Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினி பாப்கார்ன் - சாமி கும்பிடப் போன சந்தானத்தை சம்சாரியாக்கிய வதந்தி

Advertiesment
சந்தானம்
சந்தானம்... சம்சாரி


 

 
சந்தானம் நடிகை ஆஷ்னா சவேரியை திருப்பதியில் ரகசிய திருமணம் செய்து கொண்டார் என ஒரு வதந்தி இரண்டு நாள்களுக்கு முன் மீடியாவை கலவரப்படுத்தியது.
 
ஆஷ்னா சவேரி சந்தானத்துடன் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்தவர். சந்தானம் ஹீரோவாக நடித்த இரண்டாவது படம் இனிமே இப்படித்தான் படத்திலும் அவர்தான் நாயகி.
 
இரண்டு படங்களில் அடுத்தடுத்து நாயகியாக நடித்தவருடன் சந்தானம் திருப்பதியில் பட்டு வேஷ்டியில் இருப்பதை புகைப்படத்தில் பார்த்ததும், சந்தானம் ஆஷ்னா சவேரியை திருமணம் செய்து கொண்டார் என வதந்தியை கிளப்பிவிட்டனர். 
 
ஆனால், விஷயம் அதுவல்ல. சந்தானம் நடிக்கும் புதிய படம் நல்லபடியாக முடியவும், வெற்றி பெறவும் படம் தொடங்கும் முன் படக்குழுவினர் சம்பிரதாயமாக திருப்பதில் சென்று சாமி கும்பிட்டனர்.
 
அந்தப் புகைப்படம்தான் பத்திரிகைகளில் வெளிவந்தது. அந்தப் புகைப்படத்தை வைத்து சந்தானம் ஆஷ்னா சவேரியை திருமணம் செய்து கொண்டதாக கதை திரித்தனர்.
 
திருமண வதந்தி பொய் என்றாலும், தொடர்ந்து மூன்று படங்களில் ஒருவரை நாயகியாக்க வேண்டுமென்றால்... என்னமோ திட்டமிருக்கு என்றுதானே அர்த்தம்?
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

ஷாருக்கானுக்கு சிவசேனா ஆதரவு

webdunia

 

 
இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதை துணிச்சலுடனும், நேர்மையுடனும் சுட்டிக் காட்டினார் ஷாருக்கான்.
 
அதனை மெய்ப்பிப்பது போல் ஷாருக்கானுக்கு எதிராக பாஜக, விஷ்வ இந்து பரிஷத் போன்ற அடிப்படைவாத மதவாத அமைப்புகள் விஷம் கக்கி வருகின்றன.
 
இந்நிலையில் மத, இன அடிப்படைவாத கட்சியான சிவசேனா ஷாருக்கானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
 
"இந்தியா சகிப்புத்தன்மை மிகுந்த நாடு. முஸ்லிம்களும் சகிப்புத்தன்மையுடன் உள்ளனர்.
 
ஷாருக்கானை முஸ்லிம் என்ற காரணத்துக்காக விமர்சிப்பதும், எதிர்ப்பதும் சரியான நடைமுறை அல்ல" என்று சிவசேனா கட்சியின் எம்.பி.சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.
 
மத அடிப்படைவாதிகளின் சகிப்பின்மைக்கு எதிராக பேசினால், அதனை இந்துக்களுக்கு எதிரான பேச்சாக திரித்து, இந்துக்களை தூண்டிவிடும் வகையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகள் பேசி வருகின்றன.
 
இந்து, முஸ்லீம் இடையே பிரிவினையை ஊக்குவிக்கும் இதுபோன்ற விஷமிகளுக்கு எதிராக பேசாமல், அவர்களை எதிர்த்து விருதுகளை திருப்பித் தருகிறவர்கள் மீது கமல் போன்றவர்கள் சேறு வாரி இறைப்பது துரதிர்ஷ்டவசமானது.
 
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

ஜுனியர் என்டிஆர் படத்தில் மோகன்லால்

webdunia

 

 
ஜில்லா படத்தில் விஜய்யுடன் நடித்த மோகன்லால் விரைவில் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படத்தில் அவருடன் இணைந்து நடிக்க உள்ளார்.
 
ஜில்லா படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் எண்ணம் இருந்ததால் ஜில்லா படம் தமிழில் வெளியான போது அதனை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடவில்லை.
 
ஜில்லாவின் தொய்ந்துபோன திரைக்கதை காரணமாக அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க யாரும் முன்வரவில்லை.
 
இனியும் பொறுப்பதில் அர்த்தமில்லை என்று சில மாதங்கள் முன்பு ஜில்லாவை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர். எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு இந்தப் படத்துக்கு கிடைத்தது.
 
ஜில்லா காரணமாகவே ஜுனியர் என்டிஆர் படத்தில் மோகன்லாலை நடிக்க கேட்டிருக்கிறார்கள். மோகன்லாலும் சம்மதித்துள்ளார்.
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

குவென்டிண் டொரண்டினோவுக்கு எதிராக போலீஸார்

webdunia

 

 
யுஎஸ் போலீஸார் அப்பாவிகளை கொன்றதை கண்டித்து நடத்தப்பட்ட பேரணியில் இயக்குனர் குவென்டிண் டொரண்டினோவும் கலந்து கொண்டார். 
 
அப்போது பேசிய அவர், போலீஸாரை கொலைகாரர்கள் என்று குறிப்பிட்டார். இது அமெரிக்காவின் ஒட்டு மொத்த காவல்துறையையும் வால் திருகிவிட்டது.
 
டிசம்பரில் வெளியாகும் குவென்டினின், த ஹேட்ஃபுல் 8 படத்தை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்க வேண்டும், குவென்டினின் படப்பிடிப்புக்கு ஒத்துழைக்கக் கூடாது என்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். அதனால், த ஹேட்ஃபுல் 8 திரைப்படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
இதேபோல் ஒரு படம் சர்ச்சைக்குள்ளானால், அப்படம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக வசூல் செய்யும் என்பதுதான் தமிழக வரலாறு. யுஎஸ்ஸில் எப்படி என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Share this Story:

Follow Webdunia tamil