Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அகோரியாக அஜித் - இணயத்தில் வைரலாகி வரும் புகைப்படம்!

Advertiesment
அகோரியாக அஜித் - இணயத்தில் வைரலாகி வரும் புகைப்படம்!
, செவ்வாய், 22 அக்டோபர் 2019 (15:59 IST)
தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் ஹீரோவாக இருந்து வரும் அஜித் தனது திரைப்பயணத்தில் பல்வேறு நல்ல படங்களின் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அந்த லிஸ்டில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து வெளிவந்த நான் கடவுள் படத்தின் முதலில் அஜித் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு நாள் இந்த படத்தில் தான் நீக்க படுவோம் என்று அஜித் கேள்விப்பட்டு மனமுடைந்து விட்டாராம். 


 
இந்த படத்திற்காக அஜித்திற்கு அட்வான்ஸாக 1 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்து நீண்ட முடியை வளர்ந்திருந்தார். ஆனால் தொழில் ரீதியாக இருவருக்கும் ஏற்பட்ட முரண்பாடுகளால் இந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் அஜித்திற்கு கொடுத்த அந்த அட்வான்ஸ் தொகை 1 கோடி ரூபாயை வட்டியுடன் திருப்பி தரவேண்டும் என்று பாலா நிபந்தனை விதித்துள்ளார். பின்னர் அஜித் வட்டியுடன் தரவேண்டும் அவ்வளவு தானே என்று கூறி அவர் கேட்ட மொத்த பணத்தையும் திருப்பி கொடுத்து விட்டார். பின்னர் இவர்கள் இருவரும் சேர்ந்து இதுவரை எந்த படமும் செய்யவில்லை. 
 
பின்னர் அஜித் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யாவை வைத்து பாலா படமெடுத்து முடித்தார். இது குறித்து பேட்டி ஒன்றில் கூறியிருந்த இயக்குனர் பாலா, எங்களுக்குள் நடந்த இந்த பிரச்னை பிரபலம் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு என்னை ஒரு ரவுடி போல் சித்தரித்து விட்டனர். அஜித் விஷயத்திலும் தவறு என் மீதுதான். அஜித் என்னை விட நல்லவர் என்று சொல்வதைவிட அஜித் அளவிற்கு நான் நல்லவன் இல்லை என்று சொல்லலாம். அது தான் சரி என்று கூறியிருந்தார். அதேபோல அஜித்தை வைத்து படம் எடுப்பீர்களா என்று பாலாவிடம் ஒரு சமயத்தில் கேட்கப்பட்டபோது, இருவரும் இணைவதற்கு இரண்டு முறை முயற்சி செய்தும் நடக்கவில்லை நடக்கும் என்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்துவிடும். யார் கண்டது என்று கூறியபடி சிரித்துள்ளார் பாலா. 

webdunia

 
இந்த நிலையில் தற்போது நான் கடவுள் படத்திற்காக அஜித் எடுத்துக்கொண்ட சில புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லட்சணமான அழகில் ஜொலிக்கும் பிரநிதா சுபாஷ்!