Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்த பொருட்களை கொண்டு சாம்பிராணி போடுவது நல்லது...?

எந்த பொருட்களை கொண்டு சாம்பிராணி போடுவது நல்லது...?
சாம்பிராணி போடுவது வீட்டில் ஹோமம் செய்வதற்கு நிகரான ஒன்றாகும். ஹோமம் செய்வதால் ஏற்படும் அனைத்து நன்மைகளும் சாம்பிராணி போடுவதின்  மூலம் கிடைத்து விடும்.

வீட்டில் சாம்பிராணி போடுவதால்  வீட்டில் உள்ள கெட்ட சக்திகளின் ஆதிக்கம் குறைந்து தெய்வ கடாட்சம் நிறைந்து காணப்படும். சாம்பிராணி தினமும் போட முடியவில்லை என்றாலும் வாரத்தில் இரண்டு முறை அதாவது செவ்வாய், வெள்ளி போன்ற மங்கள நாட்களில் சாம்பிராணி போடுவதின் மூலம் மகாலட்சுமி நம்  வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வாள்.
 
சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.
 
சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.
 
சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வ அருள் நிலைத்திருக்கும்.
 
சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
 
சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.
 
சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டு தூபமிட காரியசித்தி உண்டாகும்.
 
சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
 
சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை விலகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டில் எந்தெந்த நாட்களில் தூபம் போடுவதால் என்ன நன்மைகள்...?