Publish Date: Mon, 07 Dec 2015 (11:51 IST)
Updated Date: Mon, 07 Dec 2015 (11:58 IST)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில முன்னாள் செயலாளரும், சுதந்திரப் போராட்ட வீரரும், கண்ணியமிக்க அரசியல்வாதியுமான ஆர்.நல்லகண்ணு அவர்கள் நடிகர்களை முன்னிறுத்தி சத்திய ஆவேசம் கொள்ளும் முந்திரிக் கொட்டைகளுக்கு தக்க விமர்சனம் ஒன்றை பேஸ்புக் பக்கத்தில் பதிந்துள்ளார்.
மழை வெள்ள பாதிப்புக்கு லாரன்ஸ் ஒரு கோடி தரும்போது, ரஜினி வெறும் 10 லட்சம்தான் தந்தார் என்று அவரை ஒருகூட்டம் விமர்சித்து வருகிறது.
ஒரு நடிகனை நடிகனாக மட்டுமே பார்க்க வேண்டும். அவனது படத்தை முதல் நாள் அதிக கட்டணம் கொடுத்து பார்ப்பதும், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதும் எவ்வளவு முட்டாள்த்தனமோ, எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ அதேயளவு பொறுப்பில்லாதது, அவர்கள் நிதி உதவி அளிக்கவில்லை என்று கூப்பாடு போடுவதும். தமிழ்நாட்டில் சம்பாதிக்கும் நடிகர்கள் தமிழர்களுக்கு உதவி செய்யவில்லை என்று சிலர் சத்தியாவேசம் கொள்கின்றனர். ரிக்ஷ்ஷா ஓட்டுகிறவர்கள் முதல் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறவன் வரை எல்லோரும் தமிழகத்தில் தான் சம்பாதிக்கிறார்கள். எனில் நடிகரை மட்டும் குறி வைத்து கூப்பாடு போடுவது ஏன்?
நடிகர்களை கடவுளாக நினைத்து அவர்களின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் சீரழிந்த மனதின் இன்னொரு வடிவம்தான், எந்தப் பிரச்சனைக்கும் நடிகர்கள் முன்னணியில் நிற்க வேண்டும் என்று நினைப்பதும். விசிலடிச்சான் குஞ்சுகள் நடிகர்களுக்கு தரும் அதே முக்கியத்துவத்தை இவர்கள் அதேயளவு எதிர்மறையாக தருகிறார்கள். இரண்டுமே ஒரே அளவிலான முக்கியத்துவம் என்பது தான் இங்கு கவனிக்க வேண்டியது. இதனை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இதே கருத்தை தான் ஆர்.நல்லகண்ணு அவர்களும் தனது பேஸ்புக் பக்கத்தில் பிகிர்ந்துள்ளார். இதை படித்த பின்பாவது, நடிகர்களை போற்றவும், தூற்றவும் அவர்கள் பின்னால் மட்டுமே அணிவகுக்கும் கூட்டம் திருந்தினால் நல்லது.
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்....
ஆர்.நல்லகண்ணு
லாரன்ஸ் 1 கோடி குடுத்தாராம், தெலுங்கு நடிகர்கள் 10 லட்சம், 20 லட்சம்னு குடுத்தார்களாம், கோடி கோடியா சம்பாதிச்ச ரஜினி 10 லட்சம்தான் குடுத்தார்னு ஒரு குரூப் கத்திகிட்டே இருக்கு. வளர்ச்சி திட்டத்துக்காக 4000 கோடினு 5000 கோடினு கணக்கு காட்டிட்டு பேருக்கு ரோடு போட்டு, ஏரிய எல்லாத்தையும் கூறுபோட்டு வித்த அரசுகளையும், அதிகாரிகளையும் கேள்வி கேட்க திராணி இல்ல, இன்னும் இலவசம் எங்கின்ற பேரில் அரசு குடுக்கும் பிச்சையை வரிசைல இருந்து வாங்கிகிட்டு, இங்க வந்து நொட்டை சொல்கிறோம்.
ரஜினி எதற்காக தன் சொத்தை வாரி இறைக்க வேண்டும். நடிப்பது அவர் தொழில். நீ உன் சந்தோசத்துக்காக 300, 400 ரூ. டிக்கெட் குடுத்து படம் பார்த்த. அவர் கோடீஸ்வரன் ஆகிட்டார். அவர் எதற்காக அதை திருப்பி குடுக்கணும். Corporate கம்பெனிகள் எல்லாம் லட்சக்கணக்கான கோடிகளை சம்பாதிகிறார்கள். ஒருத்தனாவது ஒரு ரூபாயாவது குடுத்திருப்பானா? Pepsi ஐ Water bottle Freeya Sponsor பண்ண சொல்லு, KFC ஐ எல்லொருக்கும் சிக்கன் குடுக்க சொல்லு, சரவண பவன் ஐ தோசை சப்பாத்தி குடுக்க சொல்லு. இவர்கள் சம்பாதிக்கவில்லையா? சினிமாகாரன வெறும் சினிமாகாரனா மட்டும் பார்த்திருந்தால், தமிழகம் பல காமராஜர்களை முதல்வராக பார்த்திருக்கும். சினிமாகாரன தலைல தூக்கிவச்சி கொண்டாடியே பல பேர அரசியல்வாதியா ஆக்குனீங்க. இப்பொ எல்லா நடிகர்களும் ஆட்சியிலும் நல்லா நடிக்கிறாங்க. தமிழன் கடைசிவரைக்கும் சொந்த நாட்டில் அகதியாகவே.