Publish Date: Wed, 10 Feb 2016 (11:18 IST)
Updated Date: Sun, 18 Dec 2016 (12:07 IST)
5. ஆக்ஷன் ஹீரோ பிஜு
நிவின் பாலி நடித்துள்ள ஆக்ஷன் ஹீரோ பிஜு சென்ற வாரம் வெளியானது. சென்னையில் இப்படம் முதல் மூன்று தினங்களில் 9.03 லட்சங்களை வசூலித்துள்ளது.
4. விசாரணை
விமர்சகர்கள் கொண்டாடும் வெற்றிமாறனின் விசாரணையும் சென்ற வாரமே வெளியானது. முதல் மூன்று தினங்களில் இப்படம் 39 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தில் உள்ளது.
3. பெங்களூர் நாட்கள்
மலையாளப் படம் பெங்களூர் டேய்ஸின் தழுவலான இப்படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல், 56.70 லட்சங்கள்.
2. இறுதிச்சுற்று
அதே இரண்டாவது இடத்தில் உள்ளது இறுதிச்சுற்று. சென்ற வார இறுதியில் இப்படம் 60 லட்சங்களை வசூலித்துள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் வசூல், 1.96 கோடி.
அதே முதலிடத்தை அரண்மனை 2 தக்க வைத்துக் கொண்டுள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 65.90 லட்சங்கள். இதுவரை சென்னையில் மட்டும் 2.35 கோடிகளை வசூலித்துள்ளது.