Publish Date: Thu, 31 Dec 2015 (16:19 IST)
Updated Date: Thu, 31 Dec 2015 (18:05 IST)
மலையாளத்தில் விதவிதமாக பேர் வைப்பார்கள். கிறிஸ்மஸ் தினத்தில் வெளியான ஒரு படத்தின் பெயர், அடி கப்பியாரே கூட்டமணி. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் ஊரிலுள்ளவர்களை ஒன்று சேர்க்க கோவிலில் கூட்டமணி அடிப்பார்கள். அதாவது தொடர்ச்சியாக மணியை அடித்துக் கொண்டேயிருப்பதன் பெயர்தான் கூட்டமணி. கப்பியார் என்றால் உபதேசியார் என்று அர்த்தம். கோவிலில் பாதிரியாருக்கு அனைத்தையும் செய்து கொடுப்பவர். கோவில் ஆராதனை மற்றும் பிற விஷயங்களில்
பாதிரியாரின் உதவியாளர்.
ஆண்கள் மட்டுமே உள்ள ஹாஸ்டலில் ஒரு இளம் பெண் தங்கினால் என்னாகும் என்பதே படத்தின் கதை. வினீர் சீனிவாசனின்
தம்பி தயன் சீனிவாசன், அஜு வர்க்கீஸ், நீரஜ் மாதவ் நடித்துள்ள இந்தப் படத்தில் நமிதா பிரமோத் நாயகி. படம் தாறுமாறாக ஹிட்டாக இரண்டாம் பாகத்தை உடனே அறிவித்திருக்கிறார்கள். எளிமையான கதை என்பதால் உடனே தமிழில் ரீமேக்காகவும் சாத்தியமுள்ளது.
சார்மின்னா இப்படி வார்ம் ஆகிறாரே...?
சார்மியின் தயாரிப்பில் அவரை வைத்து, ஜோதிலட்சுமி என்ற படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கினார். படம் தோல்வி. ஆனாலும் இந்த இருவருக்குள்ளும் நட்பும் விரிசல் விடாமல் மேலும் இறுகியிருக்கிறது.
தான் புதிதாக இயக்கும் ரோக் படத்தில் சார்மிக்கென்றே ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி வருகிறார் பூரி ஜென்நாத். இது தெலுங்கு திரையுலகில் முணுமுணுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ரோக் படத்தில் இஷான் என்பவர் நாயகன். பிரபல தயாரிப்பாளரின் மகனான இவரை அறிமுகப்படுத்தும் பொறுப்பை பூரி ஜென்நாத் ஏற்றுக் கொண்டார். அதனால் பெரும் சம்பளமும் பேசியிருக்கிறார். இப்படி அடுத்தவர் பணத்தில் உருவாகும் படத்தில் ஆத்மார்த்த தோழிக்காக திரைக்கதையை மாற்றுகிறார் என்றால் பணம் போட்டவர்கள் பதறத்தானே செய்வார்கள்.
ஆனால், சார்மியுடனான நட்பில் இந்த கான்ட்ரவர்ஸியை காலில் தேயத்துவிட்டு திரைக்கதையை மாற்றி வருகிறார் பூரி.
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்.......
எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு சரோஜாதேவி கோரிக்கை
மழை வெள்ளத்தில் சாதாரண மக்கள் மட்டுமின்றி எம்.ஜி.ஆரின் வீடும் அவர் பயன்படுத்திய பொருள்களும் நாசமடைந்தன. அது பற்றி ஆளும் கட்சி கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ஓட்டு கேட்கும் நேரத்தில் எம்.ஜி.ஆர். பெயரை உச்சரிப்பதோடு அதிமுக தலைமையின் எம்.ஜி.ஆர். விசுவாசம் முடிந்துவிடும். இது சரோஜாதேவிக்கும் தெரிந்திருக்கிறது. அரசைவிடுத்து, எம்.ஜி.ஆர். ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார் சரோஜாதேவி.
"சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்பட பல நகரங்கள் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்குள்ளானதை அறிந்து மிகுந்த வேதனைக்குள்ளானேன். தமிழ்நாடு எனக்கு புகுந்த வீடு மாதிரி. எனவே மழை வெள்ள சேதத்துக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய முடிவு செய்து இருக்கிறேன். வருகிற ஜனவரி 6-ந் தேதி இதற்காக நான் சென்னை வருகிறேன்.
வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்க முடிவு செய்து இருக்கிறேன். சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில், எம்.ஜி.ஆர். வீடு பாதிக்கப்பட்டிருப்பதையும், அவர் பயன்படுத்திய பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதையும் அறிந்து மிகுந்த வேதனைப்பட்டேன். அழுகையாக வந்தது. மனிதராக பிறந்து தெய்வமாக போனவர், அவர்.
அவருடைய வீட்டில் உட்கார்ந்து நான் சாப்பிட்டு இருக்கிறேன். எம்.ஜி.ஆர். வீட்டை அவருடைய ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் போதும். அவர் வாழ்ந்த இடத்தை சோலையாக மாற்றி விடலாம்" என
பத்திரிகை ஒன்றிற்கு அவர் பேட்டியளித்துள்ளார்.
எம்.ஜி.ஆருக்கு வந்த நிலைமையை பாருங்கள்.