்கர் விருதை வென்றுள்ளனர். ஆஸ்கர் விருது சரித்திரத்தில் இதுவரை மூன்றுக்கு அதிகமான கறுப்பினத்தவர்கள் ஒரே வருடத்தில் ஆஸ்கர் வென்றதில்லை. அது இந்த ஆண்டு முறியடிக்கப்பட்டுள்ளது. காலை 10.15 வரை 4 கறுப்பினத்தவர் விருது வென்றுள்ளனர். விருது முழுமையாக அறிவிக்கப்படும்போது இந்த எண்ணிக்கை அதிகரித்தால் இன்னும் சிறப்பு.
கறுப்பினத்தவர்கள் ஆஸ்கர் விருதில் புறக்கணிக்கப்படுவதாக சென்ற வருடம் விமர்சனம் எழுந்தது. வில் ஸ்மித் போன்றவர்கள் விழாவை புறக்கணித்தனர். அதற்கு அடுத்த வருடமே சாதனை அளவுக்கு கறுப்பினத்தவர் ஆஸ்கரை வென்றுள்ளனர்.
மிகமிக மகிழ்ச்சியான வருடம், ஆஸ்கர் விருதுக்கு.
(இரண்டாவது விஷயம், ட்ரம்பால் விசா மறுக்கப்பட்ட ஈரானைச் சேர்ந்த திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கரை வென்றது. அது தனி கட்டுரையாக).