Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துர்காஷ்டமி வழிபாடு பெற்று தரும் பலன்கள்.....!!

துர்காஷ்டமி வழிபாடு பெற்று தரும் பலன்கள்.....!!
நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் அம்பிகையை பூஜிக்க வேண்டும். அதிலும் முக்கியமாக அஷ்டமியன்று கட்டாயம் வழிபட வேண்டும். துர்காஷ்டமி  என்றே அந்நாளுக்கு பெயர். இந்நாளில் துர்க்கையை வழிபட்டால் அனைத்து பலன்களையும் பெறலாம்.

புரட்டாசி மாதம் நவராத்திரியின் எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதி, மகா அஷ்டமி அல்லது துர்காஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. மறுநாள் வரும் நவமி,  மகா நவமியாகப் போற்றப்படுகிறது. துர்கையை வழிபட ஏற்ற தினம் துர்காஷ்டமியாகும்.
 
ராகு காலத்தில் ராகு தோஷம் நீங்க பெண்கள் கோவில்களில் துர்க்கை அம்மனுக்கு, நெய், மற்றும் எலுமிச்சை விளக்கு போடுவது வழக்கம். இதன் மூலம் ராகுவினால் ஏற்படும், திருமணத்தடை, குழந்தையின்மை நீங்குவதாக ஐதீகம்.
 
சாதாரண நாட்களிலே துர்க்கை அம்மன் தன்னுடைய அருளை வாரி வழங்கும்போது அவளுக்கென்று வரும் நவராத்திரியில் ஒரு நாளில் அருளை வாரி வாரி வழங்குவாள் என்பது ஐதீகம்.
 
நவராத்திரி எட்டாம் நாளை துர்க்கைக்குரிய நாளாக கருதி வழிபடுகின்றனர். இந்த நாளன்று துர்க்கை அம்மனுக்குரிய மந்திரங்கள் சொல்லி மனமுருக வழிபட்டால் நிச்சயமாக பரிபூரண வாழ்வை நமக்கு துர்க்கை அருள்வாள் என்பது நம்பிக்கை. துர்க்கைக்குரிய எட்டாம் நாள் நவராத்திரியையே நாம் துர்காஷ்டமி என்கிறோம்.  நாளை துர்காஷ்டமி நாளாகும்.
 
அன்னை துர்கா, தன் பக்தர்களுக்கு துன்பம் வராமல், அரண் போல் நின்று பாதுகாக்கிறாள். இன்று மாலையில் துர்கையாக பாவித்து அனைத்து கோயில்களில் உள்ள அம்பிகையை வணங்கலாம். கோயில்களில் துர்கையை எலுமிச்சம் பழ தோலில் தீபமேற்றி வழிபட துர்கையின் அருள் அரண்போல் காக்கும்.
 
துர்காஷ்டமி நாளில், ராகுகால வேளையில் ஆலயங்களில் உள்ள துர்கை அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதால் நமக்கு எல்லா சக்தியும் கிடைக்கும்.

திருஷ்டி போவது குறிப்பாக கண் திருஷ்டி, ஓமல் அதெல்லாம் போய்விடும். மேலும் சிலர் பில்லி, சூனியம்  என்றெல்லாம் சொல்லுவாங்க அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் துர்காஷ்டமியில் துர்கையை வழிபாடு செய்வதால் போய்விடும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திறக்கப்பட்ட திருமலை திருப்பதியின் புதிய அலங்காரங்கள்: வீடியோ!