Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கை வழிபாட்டில் சூரியனுக்கே முதல் வழிபாடு ஏன்...?

Webdunia
ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாகவும், யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்றும், அதர்வண வேதம் சூரியனை  வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து விடுபடுவர். 

சூரியன் காலையில் ரிக் வேத சொரூபியாகவும் மதியத்தில் யஜுர் வேத சொரூபியாகவும் மாலை வேளையில் சாம வேத சொரூபியாகவும் திகழ்கிறான். 
 
"ஆதித்யானாம் அஹம் விஷ்ணு" என்கிறார் பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர். இதன் அர்த்தம் "நானே சூரியனாகத் திகழ்கிறேன்" என்பதாகும். 
 
ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒவ்வொரு நிறத்தில் காட்சி தருகிறார். வசந்த காலத்தில் தங்க நிறத்திலும், வெயில் காலத்தில் செண்பகப்பூ நிறத்திலும், மழைக்காலத்தில் வெண்மை நிறத்திலும், கார்காலத்தில் கருமை நிறத்திலும், முன்பனிக் காலத்தில், தாமரை நிறத்திலும், பின்பனிக் காலத்தில் சிவப்பு நிறத்திலும் விளங்குவதாக வேதங் கள் கூறுகின்றன.
 
சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய "காலம்" என்ற ஒற்றைச் சக்கர தேரில் பவனி வருபவராக புராணங்கள் கூறுகின்றன. இந்த ரதத்தை ரதசப்தமியன்று விஷ்ணு  சூரியனுக்கு அளித்தார். ரத சாரதியாக காசியப முனிவரின் மகனான அருணன் விளங்குகிறார். இவருக்கு இடுப்புக்குக் கீழே அங்கங்கள் கிடையாது. வைரோஜன  யோகத்தில் ரதத்தைச் செலுத்தி, சூரிய பகவானுக்கு உறுதுணையாக இருக்கிறார். 
 
சூரிய ரதத்தின் ஏழு குதிரைகளை காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்கிதி என்று அழைப்பர். இவை, வாரத்தின் ஏழு நாட்களைக்  குறிக்கின்றன.
 
ஸ்ரீ மகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கு சங்கும், சக்கரமும் உண்டு. அதனால் வைஷ் ணவர்கள் சூரியனை "சூரியநாராயணன்" என்று போற்றுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments