Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கபாலி - சுற்றமும் நட்பும் மற்றும் எதிரிகள்

கபாலி - சுற்றமும் நட்பும் மற்றும் எதிரிகள்

Advertiesment
கபாலி -  சுற்றமும் நட்பும் மற்றும் எதிரிகள்
, வெள்ளி, 4 மார்ச் 2016 (13:42 IST)
கபாலியில் அனைவருக்கும் தெரிந்ததெல்லாம், ரஜினி கபாலீஸ்வரன் என்ற தாதாவாக நடிக்கிறார், மலேசியாவில் கதை நடக்கிறது, அவரது மனைவியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார் என்பதுதான்.

இவை தவிர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியல். கதை...?
 
கேங்ஸ்டர் கதையில் இந்திய பொருளாதாரம் குறித்தா இருக்கும்? பழிவாங்கலும், மன்னிப்பும் மண்டிக் கிடப்பதுதான் கேங்ஸ்டர் படங்கள். ரஜினி நடிப்பதால் சென்டிமெண்டும், அடுத்தவருக்கு உதவும் வள்ளல்தன்மையும் கணிசமாக இருக்கும்.
 
ரஜினியின் மகளாக தன்ஷிகா நடிப்பதாக முதலில் சொல்லப்பட்டது. அவரது ஹைட்டுக்கும் வெயிட்டுக்கும் பொருத்தமில்லாத வேடம் என்று சந்தேகம் தட்டினாலும் கேள்வி எதுவும் எழவில்லை. ஆனால், படத்தில் அவர் ரஜினியின் மகள் இல்லையாம். பிறகு?
 
யோகி என்கிற தாய்லாந்து தாதாவாக நடித்திருக்கிறாராம். இதற்காக தலைமுடியை குறைத்து கேங்ஸ்டர் தோற்றத்துக்கு மாறியுள்ளார். ரஜினிக்கு சவால்விட்டு கடைசியில் அவரிடம் தோற்றுப் போகிற தாதா இவர்.
 
ராதிகா ஆப்தே தோட்டத் தொழிலாளி குமுதவல்லியாக வருகிறாராம். இவர்தான் கபாலியின் மனைவி. சூப்பர் ஸ்டார் பெண்களிடம் வலியுறுத்தும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எல்லாம் கொண்ட கதாபாத்திரம். தலைமுடி நரைத்த வயதில் கணவன், மனைவுக்குள் வரும் அந்நியோன்யத்தை கண்முன் நிறுத்துமாம் இவர்களின் உறவும், பாசமும். 
 
மேலும் படிக்க அடுத்த பக்கம் பார்க்க........
webdunia

கேங்ஸ்டராக இருந்தாலும் ரஜினி நல்லவராகத்தானே இருக்க முடியும். தாதா மோதலில் தகப்பனை இழந்தவர்களின் குழந்தைகள் படிப்பதற்காகவே ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறார். ஆஸ்ரம் பள்ளியைப் போல் நன்கொடை வசூலிக்கும் பள்ளியல்ல இது. ரஜினி நடத்தும் இலவச பள்ளிக்கூடம் (காசா, 
 
பணமா... சினிமாவில் வர்ற பள்ளிதானே). கலையரசன் தமிழ்குமரன் என்ற ஆசிரியராக வருகிறார். 
 
அட்டகத்தி தினேஷுக்கு கிட்டத்தட்ட படையப்பா அப்பாஸை நினைவுப்படுத்துகிற வேடம். இவரும் ஒரு கேங்ஸ்டரின் மகன்தான். ஆனால், ரஜினியை பிடித்துப் போய் அவர் உடனே இருக்கிற கதாபாத்திரம். இதேபோல் ரஜினியுடன் இருக்கும் இன்னொரு கதாபாத்திரம், அமீர். இந்த வேடத்தில் ஜான் விஜய் நடித்துள்ளார்.
 
கபாலியின் எதிரியாக கிஷோர் வருகிறார். இன்னொரு எதிரியாக வின்ஸ்டன் சாவ் நடித்துள்ளார். இவ்வளவு இருந்தாலும் படத்தின் ஹைலைட் ரஜினிதான்.
 
உலக சினிமாவில் முதல்முறையாக இப்போதுதான் தனது உண்மையான வயதான தோற்றத்தில் தாடிக்கு டை அடிக்காமல் நடிக்கிறார். படம் ஹிட்டாக இது ஒன்றே போதும்.

Share this Story:

Follow Webdunia tamil