Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித்தை விமர்சித்த கருணாஸ் - குற்றம் நடந்தது என்ன?

Advertiesment
அஜித்
நடிகர் கருணாஸின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான ஒரு செய்தி ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.


 
 
வெளிநாட்டில் கலைநிகழ்ச்சிகள் நடத்தினால், அஜித்தை அழைக்கப் போவதில்லை என்றும், அஜித் வீட்டு வாசல்படியை ஒருபோதும் மிதிக்கக் கூடாது எனவும் அந்த செய்தியில் கருணாஸ் பெயரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
நடிகர் சங்க தேர்தலை முன்னிட்டு இரு அணிகளும் நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய நேரத்தில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணி அஜித்தை சந்திக்க முயன்றதாகவும், அவர் சந்திக்க மறுத்ததாகவும் ஒரு தகவல் வெளியானது. சங்கத் தேர்தலில் அஜித் வாக்களிக்கவும் வரவில்லை.
 
அஜித் சந்திக்க மறுத்ததால், விஷால் அணியைச் சேர்ந்த - தற்போது துணைத்தலைவராக இருக்கும் கருணாஸ் இப்படியொரு ட்விட்டை செய்திருக்கிறார் என பேசப்பட்டது.
 
அஜித் ரசிகர்கள் கருணாஸுக்கு எதிராக இணையத்தில்வசைமாரி பொழிந்தனர். தற்போதைய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு எதிரான நிலையை அஜித் எடுத்திருப்பதான தோற்றம் முன்வைக்கப்பட்டது.
 
அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்து செல்ல வேண்டிய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான அனுபவமாக அமைந்தது. 
 
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியான செய்தி தன்னுடையதில்லை, யாரோ விஷமிகள் இந்த வேலையை செய்துள்ளனர் என..
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க..

கருணாஸ் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
புதிய நிர்வாகிகள் தந்த அழுத்தம் காரணமாகவே கருணாஸ் இப்படியொரு அறிக்கை வெளியிட்டுள்ளார், அஜித்தை விமர்சித்தது அவர்தான் என அஜித் ரசிகர்கள் இன்னும் கோபம் தணியாமல் உள்ளனர்.
 
கருணாஸ் தனது அறிக்கையில், கமிஷனரிடம் இதுகுறித்து முறையாக புகார் செய்யவிருப்பதாக கூறியுள்ளார். இது, அவர் குற்றமற்றவர், அவர் சொல்வதுபோல் யாரோ விஷயமிகள் செய்த வேலையிது என்று நம்ப வைக்கிறது.
 
கமிஷனரிடம் கருணாஸ் புகார் தந்தபின், போலீஸ் எடுக்கும் நடவடிக்கையில் உண்மை தெரியவரலாம். அதற்குள், தங்கள் கற்பனை திறனை வைத்து புதிய நிர்வாகிகளுக்கும் அஜித் மற்றும் அவரது ரசிகர்களுக்குமிடையே வெறுப்பை ஊடகங்களும் தனிநபர்களும் உருவாக்காமல் இருக்க வேண்டும்.
 
கருணாஸின் விளக்க அறிக்கை கீழே.

webdunia

 

Share this Story:

Follow Webdunia tamil