Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினி பாப்கார்ன் - பாலா, பாரதிராஜா பனிப்போர்

சினி பாப்கார்ன் - பாலா, பாரதிராஜா பனிப்போர்

Advertiesment
சினி பாப்கார்ன்
நடிகை என்ன தந்தூரி சிக்கனா?


 
 
இந்திப்பட பாடல் காட்சிகளில் நாயகிகள் காட்டும் தாராளத்தைக் கண்டு சன்னி லியோன் போன்றவர்களே வாயடைத்துப் போவார்கள். மேலேயும், கீழேயும் இரண்டு ரிப்பன் இருந்தாலே போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டது, நாயகிகளின் காஸ்ட்யூம். 
 
இந்திப் படங்களில் நடித்துவரும் ஷபனா ஆஸ்மிக்கே இந்த கஞ்சத்தனம் பிடிக்கவில்லை. இதெல்லாம் கிளாமர் கிடையாது, ஆபாசம் என்று வறுத்தெடுத்துள்ளார். சமீபத்தில் ஒரு பாடல் காட்சியைப் பார்த்தேன். நான் தந்தூரி சிக்கன் என்று ஒரு நடிகை ஆபாச உடையில் ஆடிக்கொண்டிருந்தார். 
 
இதெல்லாம் என்ன? என்று சாடியிருந்தார். கிளாமருக்கும் ஆபாசத்துக்கும் சின்ன கோடுதான் வித்தியாசம் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
ஷபனா ஆஸ்மியின் கருத்துக்கு இந்தி நடிகைகள் யாரும் செவி சாய்ப்பதாக இல்லை. காரணம்...?
 
எவ்வளவுக்கு எவ்வளவு காஸ்ட்யூமை குறைக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு கரன்சி அதிகம் கிடைக்கும். 
 
எப்படி காஸ்ட்யூமை அதிகப்படுத்த மனசு வரும்?
 
எனக்கு கணவராக வருகிறவர்...
 
உங்களுக்கு கணவராக வருகிறவர் எப்படியிருக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளிக்காத நடிகைகள் இந்திய சினிமாவில் இருக்க வாய்ப்பில்லை. 
 
இப்போதெல்லாம், கேள்வியை கேட்காமலே விவரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். பெண்கள் முன்னேற்றம், பெண்கள் விடுதலை என்று அவ்வப்போது கோபம் காட்டும் அனுஷ்காவும், கேட்காமலே தனது வருங்கால கணவர் குறித்து கூறியுள்ளார். அவரது கர்ஜனை இதோ - 
 
"சில பெற்றோர்கள் தங்கள் மகளை வீட்டு வாசலில் நிற்க கூட அனுமதிப்பது இல்லை. தனியாக வெளியே போய் வரவும் விடமாட்டார்கள். 
 
அப்படிப்பட்ட பெண்களுக்கு எப்படி தைரியம் வரும். எப்படி அவர்கள் முன்னேற முடியும். பெற்றோரிடம் நான் கேட்பதெல்லாம் பெண்களை சுதந்திரமாக விடுங்கள். அவர்கள் விரும்பிய துறைகளில் ஈடுபட அனுமதியுங்கள்.
 
"உங்களுடைய விருப்பங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். பெண்களுக்கு பிடித்ததை செய்ய விடுங்கள். எப்படி வாழ வேண்டும் என்பது அவரவர் விருப்பம். விருப்பம்போல் வாழ விடுங்கள். அதை செய்யாதே. இதை செய்யாதே என்று பெண்களை கட்டுப்படுத்தக்கூடாது. எனக்கு இதுபோன்று கட்டுப்பாடு விதிப்பவர்கள் மத்தியில் இருந்தால் மூச்சே நின்று விடுவதுபோல் ஆகிவிடும். எனவே அப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகிப்போய் விடுவேன்.
 
"நான் ஒரு நடிகை. எனக்கு கணவராக வருபவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அவர் சினிமாவை நேசிக்க வேண்டும். 
 
எனது நடிப்பையும் கவுரவிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சமீபத்திய பேட்டியொன்றில் பொரிந்திருக்கிறார்.
 
நீங்கள் எதையும் தாங்கும் இதையும் உள்ளவரா...? அப்படியானால் அனுஷ்காவுக்கு ஒரு அப்ளிகேஷன் போட்டு வைங்க.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்க.......
webdunia

 


பாரதிராஜா, பாலா பனிப்போர்
 
குற்றம்பரம்பரை கதையை படமாக்க வேண்டும் என்பது பாரதிராஜாவின் வாழ்நாள் கனவு. இமயத்தின் கனவு என்பதால் அந்தப் பக்கம் இதுவரை யாரும் எட்டிப் பார்த்ததில்லை. ஆனால், பாலா பூமியில் உள்ள எதையும் மதிக்காதவர். குற்றம்பரம்பரையை கையில் எடுத்தால், தன்னுடைய கொலவெறியையும் படத்தில் காட்டலாம், நல்ல படம் என்ற விமர்சனத்தையும் சம்பாதிக்கலாம் என்ற நோக்கில் குற்றப்பரம்பரையை படமாக்க முன்வந்துள்ளார். நடிகர்கள் தேர்வும் நடக்கிறது.
 
வாழ்நாளெல்லாம் செலவளித்து பழுக்க வைத்த கனியை இன்னொருவர் தட்டிப் பறித்தால் எப்படியிருக்கும்? 
 
குற்றம்பரம்பரையை கைவிடும்படி பாலாவின் காதுக்கு போகும்படி கொஞ்சம் கடுமையாக வேண்டுகோள் வைத்திருக்கிறார் பாரதிராஜா. ஆனால், பாலா எதையும் கண்டு கொள்வதாகயில்லை. இருவருமே தேவர் சாதி என்பதால் இதில் எந்தப் பக்கம் சாய்வது என்று சம்பந்தப்பட்ட சாதியினரும் கையை பிசைந்து நிற்பதாக கேள்வி. 
 
இன்றைய சாதிவெறி காலத்தில் குற்றம்பரம்பரையை கைவிடுவதே தமிழகத்துக்கே சிறந்த முடிவாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil